உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

கரையான் வாய்ப்பட்டொழியும். தக்கவை நிலைத்துத் தனிக் கோல் செலுத்தும்.

காலதேவன் ஒருவனே மெய்யறிவுடைய நீதிபதி! அவன் திருமுன்னிலையில் ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இல்லை! அவன் வேண்டியதை வாழவைப்பதிலும், வேண்டாதவற்றை ஒழித்துத் தள்ளுவதிலும் சற்றேனும் இரக்கம் காட்டுவது இல்லை! எஞ்சி நிற்கும் சங்க நூல்கள் இதற்குச் சான்று!

இடைக்காலத்தே புற்றீசல் போல் கிளம்பிய எத்துணை ல்களும் நூலாசிரியர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருநாள் நாடகமாடிப் போய்விட்டனர்! ‘ஆடுநர்க் கழியும் உலகம்' என்று புறநானூற்று ஆசிரியரோடு நாம் சேர்ந்து காண்டு அமைதியாகக் குறிக்கலாம். அல்லது 'நாடகமே உலகம்' என்று பொதுமக்களுடன் சேர்ந்து முழங்கலாம்! அற்ப வாழ்வு நூற்களின் தன்மை இத்தகைய 'இரங்கல் நிலை'யில் உள்ளது.