உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

முதல் வகுப்பு

-

களம் காடு

அரசன் பாகனுடன் தேரில் அமர்ந்து கையில் வில்லுங் கணையும் ஏந்திப் புள்ளிமான் ஒன்றைப் பின் தொடர்கின்றான்

தேர்ப்பாகன் (புள்ளிமானையும் அரசனையும் நோக்கி)வேந்தே நீடுவாழ்க! நான் அக் கரிய புள்ளிமானையும் பார்த்துப் பின் நாண் ஏற்றிய வில்லேந்து நிலையி தங்களையும் நோக்குகையிற், பினாகமென்னும் வில் ஏந்திக் கட்புலனாம் வடிவுடன் தொடர்ந்து செல்லுஞ்

மானைத்

சிவபெருமானையே காண்கின்றேன்.

அரசன் : ஓ பாக! இம் மானினால் நாம் நெடுந்தொலைவில் இழுக்கப்பட்டு வந்துவிட்டோமே. இன்னும் இப்பொழுது இடையிடையே தன் கழுத்தை அழகாக வளைத்துத் திருப்பித் திருப்பிப் பின்றொடரும் நமது தேரினைப் பின்நோக்குகின்றது; அம்பு மேல்வந்துவிழுமோ என்னும் அச்சத்தால் தன் முன்கழுத்தைச் சுருங்க உள்ளிழுத்துக் கொண்டு, நெகிழுந் தன்மையுள்ள தன் பின் தொடைகளைப் பரப்புகின்றது; களைப்பினால் திறந்த தன் வாயினின்றுந் தான் பாதி கறித்த புல்லை வழியெங்குஞ் சிந்திக்கொண்டு செல்கின்றது. உயரத் துள்ளுகின்றதனால், நிலத்திலன்றி இடைவெளியிலேயே அது மிகுதியும் பறந்தோடுவதைப் பார்! (வியப்புடன்) நான் அதனை நெருங்கிப் பின்றொடர்ந்து வந்தும், அஃது என்

பார்வைக்குக்கூட எட்டவில்லையே?

தேர்ப்பாகன் :

நீடுவாழ்க! நிலங் கரடுமுருடாய் இருக்கின்றமையாற், கடிவாளத்தை இழுத்துப்பிடித்துத் தேரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/43&oldid=1577098" இலிருந்து மீள்விக்கப்பட்டது