உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

135

பெண்டிர்:

ன்

1. அரசி: ஸிம்பலின் இரண்டாம் மனைவி - கிளாட்டென் தாய் கொடியவள்.

2. இமொஜென்: ஸிம்பலினுக்கு முதல் மனைவியிடம் பிறந்த புதல்வி - கிடரியஸி அர்விராகஸின் தமக்கை.

மாற்றுரு- ஆண் - பிடேலே.

கதைச் சுருக்கம்

பிரிட்டனின் அரசன் ஸிம்பிலினுடைய முதல் மனைவி இறந்தபின் அவன் வேறு மணம் செய்துகொண்டான். முதல் மனைவியால் இமொஜென் என்ற மகளும் கிடரியஸ் அர்விராக்ஸ் என்ற இரு புதல்வரும் இருந்தனர். அரசனிடம் பகைமை கொண்ட பெலாரியஸ் என்ற வீரப் பெருமகன் அவர்களைக் கவர்ந்து காடு சென்று ஒரு குகையில் பாலிடோர் கசாட்வெல் என்ற பெயர்களுடன் அவர்களை வளர்த்து வந்தான்.

அரசி அரசனை மணக்கு முன்னுள்ள தன் மகனாகிய கிளாட்டெனுக்கு இமொஜெனை மணந்து அரசுரிமையைப் பெற எண்ணினாள். ஆனால் இறந்துபோன ஒரு வீரன் மகனும் ஸிம்பலினால் எடுத்து வளர்க்கப் பட்டவனுமான பாஸ்துமஸை அவள் காதலித்து மறைவில் மணஞ்செய்து கொண்டாள். இதனை அறிந்த அரசி பாஸ்துமஸை நாடு கடத்தினாள்.

பாஸ்துமஸ் இத்தாலி நாடு சென்று இன்ப வாழ்விலீடுபட்ட நண்பர்களுடன் காலங்கழித்தான். அவர்களில் ஒருவனாகிய அயாக்கியமோ என்ற தீயவன் அவன் நாவைக் கிளறித் தன் மனைவியின் கற்புடமை மீது ஆயிரம் பொன் பந்தயம் வைக்கத் தூண்டினான். இமொஜெனைக் கண்டதும் நம்பிக்கையற்றது. ஆனால் வஞ்சகமாய்ப் பாதுகாப்புக்காக அவளறையில் வைக்கச் சொன்ன பெட்டகத்திலுட்கார்ந்து உடற்குறி முதலிய மறை செய்திகளறிந்து கைவளையும் கவர்ந்து இவற்றால் பாஸ்துமஸ் தன் பொய்யை நம்பவைத்துப் பந்தயத்தையும் இமொஜென் கணையாழியையும் பெற்றான்.

பாஸ்துமஸ் இதனால் பித்துக்கொண்டு அரண்மனை வேலையாளான பிஸானியோ என்ற

தன்

உண்மை