52
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
போற்றவேண்டும் அன்றோ! இதுதானே நன்றியுணர்வின் முதற்படி! வற்றாச் செல்வம் தந்த வள்ளலைப் பாராட்டாதவன், சிற்றுதவிகளைச் சிந்தையில் கொள்வானோ?
பேருள்ளமும் நல்லறிவும் ஒருங்கு அமைந்தவர்கள் சாலையைப் பாராட்டுவார்; சாலை அமைக்கத் தூண்டியவர் களைப் பாராட்டுவர்; சாலைக்குச் சரளை உடைத்தவனை, மண் கொணர்ந்தவனை, நீர் எடுத்தவனைப் பாராட்டுவர். இது போலவே, கிணறு வெட்டியவனை, குளம் தோண்டியவனை. அணைகட்டியவனை, ஆலயம் நாட்டியவனை செய்தவர்களைப் புகழ்வர். இவர்களை நினையும் பெருந்தகைமை ருக்க வேண்டுவது மனிதப் பண்பாடு ஆகவும் நெஞ்சார நி னையாதவர்களை, நாவார வாழ்த்தாதவர்களை, எந்தக் கூட்டத்துள் வைப்பது?
துணை
ஊருக்குப் பொதுவாகச் செய்த நலங்களை, காட்டுக்குப் பொதுவாகச் செய்த நலப்பெருஞ் செயல்களை உணரத் தவறினாலும், தமக்கென்றே ஒருவன் செய்த நன்மையை மறக்கலாமா?
ஒரு கவளம் சோறின்றிச் சாவக் கிடக்கும் வேளையிலே, ஒரு மிடறு நீரின்றி மடியக் கிடக்கும் பொழுதிலே ஓடிவந்து உதவியவனை மறக்கலாமா?
கொலைஞர்கள் இடையிலே அகப்பட்டுச் சாவ இருக்கும் ஒருவனைக் காலத்தால் வந்து காப்பாற்றிய ஒரு பெரியனை ஆருயிர் உள்ளவரை மறக்கலாமா?
இவற்றையும் மறந்து விடுபவர்களை மனித இனத்தில் வைத்துப் பேச முடியுமா? நாயினும் இழிவுடையவர் இவரே!
இறைவன் பேரருளால் செய்யும் பெருநலங்களை உணர்ந்து அறியும் பேறு இல்லாமல் சிலர் போகலாம். குற்றந்தான்; என்றாலும், பொறுக்கத்தக்கதேயாம்.
மன்பதை நலமெய்துமாறு பொதுவாகச் செய்த நலங் களை நினைக்க ஒருவன் தவறலாம். அதனையும் மன்னிக்கலாம்; ஆழ்ந்த சிந்தனையும் அதன் வழிச் செல்லாமையும் கருதி!
தனக்கென்றே பயன் எதுவும் கருதாமல் உரிய இடத்தில் - அரிய காலத்தால் -செய்த உதவிகளை மறந்தவனை எப்படி மன்னிக்க முடியும்? அவனை மன்னிப்பது உலக நலங்களை உலைவைப்பதாக ஆகுமே!