உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

55


26. துணையாகிய தவறு!


பாடியவர் : சாத்தந்தையார். திணை : பாலை. துறை: தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவு அழுங்குவித்தது.

[ (து-வி.) ‘நீயிர் பிரிகின்றீர்' என்றதைக் கேட்டலுமே இத் தன்மையினளாக வேறுபட்ட நும் தலைவியானவள், நீயிர் வினைமுடித்து வருங்காலம் வரையினும் எங்ஙனம் ஆற்றியிருப்பாளோ? எனத் தோழி கவலையுடன் கூறுகின் றாள். இதனால், அவனது செலவைத் தடுக்க முயல்வாளா தலும் அறியப்படும்.]

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை

விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய்மனை ஒழியச் சுடர்முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய். முடமுதிர் பலவின் அத்தம், நும்மொடு கெடுதுணை ஆகிய தவறோ?- வை எயிற்றுப் பொன்பொதிந் தன்ன சுணங்கின்

இருஞ்சூழ் ஓதி, பெருந்தோ ளாட்கே.

5

மலை

தலைவனே! செம்மண் சேர்த்தியவும், புள்ளியிடப்பெற் றவும், வெள்ளிய அடிப்பாகத்தை உடையவுமாகி, போன்ற உயரமும் உடையவாய், அடுக்கிய நிலையமைந்த வான, நெடிய நெற்கூடுகளிலே நிறைந்திருக்கும் நெல்லைக் கொண்டது, இவளது தாய் மனை. அதனைக் கைவிட்டு, ஆதித்தன் தன் வெம்மை முற்றவும் தாக்குமாறு எறித்த லாலே வாட்டமுற்றுச் செழுமையான காய்களைக் கொண்ட முடப்பலா மரங்களும் வாடிப்போயிருக்கும் காட்டுவழியிலே நும்மோடும் உறுதுணையாகி வந்தாளும் இவள். கூர்மை யான பற்களையும், பொன் பொதிந்தாற்போல் விளங்கும் தேமற்புள்ளிகளையும், நெருங்கிய சுருமையான கூந்தலையும், பெருத்த தோள்களையும் உடையாளாகிய இவளுக்கு, நும் பிரிவைக் கேட்டலுமே, வளைகள் நெகிழ்ந்து சோர்ந்தன. இதுதான், நும்மொடு கெடுதுணையாகிய தன் தவறினாலே இவளுக்கு உண்டானதாகுமோ? அதனை எண்ணியே யான் நோகின்றேன்!

கருத்து: 'பிரியின் இவள் இறந்துபடுவாள்' என்பதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/56&oldid=1627178" இலிருந்து மீள்விக்கப்பட்டது