உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம் பேச்சு:புல்லின் இதழ்கள்.pdf/359

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

ஹோல்டால் - Holdall

[தொகு]

முற்காலத்தில் இரயில் பயணம் செயபவர்கள், தூங்க உபயோகித்த படுக்கை விரிப்பு. இது தோலினாலோ அல்லது கான்வாஸ் துணியாலோ செய்யப் பட்டிருக்கும். நாம் வழமையாக உபயோகிக்கும் கோரைப் பாயின் நீளம் இருக்கும். இதை மூன்றாகச் சுருட்டி, இரண்டு பக்கங்களிலும் உள்ள பெல்ட்டை உபயோகித்துக் கட்டிக் கொண்டு, ரயிலுக்கு எடுத்துச் செல்வர்.இதன் இரு முனைகளிலும் பை போன்ற அமைப்பு இருக்கும். ஒரு பையில் தலையணையையும், மறு பையில் போர்வையையும் வைத்து சுருட்டி விடலாம். இப்போது உள்ளது போல, அக்காலத்தில் குஷன் வைத்த பெர்த் கிடையாது. மர பெஞ்ச் போல இருக்கும். படுத்துறங்குவது சிரமமாக இருக்கும். எனவே, இரவுப் பயணத்தின் போது, இந்த ஹோல்டாலை, பெர்த் எனப்படும் மர பெஞ்சில் விரித்து, படுத்துறங்க வெள்ளையர் உபயோகித்தனர்.

என் தந்தையார் தம் இரவிலான இரயில் பயணத்துக்கு இதை வழமையாக உபயோகித்து வந்தார்கள்.

ஹோல்டால் மூன்றாகச் சுருட்டிய நிலையில்

ஹோல்டால் விரித்த நிலையில்

நடுவில் உள்ள இடத்தில் நம் துணிகளை வைத்துக் கொள்ளலாம்,

TI Buhari (பேச்சு) 06:15, 13 சூலை 2024 (UTC)Reply