பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவல்லவே! 353.

ஹரியோ, நினைத்தால் வாரி வழங்க இயலும் இத்தனை அன்பையும் பாசத்தையும் பூட்டி வைத்துக் கொண்டுதானே இத்தனை காலம் என்னிடம் கோபத்தை யும் சிடுசிடுப்பையும் காட்டிப் போலி வேஷம் போட்டாள்?” என்று வியப்புற்றான்.

சுசீலா ஸல்ட் கேஸை மூடி மூலையில் வைத்தாள். தம்பூராவுக்கு உறையைப் போட்டு வைத்தாள். படுக்கை. யும் தலையணையும் வைக்க, அப்பாவின் ஹோல்டாலை எடுத்துக் கொண்டு வந்தவுடன், ஹரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் படுக்கையே போதுமென்று ஹரி அதை அவளிடமிருந்து எடுத்துத் திரும்ப அதன் இடத்தில் வைக்கப் போனபோது லட்சுமியம்மாள், ஆமாம், இந்தப் பெண் இந்தப் பழசைக் கொண்டு போன போதே நினைத்தேன்: ஹரி, நீ பங்களுருக்குத்தானே போறே? அங்கேயே போய் நல்லதாக ஒன்று வாங்கி வைத்துக் கொள். ரூபாய்” தருகிறேன்’ என்று அவனிடம் கூறினாள். லட்சுமியம்மா ளுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிக்கு மனத்தை என்னவோ செய்தது.

‘அம்மா, நான் இது பழசு, புதுசு என்று பார்த்துத் திரும்பக் கொண்டு வந்து வைக்கவில்லை. இது ஐயாவி னுடைய படுக்கை. பூஜிக்க வேண்டிய பொருள்போல. அதைக் கண்ணில் தொட்டுஒத்திக் கொள்ள வேண்டுமே தவிர அதில் காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுகிற, யோக்கியதையும் அந்தஸ்தும் எனக்கல்ல; யாருக்குமே கிடையாது.”*

‘தவறுதலாக விரல் கண்ணைக் குத்திவிடுவதுபோல், நாம் விகற்பமில்லாமல் பேசியதை இந்தப் பிள்ளை இப்படி. அர்த்தம் எடுத்துக் கொண்டு விட்டானே! என்று லட்சுமி யம்மாளுக்கும் சங்கடமாய்ப் போய் விட்டது.