உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

339


176. காதலள் என்னுமோ?

பாடியவர் :
திணை : குறிஞ்சி.
துறை : பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

[(து–வி) தலைவியால் பூப்பறிவிக்கப் பெற்ற தலைவன், உலகியலை நோக்கிப் பரத்தை வீட்டைவிட்டுத் தன் வீட்டிற்குச் செல்லுகின்றான். தலைவிக்கு அஞ்சித் தான் தலைவனை விடுத்ததாக ஊரார் தன்னைப் பழிப்பரெனப் பரத்தை கருதுகின்றாள். அதனால், தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர் கேட்டுத் தலைவியிடத்தே சொல்லுமாறு, தான், தன் தோழியாகிய விறலிக்குச் சொல்லுவாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]

எம்நயந்து உறைவி ஆயின் யாம்நயந்து
நல்கினம் விட்டதுஎன்? நலத்தோன் அவ்வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி!
நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப் 5
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள்
வாழையம் சிலம்பின் வம்புபடக் குவைஇ
யாழ்ஓர்த் தன்ன இன்குரல் இனவண்டு
அருவி முழவின் பாடொடு ஓராங்கு
மென்மெல் இசைக்கும் சாரல் 10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

தோழி! எம்மை நயந்து கொண்டவளாகத் தலைவியும் இருப்பவளாயினால் யாமும் அவளது நட்பினை விரும்பி, தலைவனை அவள்பாலும் சில நாட்கள் சென்று வருமாறுவிட்டதனாலே தவறு என்னையோ? நம்முடைய நலத்திற் கருத்தாயிருக்கும் அவனை, அவ்விடத்திற்கு நம்முடைய பெருந்தன்மையின் காரணமாக நாம் அளித்துதவியதன் உண்மையினை அறியாதாராய், ஊரார் 'அத் தலைவிக்கு அப் பரத்தைதானும் அன்பினளாயுள்ளாள்' என்றுஞ் சொல்லூவார்களோ?

வரிசைப்பட நிற்கின்ற யானையது முகத்திலே தோன்றும் செங்கோடுகளைப்போல அரும்புகள் பொதுயவிழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/340&oldid=1731816" இலிருந்து மீள்விக்கப்பட்டது