உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே

17

திருமணம், சகேத நகரத்திலே, மணமகள்‌ மாளிகையிலே, திருவிழாவைப் போல வெகு சிறப்பாக நடந்தது. தனஞ்சயன்‌ தம்‌ மகள்‌ விசாகைக்கு, அளவற்ற பொன்னையும்,‌ பொருளையும்‌ ஏராளமான பசு மந்தைகளையும்,‌ பணிப்பெண்கள்‌, பணியாளர்கள்‌ முதலான ஊழியர்களையும்‌ நன்கொடைப்‌ பொருளாக வழங்கினார்‌. சிறப்புகளும்‌, விருந்துகளும்‌ நடந்த பின்னர்‌, மணமகனுடன்,‌ மணமகளைப்‌ புக்ககத்திற்கு அனுப்‌பினார்கள்‌.

அனுப்புவதற்கு முன்பு, தனஞ்சயன்‌ விசாகையை அழைத்து, அறிவுரைகள்‌ கூறினார்‌: “அம்மா, விசாகை! நீ புக்ககத்தில்‌ வாழ்கிற போது, நடந்து கொள்ள வேண்டிய சில முறைகள்‌ உள்ளன. அவற்றைக்‌ கூறுகிறேன்‌; உன்னிப்பாகக்‌ கேள்‌. கேட்டு, அதன்படி. நடந்து கொண்டால்,‌ நன்மையடைவாய்‌” என்று சொல்லி, அறிவுரைகளை வழங்கினார்‌. அப்போது, விசாகையின் மாமனாராகிய மிகாரன்‌ என்னுஞ்‌ செல்வரும்‌ அங்கிருந்‌தார்‌. தனஞ்சயன்‌ தம்‌ மகளுக்குக்‌ கூறிய அறிவுரைகள்‌ இவை: “வீட்டு நெருப்பை, அயலாருக்குக்‌ கொடுக்காதே. அயலார்‌ நெருப்பை, வீட்டுக்குள்‌ கொண்டு வராதே. கொடுக்கிறவர்களுக்குக்‌ கொடு; கொடாதவர்களுக்குக் கொடாதே. கொடுக்கிறவர்களுக்கும்,‌ கொடாதவர்‌களுக்கும்‌ கொடு. நகைத்துக் கொண்டு உட்காரு. நகைத்துக் கொண்டு சாப்பிடு; நகைத்துக் கொண்டு தூங்கு. எரி ஓம்பு. குல தெய்வங்களை வணங்கு.”

இவற்றைக்‌ கேட்ட விசாகை, அவ்வாறே செய்வதாகத்‌ தந்தையிடம்‌ கூறினாள்‌. அண்மையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மிகாரச்‌ செல்வருக்கு, இவை விளங்கவில்லை. “இவை என்ன பைத்தியம்‌! வீட்டு

இ.பு.௧.—2