உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பவழ கேட்டுக் கேலி செய்கிறார்கள்.. சகிக்க முடியவில்லை, அவர்களுடைய போக்கை! புரியவில்லை. ஏன் இப்படி போக்கு மாறி விட்டது என்று! இதை நீக்கும் மார்க்கமோ துளியும் தெரியவில்லை..." "எல்லாம் புத்தன் கிளப்பிய புயலின் விளைவு தான்” "அண்டசராசரங்களைப் படைத்த ஐயனின் மார்க் கத்தை, புத்தப்புயல் அழித்துவிடுவதா..?" "புத்தன் மட்டும் யார்? ஐயன் படைப்புதானே! ஐயனேதான், என்று கூடத்தான் சொல்கிறார்கள். "ஒரு காரணம் எனக்குத் தெரிந்த அளவிலே கூறு கிறேன் "எதற்கு.....? "புத்த மார்க்கம் பரவுவதற்குக் காரணம் என்ன என்றால், புத்தனுடைய கதை மக்கள் மனதை உருக்குகிறது -ராஜகுமாரன் - போக போக்கியத்தைத் துறந்து அழகு மனைவியையும், குழந்தையையும் பிரிந்து, அடவிகள் எல்லாம் சுற்றி அலைந்து, மக்களுக்குச் சேவை செய்தார். என்று கதை கூறும்போது மக்கள் மனம் பாகாய் உருகத் தான் செய்கிறது. மனிதனுடைய துக்கத்துக் காரணம் என்ன, விமோசனத்துக்கு வழி என்ன, என்பதைக் கண்டு பிடிக்க சித்தார்த்தர் பட்டபாடு, கேட்போர் மனதைக் கரையச் செய்கிறது. பொன்னிறமேனி மயங்க, தேகம் துரும் பாக இளைத்துப் போக, அன்ன ஆகாரமின்றி அடவியிலே அலைந்து சிந்தித்துச் சிந்தித்து ஞானத்தைக் கண்டறிந் தார் என்று கூறுகிறார்கள் - கேட்கும்போது, மக்கள் சொக்கிப் போகிறார்கள்.' "போமய்யா. போம்! புத்தி கெட்டுபோய் உளறு கிறீர்! அரச போகத்தைத் துறந்தாராம். அடவியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/37&oldid=1637223" இலிருந்து மீள்விக்கப்பட்டது