பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 புல்லின் இதழ்கள்

  • உன்னை, நான் அப்படி நினைக்கக் கூடியவன் என்று சொல்லவில்லை. உன் பக்தி விசுவாசம் எனக்குத் தெரியாதா? எங்கே இருந்தாலும் பகவான் உன்னை கூேடி மமாக வைத்திருப்பார்’ என்றாள் லட்சுமியம்மாள் இதைக் கேட்டுச் சுசீலாவின் உள்ளம் பெருமையால் பூரித்தது.

பங்களுருக்குப் புறப்படுவதற்கு முன்பு திருவிடை மருதுரருக்குப் போய்ச் சுந்தரியையும், வசந்தியையும் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று ஹரி விரும்பினான். முன்னைப் போல அவன் அதிகம் ஊரில் தங்குவதுமில்லை; தங்கினாலும் அந்த ஒரு நாள், இரண்டு நாளில் அவனுக்கு மீண்டும் புறப்படுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ளத்தான் பொழுது சரியாக இருந்தது. அதற்காக இப்படியே தள்ளிப்போட்டுக் கொண்டே போகக் கூடாது என்று எண்ணி அவன் அன்றே திருவிடைமருதுரருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான்.

அவன் போன சற்றைக் கெல்லாம் மங்களபுரி சமஸ் தானத்திலிருந்து ஹரிக்கு அழைப்பு வந்தது. அவனுடைய பாட்டைக் கேட்டு பரவசமான மங்களபுரி அரசர் ஹரியைக் கெளரவித்து அவனைத் தம் ஆஸ்தான இசை வாணர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டிருக்கிறாரம்,

ஹரி வந்ததும் கொடுக்க வேண்டுமென்று சுசீலா அதை வாங்கிப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டாள்.

அப்பாவிடம் சுசீலாவின் விஷயத்தை இனியும் தெரிவிக்காமல் மூடி வைத்திருப்பது தவறு; அதைச் சரியான சந்தர்ப்பத்தில் தெரிவிப்பதுதான் நல்லது என்று, அதற்கானதொரு சமயத்தைக் காயத்திரி எதிர் பார்த் திருந்தாள்.

ஆனால், சுந்தரியின் செவிகளுக்கு இந்தச் செய்தி

எட்டியவுடன் அவள் மனம் என்ன பாடுபடும்! வசந்தி