உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அரபு,

மொழிப் போராட்டம்

லேயே பிறந்து வளர்ந்தமொழி என்ற காரணஞ் சொல்லப்படுமானால் இந்தியும், வெறும்புள்ளி விபரக்கணக்குக்காக அதோடு தொடர்புபடுத்திக் கூறப்படும் பல்வேறு வட இந்திய மொழிகளும் (அவற்றின் வரலாறுகள் பின்னர் விரித்துக்கூறப் படும்) (சமஸ்கிருதத்தின் சிதைவு மொழிகளுடன் பாரசீகச் சொற்கள் பலப்படையாகக் கலக்க, உண்டானவை. இந்தி மொழி ஆதரவாளர் களாலும், வட இந்திய இந்து தலைவர்களாலும், தேசிய வரலாற்றாசிரியர்களாலும், 'இந்தியாவின் உன்னத தேசிய கலாச்சாரத்தின் அடிப்படை' என்றெல்லாம் கூறப்படுகிற சமஸ்கிருதம் பிறந்தது வழங்கியது எல்லாம் இந்தியாவிற்கு வெளியில் தான். அது இந்தியாவிற்குள் எப்பொழுதாவது, எவ்விடத்திலாவது வழங்கப்பட்டதாகத் தெரிய வில்லை. எனவே சமஸ்கிருதம் இந்தியாவிற்கு முதல் தரமான அந்நியமொழியாகும். அரபி, பாரசீக மொழிகள் வேற்றுநாட்டு மொழிகள் என்பதை விளம்பத் தேவையில்லை. ஆனால் இந்தி இந்தியாவில் பிறந்த மொழி யென்றாலும், வேற்று மொழிகளான சமஸ்கிருதம், அரபி, பாரசீகச் சொற்களின் கூட்டுச் சேர்க்கையால் உதித்த மொழியாகும். இந்தியோ அதனோடு தொடர்புடைய தாகக் கருதப்படும் ஏனைய மொழிகளோ, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளைக்காட்டிலும் எந்தவிதத்திலும் நெருங் கிய தேசியமொழிகளாகா. இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் வரலாற்றறிஞர்கள், மொழி நூல் வல்லுநர்கள், மேலை நாட்டாராய்ச்சியாளர்

நாட்டு