உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

57


தோம். அஃதன்றிப் பிறரை மறைத்தபடி களவாக நாம் செய்ததுதான் யாதொன்றுமில்லை. அங்ஙனமாகக் கரவாக நாம் செய்ததொன்றும் உண்டென்றால், அது வேளியே பரவி, அதனைப் பிறர் அறிந்துவைத்தனர் எனவும் எவருமிலர். பொய்கை தோறும் இறாமீனைப் பற்றித் தின்னும் கடற் பறவை இனங்கள் எழுந்து ஆரவாரிக்கச், சுறாமீனானது கழியிடத்தே சென்று சேர்ந்திருக்கின்ற அந்தப் பக்கத்திலே திரண்ட தண்டானது நீட்சியுடைத்தாகி, நுண்ணிய பலவாகிய சிறிய இலைகளையுடைய நெய்தல் நம் கண்களைப் போன்றவான மலர்களைப் பூத்திருக்கும். 'அதனைச் சென்று பறித்து வாருங்கள்' என்று நம் அன்னையும் கூறினாளல்லள் ஆதலாலே, அவள்தான் பெரி தாக எதனைக் கருதினள் போலும்?

கருத்து: 'அன்னை நும் களவுறவை அறிந்தனள்; இனி இற்செறிப்பே நிகழும்; 'ஆதலின் இவளை விரைந்து வந்து மணந்து கொள்க' என்பதாம்.

சொற்பொருள்: ஒழிதிரை - கரையிலே மோதி அழியும் அலைகள். கயம் - ஆழமான பொய்கை. கழியின் இடையே யுள்ள ஆழமிக்க இடங்களுமாம்.

விளக்கம் : 'நாளும் சென்று பறித்துச் சூடுக' என்பவ ளான அன்னை, இன்றுமட்டும் ஏனோ கூறினாள் அல்லள்? அதுதான் அவள் நம் களவை உணர்ந்ததனாலோ?" என்ற தாம். இதனைக் கேட்கும் தலைவன், 'இனி இவள் இற் செறிக்கப்படுவாள் GT SOT உணர்ந்து, விரைவிலேயே தலைவியை மணந்து கொள்வதிலே கருத்தைச் செலுத்து

செய்தது ஒன்றில்லை. நற்றுக் கானவாடியதன்றிக்

கரந்து

அன்று தலைவி சந்தித்துக் கூடியிருந்ததை மறைவாகச் சுட்டிக் கூறியது மாகும்.

உள்ளுறை : இறவார் இனக் குருகு ஒலிப்பச் சுறவங் கழிசேர் மருங்கு' என்றது, சேரிமகளிர் தலைவனது வரவைக் கண்டு அலர் தூற்றி ஆரவாரித்தனராக, அன்னையானவள், தலைவியை இறசெறிக்க முடிவு செய்தனள் என்பதாம்.

28. கள்வர் போலக் கொடியன்!

பாடியவர் : முதுகூற்றனார். திணை : பாலை. துறை: (1) பிரிவின்கண் ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது; (2) குறைநயப்பும் ஆம்.

ந.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/58&oldid=1627180" இலிருந்து மீள்விக்கப்பட்டது