உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. எண்ணமும் நோக்கமும்

கருத்துச் செயலுருவாகி நிறைவெய்த வேண்டுமானால், அது கருத்தாக மட்டும் நின்றால் போதாது. கருத்துடன் நோக்கமும் இணைய வேண்டும். கருத்தையும் செயலையும் அறிவுடைக் கருத்தாகவும் அறிவுடைச் செயலாகவும் ஆக்குவது இந்நோக்கமே. மிகப் பெரும்பான்மையான மக்கள்

நோக்கமில்லாக் கருத்துடையவர்கள். வாழ்க்கையென்னும் அகன்ற கடற்பரப்பில் இத்தகைய கருத்து. மீகாமனும் பாயும் இல்லாது நெறியற்று மிதந்து தத்தளிக்கும் மரக்கலம்போல அலைக்கழிவடையும். அது செயல்நிறைவு என்னும் கரையில் பயன் என்னும் துறைசென்று சேர்வதரிது. மேலும் நெறியில்லாது எல்லையில்காலம் மிதக்கும் மரக்கலத்துக்குக் கடலில் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கு எல்லையிராது.அவற்றிலிருந்து விலக முயற்சி செய்யும் மீகாமனில்லாமல் அது அவற்றால் அழிவுறுதற்கே காத்திருக்க நேரும். நோக்கமற்ற கருத்தும்

துபோல நெறி கெட்டலைவதால், இடையூறுகளின் மீதே குருட்டுத்தனமாகத் திரியும். இதனால் வாழ்வின் தோல்வி களுக்குரிய காரணங்களுள் மிக முக்கியமானது நோக்க மில்லாமையே. அதனினும் பெரிய குற்றம் எதுவும் கிடையாது.

சிலரிடம் நோக்கங்கள் பலவாயிருக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தி ஆட்கொள்ளும் வாழ்க்கையின் தலை நோக்கம் இராது. மீகாமனில்லாது பாய்கள் மட்டும் உள்ள மரக்கலம்போல, அது வீசுகின்ற ஒவ்வொரு காற்றின் போக்கிலும் சென்று சீரழியும். நோக்கமில்லாத வாழ்வைவிட இவ்வாழ்வின் அலைக்கழிவு மிகப் பெரிது. மேலும் முன்னதைவிட அது பேரளவில் இடையூற்றுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஒரு நோக்கத்தை இன்னொரு நோக்கம் தடுத்துக் கெடுப்பதால், அவர்கள் வாழ்வு முழுவதிலும் பற்பல சின்னஞ்சிறு