பாடிய சான்றோர்கள்
419
பிரான்சாத்தனார் 68
சாத்தனார் இவரது பெயர் 'பிரான்' என்பது தலைமை குறிக்கும் சொல். இற்செறிக்கப்பட்ட தலைவி கூறுவதாக 'இளையோர் இல்லிடத்திற் செறிந்திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்' என்று இவர் கூறுவது தமிழ் மக்களின் ஒழுக்கப் பண்பாட்டைக் காட்டும் சிறப்பினதாகும். 'பிரான்மலை' என்னும் ஊரைச் சேர்ந்தவராகவும் கருதலாம்.
பூதங் கண்ணனார் 140
பூங்கண்ணனார் எனவும் கூறுவர்; கண்ணனார் பலரினும் வேறுபடக் காட்டுதற் பொருட்டு முன்னே அடையிட்டுள்ளனர். கன்னியைக் கண்டு காதலுற்ற ஒரு காளை அவளை அடையப் பெறாதபோதும் அவளை அடைதற்கான முயற்சியைக் கைவிடானாய், 'என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிதில்லை யானுற்ற நோய்க்கே' எனத் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைத்திருக்கும் திறம் வியத்தற்குரியதாகும். இதே கருத்து வள்ளுவராலும் கூறப்பட்டிருப்பது இங்கே நினைத்தற்கு உரியதாகும்.
பூதன் தேவனார் 80
ஈழத்துப் பூதன் தேவனார் வேறு, இவர் வேறு என்பர். இவர் செய்ததாகக் குறுந்தொகையின் 285 ஆவது செய்யுளும் காணப்படும். 'தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்' என இவர் கன்னிப்பெண்கள் தைநோன்பு மேற்கொண்டு, தமக்கு நல்ல கணவரைத் தந்தருளுமாறு தெய்வத்தை வேண்டும் பண்டைக்கால மரபினை இச் செய்யுளுள் உரைத்துள்ளனர்.
பூதனார் 29
பெருங்கண்ணனார் 137
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் எனவும் விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் எனவும் இருவர் உளர். இவர்களிலும் இவர் வேறானவரென்பது அடைமொழி தரப்படாதது சொண்டு அறியப்பெறும் என்பார்கள், இவர் பாடியன குறுந்தொகை 289, 310ஆம் செய்யுட்களும், இச் செய்யுளும் ஆகும். 'வளர்பிறை போல