உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

129

விளக்கம் : இவ்வூர்ப் பகவதி கோவிலில், முல்லை மங்கலத்துத் தரணிதரன் என்னும் தாமோதரன் திருப்பணிகள் செய்து கொல்லம் ண்டு 798-இல் (கி.பி. 1623-இல்) காலஞ்சென்றதை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

எத்திசையும் புகழ்பெறவே மருவு கொல்லம்

எழுநூற்றுத் தொண்ணூற்றோ டெட்டா மாண்டில் ஒத்துவளர் பங்குனி நாலாறோ டொன்றில்

லொத்துநிற்குங் கார்த்திகைமுன் மூன்றாம் பக்கம் சத்திய வாசகன் முல்ல மங்கலத்து

தரணிதர னெனும் தாமோதர னன்பாக பக்தியினால் திருப்பணிகள் பலவும் செய்தே பரலோகமடைந்து அரன்பொற் பாதம்பெற்றானே.

இராசகண்ட கோபாலன்

இடம் : சித்தூர் மாவட்டம், திருமலை திருப்பதியில் உள்ள மேளம் மண்டபத்தின் தெற்குப்புறச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : திருப்பதி தேவஸ்தானத்துச் சாசனங்கள்: எண் 80. (No. 80. T. D. I. Vol. I. )

விளக்கம் : இராசகண்ட கோபாலன் என்னும் சிற்றரசனின் கைவண்மையைப் புகழ்கிறது இச் சாசனச் செய்யுள். இராசகண்ட கோபாலன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தொண்டை நாட்டின் வடபகுதியை அரசாண்டான்.

சாசனச் செய்யுள்

எத்தலமும் ஏத்து மிராசகண்ட கோபாலன்

கைத்தலத்தின் கீழோர்க் கையில்லை - இத்தலத்தி லுண்ணாதா ரில்லைஇவன் சோறுணு மிவன்புகழை

எண்ணாதா ரில்லை யினி.