உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை தாய் தந்தையரையும் வியந்து தனக்குள்ளேயே கொண்டதாகக்' கொள்க. 9. வருந்தாது செல்வாயாக! கூறிக் பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை. துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலை மகட்கு உரைத்தது. [(து . வி.) தலைமகனுடன். தலைமகள் போகத் துணிந்து விட, அவனும் அவளை அழைத்துச் செல்லுகின்றான். அவர் வழியினைக் கடந்து போகும் வேளையிலே, அவன் அவளுக்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.] கள் அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கணகண் டாங்கு அலமரல் வருத்தம் தீர, யாழ நின் நலமென் பணைத்தோள் எய்தினம்: ஆகலின் பொரிப்பூம் புன்கின் அழற்றழை ஒண்முறி சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி நிழற்காண் தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே! மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறுந்தண் பொழில, கானம்; குறும்பல் லூர யாம் செல்லும் ஆறே. 10 வெண்மையான பற்களை உடையாளே! இனி நாம் செல்லுதற்குரித்தான காட்டு வழியெல்லாம், மாவினது அரும்பைக் கோதியவாறு மகிழ்ச்சியுறுகின்ற குயிலினங்கள் கூவிக் களிக்கும், நறிய தண்மைவாய்ந்த சோலைகளை உடையன; அல்லாமலும், வழியினை ஒட்டியபடியே, பலப் பல சிற்றூர்களையும் கொண்டிருப்பன. நெஞ்சுரத்தின்கண் என்றும் அழிவில்லாதவராய், உயரிய செயலினைச் செய்கின்றவரான மாந்தர், தாம் அது குறித்து வழிபட்டுப் போற்றும் தெய்வத்தினைத் தம்முடைய கண்ணெதிரேயே தோன்றக்கண்டாற் கொள்ளும் மகிழ்ச்சி யைப் போல, யாம் நின்னை அடைதற்கு முயன்றதனால் உண்டான சுழற்சியுடைய வருத்தமெல்லாம் தீரும்படியாக, நற் -2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/26&oldid=1626522" இலிருந்து மீள்விக்கப்பட்டது