இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/சிற்றன்னையின் சதிச்செயல்
நான்காவது அதிகாரம்
சிற்றன்னையின் சதிச்செயல்
எனக்குப் பதினேழு பதினெட்டு வயதிருக்கும், என் தகப்பனார் வியாபாரம் உச்ச நிலையிலிருந்தது. அவருக்கு அச்சமயம் சுக்கிர தசை போலும். ஒரு பெரிய மோட்டார் கம்பெனி வைத்து நடத்தலானார். அமெரிக்காவில் பிரபலமாக நடக்கும் போர்டு கம்பெனிக்கு, இவரே இச்சென்னை மாநகருக்கு சோல் ஏஜண்டு என்றால் சொல்லவும் வேண்டுமோ! இம்மோட்டார் கம்பெனிக்கு என் தந்தையார் தம் மனைவியின் (இவளாலேயே தமக்குச் சகல சம்பத்தும், வைபவமும் ஏற்பட்டிருக்கிறதென்பது அவரது அபார நம்பிக்கை. இவ்வாறே எங்கள் சுற்றத்தார். முதலியோர் கூட எண்ணிக் கூறி வருகிறார்கள் என்று முதலிலேயே நான் குறிப்பிட்டது உமக்கு நினைவிருக்குமென்று கருதுகிறேன்.) பெயரை — அதாவது தனலக்ஷ்மி மோட்டார் கம்பெனி என்று பெயர் வைத்து நடத்தி வந்தார். இதன் மோட்டார் காரேஜ் (Motor Garage) சீமையிலிருந்து வந்த ஒரு ஐரோப்பியர் நிர்வாகத்தில் நடந்து வந்தது. என் சிற்றப்பா முன் போல் வெறும் தமாஷாக்களிலேயே காலத்தைக் கழித்து வராமல், இம்மோட்டார் சம்பந்தமான ‘மெக்கானிஸத்’தைக் கற்றுக் கொண்டு கம்பெனி நிர்வாகத்தில் கலந்து 58 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
கொள்ளலார்ை. அவருடைய மூத்த புதல்வனும், எனக்கு அண்ணன் முறையி லுள்ளவனுமான கதிரேசன் கல்வியில் கவனத்தைச் செலுத்தாது மனம்போனவாறு மற்ற பிள்ளைகளோடு திரிந்து வந்ததால் ஸ்கூல் பைனல்கூட பூர்த்தி செய்யாத நிலையில் இம்மோட்டார்த் தொழிலில் ஈடு படுத்தப்பட்டான். அவரது மற்ருெரு பிள்ளையும், மூன்று பெண்களும் என்னேப்போலவே படித்துவந்தனர்.
என் தகப்பனரின் பெரு முயற்சியால் செல்வ நிலை மேலும் உயரவே, அதற்கேற்ப எங்கள் குடும்பத்திலுள் னார் செயலும் போக்கும் பெரு மாறுதலடையலாயின. எங்கள் போக்குவரவு சாதனத்துக்கு மட்டும் நாலேந்து மோட்டார்கார்கள் வேண்டியிருந்தன. அதுவன்றி இரு குதிரை algorig-ser (Governess cart) இருந்தன. என் தாயும் சின்றன்னேயும் நகர மாதர் பொழுது போக்கு சங்க (Ladies Recreation Club) #36 offiéffarīfāorrisosori. எனவே, மாலை நேரங்களில் அவர்கள் தவருது அச்சங்கத் துக்குப் போகவேண்டியவர்களாயினர். சில சமயங்களில் என்னையும், என் சகோதரிகளையும் (அதாவது சிற்றன்னை பெண்கள்) அவர்கள் அழைத்துச் செல்வர். ஆரம்பத்தில் என் தாய் அச்சங்கத்துக்குத் தொடர்ந்து சென்ருளாயினும் நாளடைவில், ஊக்கங்குன்றவே, சரியாகப்போவதில்லை. என் சிற்றன்னைமட்டும் ஒரு சாளுக் தவறமாட்டாள். அதோடு அவள் அச்சங்கத்தில் எதிலும் பிரதம பாகம் எடுத் துக்கொண்டு. வந்தமையால் அதற்குக் காரியதரிசியாகவுந் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஒருவரிடம் பண நடமாட்டம் ருந்தாலே இதுவரை யில்லாத உற்வினரும், சிநேகிதர் களும் வந்து சேருவது இயற்கை. அதுப்ோல், எற்கனவே காக்கள் பணக்கார்ரா யிருக்கின்றமைபற்றி உறவுகொண் சிற்றன்னையின் சதிச்செயல் 59
டாடி-நட்பு கொண்டாடி வந்தவர்கள் கூட்டம் இச்சங்க வாயிலாகவும் அதிகப்படலாயிற்று. சாதாரண காலங்களில் கூட எங்கள் மாளிகை கலியான வீடுபோல ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிறைந்திருக்கும். அவர் களில் பலர் நெருங்கிப் பழகியமையால் குடும்பத் தோழர் களாகவும் இருந்தனர். எனவே, எங்கள் குடும்பத்தில் அநேகமாக அயலார் உறவினர் என்ற பேதமோ, ஆண் பெண் பேதமோ இல்லாமலிருந்தது. இன்னும் வெளிப் படையாகச் சொல்லவேண்டு மென்முல், அன்னிய ஆடவர் எதிரில் குடும்பப் பெண்கள் வரக்கூடாதென்ற கோஷா முறை அறவே கைவிடப்பட்டது. என் தாய் சங்க விஷ் பத்தில் அசிரத்தை காட்டியதுபோலவே, சிநேகிதரிடம் பழ கும் முறையிலும் சிறிது அமர்த்தலாகவே இருந்து வந்தாள். சாதாரணமாகத் தன்னுெத்த மகளிரோடு அவசியம் நேர்ந் தால் அளவளாவிப் பேசி மகிழ்வாள். மற்றப்படி ஆண் மக்களிடம் அவர்கள் எவ்வளவு அத்தியந்த கண்பர்களாயி லும் வயதில் பெரியவர்களிடத்தில்கூட தவிர்க்க முடியாக கிலேயில் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசிவிட்டுப் போய்விடுவாள். அதனுல் மற்றவர்கள் என் தாயைப் பணச் செருக்கு படைத்தவள் என்று பழித்துப் பேசுவதுண்டு.
என் சிறிய தாயோ எல்லோருடனும் கூச்சமின்றித் தாராளமாகப் பேசிப் பழகுவாள். அதோடு தன்னே எல் லோருக்கும் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், எல்லாருக்கும் தகுந்தவிதமாக கடந்து நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கருத்தும், தன். ஆடம்பரச் செயலேக் காட்டிக்கொள்ள, வேண்டுமென்ற விருப்பமும் அவள் மனதில் வேரூன்றி யிருந்தன. அவள் எதிர்பார்த்த படியே மற்றவர்கள் அவளைக் கருதித் தெய்வம்ாகப் போற் 60 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
நிப் புகழ்ந்தார்கள் என்ருல் நீர் ஆச்சரியப்பட மாட்டீர் என்று கருதுகிறேன். எங்கள் குடும்பப் பிரதாபத்தை இங்கு இத்தோடு நிறுத்துகிறேன். - செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து முதலிலேயே நாகரிக மாக வளர்க்கப்பட்டு வந்த நான் ருதுவான பின்னரும் வாசிக்க வைக்கப்பட்டேன் என்று கூறுவது உமக்கு வியப் பைத் தராது என்றெண்ணுகிறேன். நான் இண்டர் மீடி யட் லீனியர் வகுப்பில் கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலே யில் வாசித்து வந்தேன். எனக்குஞ் சிநேகிதர்கள் பலர் சேர்ந்து விட்டார்கள். நவநாகரிகப் போக்கில் அதிகமாக ஆழ்ந்து போகாவிட்டாலும், கான் மற்ற கோழிகள் போக் கில் ஈடுபாடுடையவளாய் இருக்ேதன். அதனுல் கலாசாலே முடிந்ததும், மாலேக் காலங்களில் நான் சிநேகிதைகளோடு பந்தாட்டம், கலாசாலைக் கூட்டம், ஒட்டல், சினிமா முதலி பவைகளுக்குச் சென்று திரிந்துவிட்டுத்தான் என் விட்டுக் குப் போவது வழக்கமாயிருந்தது. -
அவ்வாறு ஒருநாள் கலாசாலை மைதானத்தில் பாட் மிண்டன் ஆடிவிட்டு எழுமணிக்கு விடுசென்றேன். மோட் டாரை விட்டு இறங்கிப் பங்களாவிற்குள் நுழைந்தேன். இரண்டடி எடுத்து உள்ளே வைத்திருப்பேன். இட்து பக்க மாக அமைக்கப்பட்டிருந்த மல்லிகைக் கொடி பந்தருக் கிடையே இருந்து யாரோ பேசுவது என்காதில் விழுந்தது. அச்சமயத்தில் யான் செவியுற்ற சம்பாஷணை என்னை அவ் விடத் ఫెGఇGu திடுக்கிட்டு நிற்க வைத்துவிட்டது.
ாறி கலங்கி கின்ற யான் இரண்டொரு விநாடிக் ன் தடும்ாற்ற நிலையைச் சமாளித்துக்கொண்டு, யைத் தொடர்ந்து கேட்க ஆசை கொண் ம் அந்நேரத்தில் இரகசியமாகப் பேசும் அவர் சிற்றன்னையின் சதிச்செயல் 61
கள் யார் என்று அறியவும் எனக்கு அதிக ஆவலுண்டா யிற்று எனினும், பூம்பந்தரிடையே கின்று பேசுபவர்களை அறிய முதலிலேயே முயன்ருல், ஒரு Gమిడిr அவர்கள் என் வரவை அறிந்துகொண்டு தங்கள் சம்பாஷனைக்கு முற்றுப் புள்ளி வைக்காமலே திடீரென்று பிரிந்து போய்விடக் கூடு மாதலால், இச்சமயத்தில் அவசரத்தைக் காட்டலாகாது என்று தீர்மானித்தேன். ஆகவே, வாயிற் கத வோரத்தில் பூம்பந்தரைச் சார்ந்துள்ள ஒரு பெரிய மாமரத்தின் மறை வில் கின்று ஒற்றுக் கேட்கலானேன். X
"ஆமாம், கையாலாகாவிட்டாலும் கொஞ்ச வருவதில் மட்டும் குறைச்சவில்லை............” இது பெண் குரல்.
கான் என்ன செய்வேன் ஜகதா! நீ என்னென்ன சொன்குயோ, அதை யெல்லாம் தங்கு தடையில்லாது தான் செய்து வந்தேன்! நாம் எதிர் பார்த்து வருவதற்கு மாருக ஒவ்வொன்றும் நிகழ்ந்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? நீ இன்னும் என்ன செய்யச் சொல்லுகி ருயோ சொல்லு! நான் செய்து முடிக்காவிட்டால் அப் புறம் கேளேன்!” . - - -
§ ஆடவன் குரலாக இது கேட்டது. இவ்விரு பேச்சுத் தொனிகளும் மிக நெருங்கிப் பழகுபவர்களுடைய குரல் போல எனக்குத் தென்பட்டது. - 'உம்-இன்னும் ஒன்றுதான் மிச்சம் சொன்னதைத் தவருது செய்வதில் நீர் மிகவும் அசகாய சூார்........தெரி யுமே எனக்கு உமது இலட்சணம்.” . :
நான் அசகாய சூரகை இல்லாமலா அதிகாரிகள் என்னைப் போலீஸ் இலாகாவில் இன்ஸ்பெக்டராக நியமித் திருக்கிருர்கள்?............... .” . ..." 62. இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
'அதற்கென்ன ஆள் முனிஸ்வரன் போலக் குறுக்கி லும் நெடுக்கிலும் பருத்தும் நீண்டும் இருக்கவே, இன்ஸ் பெக்டராகப் போட்டுவிட்டார்கள். இது ஒரு பெருமையா? காரியத்தில் திறமையில்லையென்ருல் என்ன பிரயோஜனம்'
"ஐயோ!-இப்போது என்ன செய்யச் சொல்லு கிருப்; அதைக் கூறித் தொலையேன் ஜகதா! நீ சொல்லுகிற படி இம்முறை நிறைவேற்றி வைக்கிறேனு இல்லையா, பார்! இக்காரியத்துக்கு முட்டுக்கட்டையாக உலகமே திரண்டு வந்து குறுக்கிட்டாலுஞ் சரிதான். ஒரு கை பார்த்து விடு கிறேன்........ அம்மம்மா, பெரிய பெரிய கமிஷனர் துரை, அஸிஸ்டெண்டு கமிஷனர்களிடத்தெல்லாம் மிகவுஞ் சுலப மாகச் சர்ட்டிபிகேட் வாங்கிக்கொண்டு 20 வருடங்களா கக் கியாதிபெற்று வந்திருக்கிறேன். முடிசூடாத இந்த ராஜாத்தியிடத்தில் மாத்திரம் சர்ட்டிபிகேட் வாங்க முடிய வில்லையே! நானும் ஐந்தாறு வருட காலமாகத் தலைகீழாக கின்று கெஞ்சிப் பார்க்கிறேன். என் பாச்சா உன்னிடம் கொஞ்சங்கூடப் பலிக்கவில்லையே! இனிய வார்த்தைக்குக் கூடப் பஞ்சமாக வன்ருே இருக்கிறது!”
"ஆமாம்; கொஞ்சிக் குலாவுவதற்குத் தான் உம்மைத் தேடிச் சினேகஞ் செய்தது!-உம்-என் வீனக வார்க் தையை வளர்த்திக்கொண்டு போக வேண்டும்!-ஐயா! இன்ஸ்பெக்டர்வாள்! இப்போது உம்மிடம் வெளிப்படை யாகப் பேசுகிறேன். உம் அழகைக் கண்டு மயங்கியோ அல்லது. உம்மிடத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டோ நான் உம்மை நாடி நிற்பதாக நீர் எண்ணியிருக்க மாட்டீர் என்று நம்புகிறேன். அவ்வாறு தவருக ஒரு வேளை நீர் ருந்தாலும், பெரிதும் ஏமாற்ற மடைவீர்-பின் எதற்காக என்னிடங் தோழமைகொண்டாப் என்று நீர் சிற்றன்னையின் சதிச்செயல் 63
கேட்கலாம். அதன் காரணத்தையுங் கூறி விடுகிறேன். எங் கள் குடும்ப விவகாரமனைத்தும் உமக்கு நன்கு தெரியும். இப்போதுள்ள சொத்தனத்தும் எனது அத்தான் (என். கணவனது தமையன்) ஒருவரே சம்பாதித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. என் தமக்கைக்கு நீண்ட நாள் பிள்ளைப்பேறு வாய்க்காதிருந்தமையாலும் எனக்குப் பல பிள்ளைகள் ஆண்களும் பெண்களுமாக ஏற்பட்டு விட்டமை யாலும், அத்தானுக்குப் பின்னர், என் பிள்ளைகளே இச் சொத்தை யனுபவித்தற் குரியவர்களாவார்கள் என்று மனப்பால் குடித்து மகிழ்ந்து வந்தேன். ஆனல், என் எண் ணத்தில் இடி விழுந்துவிட்டதென்பதை நான் சொல்லா மலே நீர் இந்நேரம் அறிந்திருப்பீர்! புவனசுந்தரி பிறந்த பின் அத்தான் தமக்கை ஆகியவர்களுடைய மனப்போக்கை யும், பெருமிதச் செயலேயும் பார்த்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அச்சிறு முளையைப் பார்த்தால் அவர் கள் மெய்மறந்துபோய் விடுகிருர்கள். அது ஒரு சாண் கூடச் சரியாக இல்லை; அதற்கு எத்துணை தலை கிறுக்கு இருக்கிறது தெரியுமா! இவற்றையெல்லாங் கண்டால் எனக்கு வயிறு எரியாமலிருக்குமா! இப்போதிருக்கும் கிலே மையைப் பார்த்தால், எனது மக்களுக்கு எங்கள் பூர்வார் ஜித சொத்தில் எனது கணவனுக்குரிய ஒரு சிறு பாகங் தவிர வேறு ஒரு செல்லாக் காசுகூடக் கிடைக்காது என்று நினைக்கிறேன். அப்படியானல் என் குழந்தைகள் கதி என் குவது! எனவே, நான் எண்ணுததெல்லாம் எண்ணி செஞ்’ சம் புண்ணுகிக் கடைசியாக அம்முளையைக் கிள்ளியெறிந்து விடத் துணிந்துவிட்டேன். அச்சதிச் செயலுக்கு உற்ற துணையாக இருப்பதற்கே போலீஸ் இலாகாவிலுள் كذة தான் தகுதிவாய்ந்தவர் என்று கருதி உ. ; :::::: நாடினேன். அத்துடன் நீரும் எங்கள் : போக ஆரம்பித்ததிலிருந்து என்னைக் கடைக் கணித்து
தையும் நான் குறிப்பா லுணர்ந்தேன். உமது அக்காமக்-
குறிப்பு நமக்கிடையே ஒருவித தொடர்பை உண்டு பண்ணிக் கொள்வதற்கு எனக்கு எளியதாயிற்று. ஆனல் நான் எதிர் பார்த்தவளவு நீர் இவ்விஷயத்தில் சமர்த்தராக இல்லை. அவ் வாறு சொல்வதால் உமக்கு மனச் சங்கடம் உண்டாகலாம். பாருமே ஒரு முறை இரு முறை தவறினல் ஏதோ தற்செய லாக குறிதவறி விட்டதென்று நினைக்கலாம். நான்கைந்து தடவையும் அவ்வாறே. ஆனல் என்னென்பது நீர் என் எண்ணத்தை நிறைவேற்றி வைத்தால், ஏதோ உம் ஆசையையும் பூர்த்தி செய்து வைக்கலாம் என்று பார்த் தால், ஒன்றும் நடப்பதாகவே காணுேமே இனி உம்மை இவ்விஷயத்தில் நம்பி யிருப்பதில் பயனில்லை யென்றுதான் தோன்றுகிறது. சரி; உம் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும்....இல்லை. நீர் என்னிடம் எதிர் பார்த்தது. கிடைக்கவில்லையென்ற கோபத்தில், வேண்டுமானல், நான் உம்மிடம் இதுவரை சொல்லியிருக்கும் இரகசியங்களே யெல் லாம் வெளியிட்டுக் கொலைபுரிய சதியாலோசனை செய்து, வருவதாக என்மீது குற்றஞ் சாட்டித் தண்டனை விதிக்கச் செய்யும். ஏனென்ருல், நீர் குற்ற இலாகா இன்ஸ்பெக்டர் அன்ருே சுலபமாகக் கேஸை ஜோடிக்கத்தான உமக்குத் தெரியாது?’
சே! சே! அப்படியெல்லாம் சொல்லாதே! கண்ணே ஜகதா கான் என்ன அவ்வளவு கொடியவன உன்மீது. நான் என் உயிரையே வைத்திருக்கிறேனென்பது உனக் கென்ன தெரியும்? நீ என்ன வெறுத்துப் புறக்கணிப்பதா குலும், நான் உன்காலடியில் வீழ்ந்து உயிர் விடுவேனே யன்றி, பழி தீர்த்துக்கொள்ள ஒருபோதும் உன்னைக் கா டிக்கொடுக்கமாட்டேன். இது சத்தியமென்று நீ உறுதிய நம்பு-இனி, உனக்கு இந்த கவலேயே வேண்டாம் அந்தப் சிற்றன்னையின் சதிச்செயல் 6?”
பெண்ணை எவ்விதத்திலாயினும் தொலைத்துவிடுவது என்னு டைய முதல் வேலே............ גל
藝 夸 鬱 聲
"தோழரே! இதற்குமேல் அச்சம்பாஷணையைக் கேட் டுக்கொண்டு நிற்க என்னல் முடியவில்லை. நான் பங்களா வாயிலினுள் நுழையும்போது, என் காதில் விழுந்த, சுட் டேன்! கொஞ்சங் குறி தவறிப் போச்சு குண்டு மாத்திரம் பட்டிருந்தால் அப் பெண் புதைக்கப்பட்ட இடம் புல்முளைத் துப் போயிருக்கும்............ 45 களே என்னேத் திடுக்கிட்டு நிற்கச் செய்தது. யாரைப் பற்றி யார் பேசுகிருர்கள் என்பதை யறியவே முதலில்
என்ற பரபரப்பான வார்த்தை
கின்றேனயினும், என்னைப் பற்றியே சதிப் பேச்சு நடக்கும் என்று அச்சமயம் சிறிதும் கருதவேயில்லை. அதுவும், அக் நேரத்தில், அங்கு கான் மறைந்து நிற்பதை நான் அம்மாளி கையில் செல்வக் குமரியே யாயினும்.யாரேனும் பார்த்தால் ஏதேனுந் தவருக கினைத்துக்கொள்வார்களே என்ற பயம் ஒரு பக்கம் எழ அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவர்கள் சம்பாஷணையை ஒற்றுக் கேட்கலா னேன். அவ்வாறு கேட்கையில் என்னைக் கொல்வதற்கே யாரோ இருவர் சூழ்ச்சி செய்கிருர்கள் என்று அறிந்தால் அச்சமயம் என் மனம் எவ்வாறு இருக்கும். என் தலை சுழன்றது! சிறிது சமாளித்துக்கொண்டு, சம்பாஷணையைக் கேட்ட சிறிது நேரத்துக்குள்ளேயே, அவர்களது குரல் தொனிகளால் இன்னர்தான் இருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொண்ட நான் அதைத் தெளிவுபடுத்திக்கொள் வதற்காக நான் கின்ற விடத்தைவிட்டுப் பின்னலேயே மெல்ல நடந்து வாயிற் கதவருகில் நின்று தலையைச்சாய்த்து. எட்டிப்பார்த்தேன். ஆம், அவர்கள்தான். யார்?.என். *68 ഉിലു திரும்பிப் பாரேன்
பதை நீரும் இந்நேரம் ஊகித்துக்கொண்டிருப்பீரென்று நினைக்கிறேன். ஆனலும் நானே சொல்லிவிடுகிறேன். அவர்கள் எனது உயிருக்கு உலை வைத்திருக்கும் சிற்றன்னை (அவள் பெயர் ஜகதாம்பிகை)யும் இன்ஸ்பெக்டர் வீரவாகுப் பிள்ளையுமே யாகும். நான் பார்க்கும்போது அவள் முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு மிடுக்காக கின் றிருந்தாள். இன்ஸ்பெக்டர் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவண்ணம் அவள் கைகளைப் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருந்தார் அக் காட்சியைக் காண எனக்குச் சகிக்க வில்லே. மெல்ல அடிமேலடிவைத்து ஓசை படாமல் மாளி கையினுள் சென்றுவிட்டேன். -
நேரே என் அறையை அடைந்ததும், கதவைத் தாளிட் டேன். வேறெதையுங் கவனிக்க என்னல் முடியவில்லை. பூம்பங்களில் கண்ட காட்சியே என் அறிவு முழுதையுங் கவர்ந்திருந்தது. பைத்தியம் பிடித்தவள்போல் அறையைச் சுற்றிச் சுற்றி வந்தேன். 'ஆ' என்ன அக்கிரமம் இவ்வகி யாயம் எங்கு நடக்கும்? என் தாயால் அன்பாக வளர்க்கப் பட்டவள்-அவளாலேயே சற்குணம் பொருந்திய என் சிற்றப்பாவை நாயகனுக அடைந்தவள்-நல்வாழ்வைப் பெற்றுக் குபேர சம்பத்தை யனுபவிப்பவளாகிய என் சிற் றன்னே, என்னத் தன் சொந்த சகோதரியின் ஒரே மகன். என்பதையும் பாராது, தன்னல மொன்றையே பெரிதாகக் கருதுவதா அக் கொலைபாதகச் செயலுக்கு உதவியாக பதற்காக தன் தகுதி, மானம் இவற்றையெல்லாம் திள்ளிவிட்டுத் தன் அருங்கற்புக்கு மாருகக் களங்க
ம என்பதையுஞ் சிந்தித்துப் பாராது, அயலா. - தொடர்பு வைத்திருப்பதா! இவ்வடாச் லகி லெங்கேனும் நடக்குமா? அறக்கடவுளுக்கு சிற்றன்னையின் சதிச்செயல் 69'."
இது பொறுக்குமா! ஆ ஆ” என்று எனக்குள்ளாகவே கூறிக் கொண்டே வருகையில் கலை சுழற்ற மயக்கமுற்று விழுந்தேன். இங்கிலேமையில் நான் எவ்வளவு நேரம் இருந்தேனென்பது எனக்கே தெரியாது.
竊 臺 蠟 蟾
கதவு தடதட வென்று கட்டுஞ் சப்தங்கேட்டுத் திடுக் கிட்டு எழுந்து என் உடை முதலியவற்றைச் சீர்படுத்திக் கொண்டு மெல்லச் சென்று தாழ்ப்பாளைத் திறந்தேன். வெளியே என் தாய் தந்தை முதலியோர் கவலையோடு குழ்க் திருந்தனர். என்னேக் கண்டதும் என் அருமைத் தாய் மிக வும் பரிவோடு என்னே யணுகி, புவன என்ன உடம்புக்கு: முகம் வேறுபட்டிருக்கிறதே! எப்போது வீட்டுக்கு வக் தாய்? ஏன் காப்பிகூடச் சாப்பிடவில்லை? நீ வரவில் ை யென்று 8-மணிக்குமேல் வேலையாட்களைக் கலாசாலைக்கும், மற்றும் உன் சிநேகிதைகள் வீடுகளுக்கும் காலாபக்கமும் அனுப்பினேன். எல்லோரும் நீ எங்கும் இல்லை யென்று சொல்லவே, எனக்குப் பயமாகிவிட்டது. உடனே அப்பா வுக்கு டெலிபோன் செய்தேன். அவர் டிரைவர், குழந் தையைப் பங்களாவில் விட்டு விட்டு வந்ததாகச் சொல். கிருன்! அப்படியிருக்க, மறுபடியும் யாரிடமும் சொல்லா மல் எங்கு போய்விடுவாள்" என்று பதில் தெரிவித்து, உடனே ஆபீஸைவிட்டு ஓடி வந்தார். அவர் பதில் எனக்கு மேலுங் கவலையை உண்டுபண்ணி விட்டதம்மா! உன் அறையை யாகிலும் வந்து பார்க்கலாம் என்று இங்கே வந்தால் கதவு உள் தாளிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு ஒருவாறு தைரியம் வந்தது. ஆனல், அரைமணி. நேரத்தி & மேல் கதவைத் தட்டியும் ஒரு பதிலுங் கிடைக்கவில் எனவே, எனக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த ѣo எற்பட்டு விட்டது. இதற்குள் உன் தந்தையும்: TO இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்
டார். கதவையாகிலும் உடைத்துப் பார்க்கலாம் என்று தீர்மானித்துக் கடைசியாகத் தட்டினுேம். நீ திறந்தாய். இரண்டு மணி நேரத்தில் வீடே அமளிபட்டு விட்டதம்மா!' எனருள.
எல்லாரும் இவ்வளவு பரபரப்போடு என்னைப்பற்றி விசாரிக்க, நான் சிறிது மெதுவாக, 'இல்லை எனக் கென் னமோ மயக்கமா யிருந்தது கதவைச் சாத்திவிட்டுப் படுத்து விட்டேன். கதவு தட்டுஞ் சப்தம் இப்போது தான் என் காதில் விழுந்தது. எழுந்து கதவைத் திறந்தேன். வேறென்றும் இல்லை” என்று சொல்லிய வண்ணம் என் பெற்ருேரோடு உள்ளே சென்றேன். அதன் பின்னரும் என் தாயிடங்கூட நான் பூப்பந்தரிடையே கண்ட காட்சியைப் பற்றியும், கேட்ட சம்பாஷணையைப் பற்றியும் தெரிவிக்க வில்லை. இவற்றை என் தாயிடம் தெரிவிக்கக் கூடாதென்ற நோக்கத்தோடு சொல்லவில்லை; எனென்ருல், "என் தாய்க் குத் தன் தங்கையின் பொருமைக்குணம் எற்கனவே தெரிக் திருக்கிறது; ஆல்ை, அப்பொருமை காரணமாக அவள் தன் கற்பை இழக்கக்கூடிய கிலேக்குக்கூட வந்து விட்டாள் என்று தெரிந்தால் என் தாய் மனம் பதைக்கு மல்லவா! என் அருமைக் காயை மீளாக் துயரில் ஆழ்த்த என் மனம் விரும்பவில்லை. ஆகவே........ 33
இச்சமயத்தில் நாங்கள் இருந்த குடிசைக் கதவின்மீது எதோ பொத்தென்று விழுந்த சப்தம் கேட்டது. தன் வர லாற்றைக் கூறிக்கொண்டு புவனசுந்தரி அதை நிறுத்தி விட்டு உடனே எழுந்து போய் மெல்லக் கதவைத் திறங் தாள். என்னமோ எதோ வென்று கலவரப்பட்டுக் கொண்டே நானும் என் இருக்கையை விட்டு எழுந்து அவள் பின்னே தொடர்ந்து சென்றேன். அவ்வாறு சென்ற சிற்றன்னையின் சதிச்செயல் 71
கான் வெளியே நோக்கியதும் பின்னடைந்தேன். பயத் தால் உடம்பு முழுதும் வியர்வை குயீரென்று அரும்பி வழிந்தன. என்னை யறியாது நான் நடுங்கினேன் ஆ! அங் நடு இரவில் நான் கண்ட காட்சியை என்னென்பேன்!
என்ன பயங்கரம்!
குடிசைக்கு எதிரே சிறிது தாரத்தில், ஒரு சிறுத்தைப் புலியும், கழுதைக் குறத்தியும் மிக உக்கிரமாகச் சண்டை செய்துகொண்டிருந்தன. மிருகங்களிடையே சண்டையேற் பட்டால் காடு தூள் பறப்பதைச் சொல்லவும் வேண் டுமோ எக்காரணத்தால் அவைகளிடையே சண்டை யுண் டாயிற்று என்பது நமக்கென்ன தெரியும்? வான விதியில் வெள்ளிய சந்திரிகைகளைக் கக்கிக்கொண்டு பிரகாசிக்கும் சந்திரன் அந்நேரத்தில் உலகையே வெண்மை மயமாக ஆக்கிக்கொண்டிருந்தா தைலால், காடாங்ககாரமான அம் மலைப் பிரதேசத்தில் கள்ளிரவு என்பதற்குரிய இருட்டு அடையாளம் சிறிதுமே இல்லாமல், பகல்போலக் காணப் பட்டது. ஆகையால், அம்மிருகங்கள் போடுஞ் சண்டை நன்முகத் தெரிந்தது. கழுதைக் குறத்தி உர்' என்று பயங்கர மாக உறுமிக்கொண்டு முன் கைகளால் ஒங்கி அடிக்கும் அவ்வடி தன்மீது விழாதவாறு தடுத்துக்கெண்டு பின் பக்க மாகப் போய்ப் பதுங்கிச் சமயம் பார்த்து அக்கழுதைக் குறத்திமீது சிறுத்தைப்புலி பாய்ந்து தாக்கும். இவ்வாறு இவை ஒன்றையொன்று மோதித் தாக்கிப் பெரும்போர் செய்துகொண்டிருந்தன. இம்மலையில் எங்கோ ஓரிடத்தில் இம்மிருகங்களிடையே கலகம் நேரிட்டு ஒன்றை யொன்று அடித்துத் துரத்திக்கொண்டு வந்து நாங்கள் இருக்கும்.இக் குடிசைக் கெதிரில் சில நிமிஷங்களாகச் சண்டை, கொண்டிருந்ததாகத் த்ெரிந்தது. நான் இதற்கு முன்
-
து: 72 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
வாசமோ மலைவாசமோ செய்ததில்லை யாகையால்-என்? அப் பிரதேசங்களின் வழியாகக்கூடச் சென்ற தில்லை யென்றே சொல்லவேண்டும்.-அவ்விடங்களில் சஞ்சாரஞ் செய்யும் மிருகங்களின் சுபாவங்களையும், அவ்வித மூர்க்க மான சண்டைகளையும் பார்த்ததில்லை. எனவே இச்சண்டை எனக்கு மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது. அத்தோடு, அவைகளில் எதுவேனும் ஒரு மிருகம் எங்கள் மீது பாய்ந்து விடுமோ என்ற பயமும் எனக்கிருந்தது. எனவே, பெரும் பீதியால் சிறிது நேரம் என் கண்களைப் பொத்திக்கொண் டேன். இவ்வளவு நேரமும் குடிசைக் ககவோரத்தில் மறைந்திருந்தே நான் இக்கோரக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தேன். ஆல்ை, புவன சுந்தரியோ கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றவள் அம்மிருகங்கள் சண்டை செய்யுமிடத்துக்குச் சிறிது துரத்தில் கின்று கொஞ்சமும் அச்சமின்றி அச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அப்பெண்ணின் வீரம் அபலே கள் மெல்லியலார்’ என்று கூறப்படும் பெண்ணினத்தைச் சேர்ந்த புவனசுந்தரிக்குள்ள மனத்திண்மையும், தைரிய மும், ஆண்மகனென்று சொல்லிக்கொள்ளும் எனக்கில்லே யென்ருல் அதைவிட வெட்கம் வேறு என்ன வேண்டியிருக் கிறது? அதிலும், யான் எனக் கேற்பட்ட காதல் ஏமாற்றக் தால், என் பெற்ருேரைத் துறந்து, சுற்றத்தாரை நீங்கி, சமுகத்தை விடுத்து, காட்டைவிட்டு ஒடி வந்து, உலகத்தி லிருக்கவேண்டு மென்ற ஆசையையே அறவே ஒழித்து, டினி கிடந்து எங்கேனும் உயிர்விடலாமென்று முயன்று இண்டிருக்கும் நான் இம் மிருகங்களைக்கண்டு பயப்படு நூல், அவை என்மீது பாய்ந்து பற்றி விழுங்கி விடு
பாழுலகைவிட்டுப் போவதற்கு எதிர்பாராத
命,x iாய்த்ததென்று சந்தோஷப் சிற்றன்னையின் சதிச்செயல் 73
படுவதைவிட்டு) அஞ்சி நடுங்குவதென்ருல்-அது பரிகசிக் கத் தக்கதல்லவா! அதற்கு எனது பலவீனத்தை (உடல் பல வீன மட்டு மன்று; உள்ளம் பலவினமுங்கூட) கினைத்து வருந்தித் தலை குனிவதன்றி வேறு நான் என்ன செய்யமுடியும்! எனவே, இரண்டாம் முறையாக புவன சுந்தரியின் பெண்மை வீரத்தின்முன் என் ஆண்மையை இழந்து ஒடுங்கி கின்றேன். மேலே என்ன நிகழப்போ கிறதோ? என்ற வியப்பும் அச்சமும் ஒருங்கே தோன்ற, புவன சுந்தரியையும், சண்டையிடும் மிருகங்களையும் மாறி மாறிப்பார்த்துக்கொண்டு (அப்போதும் அச்சத்தோடேயே) நின்றுகொண்டிருந்தேன்.
அம்மிருகங்களில் ஏதேனு மொன்று அவள் பக்கமாக பின்னுக்கு வாங்கிப் பதுங்கி வரும்போது கொஞ்சம் ஒதுங் கிச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறு அடிக்கடி இடம் பெயர்ந்து நின்று சண்டையைக் கவனித்துக்கொண்டிருந்தவள், திடீ ரென ஏதோ கினைத்துக்கொண்டவள் போலத் திரும்பி என்னைப் பார்த்தாள். அவ்வாறு பார்த்த வளவிலேயே எனது அச்சத்தையும், மனநிலையையும் ஒருவாறு உணர்ந்து கொண்டாள் என்றே நினைக்கிறேன். அடுத்த கணத்தில் அவள், தான் உடுத்தியிருந்த சேலையை வரிந்து இழுத்துக் கட்டிக்கொண்டு யாருடனே யுத்தஞ் செய்வதற்குத் தயாரா யிருப்பவள்போல் கின்ருள். இப்போது அவளது கம்பீரத் தோற்றத்தை சான் எவ்வாறு விவரித்துரைப்பேன்! குஸ்தி, குத்துச்சண்டை போடும் உஸ்தாக் ஒருவன் மைதானத்தில் எதிரி முன் வந்து நிற்கும்போது, அவனது தோள்களும், மார்பும் எவ்வாறு உருண்டு திரண்டு கரளே காளையாக இருக்குமோ அதேபோன்று அவளது தோள்களும் ஆரித்துத் தோன்றின. இச் சமயத்தில் கழுதைக்குறத்தி
6 • ' '{*;
பலத்த அடிவாங்கிய சிறுத்தைப் புலி அதன் மீது பாய்ந்து ஓங்கியடிக்கும் நோக்கத்தோடு இவள் பக்கமாகப் பின்னுக்கு வாங்கிப் பம்மிப் பதுங்கியது.
(மிருகங்கள் மிக மும்முரமாகச் சண்டையிடும்போது,
மனிதர்களோ மற்ற மிருகங்களோ இருப்பது அவைகளின் கண்களுக்குத் தோன்றாதது இயற்கைதானே!) இதுதான் தகுந்த சமயம் என்றெண்ணியவள்போல் புவனசுந்தரி தானிருந்த இடத்தினின்றும் ஒரு குதி குதித்துத் தாவிப் பாய்ந்து
சிறுத்தைப் புலியின் நீண்ட வாலேக் கையால் பற்றிக் கரகர வென மேலே சுழற்றி அக் கழுதைக் குறத்தி'மீது ஓங்கி அடித்தெறிந்தாள். . - - -
அதைச் சிறிதும் எதிர்பாராத அச்சிறுத்தைப்புலி செய லற்று ராட்டினம்போல் சுழன்று இரத்தத்தைக் கக்கிக் கொண்டு கழுதைக்குறத்திமேல் விழுந்தது. இதல்ை கழு தைக் குறத்தியும் வெகுண்டெழுந்து அயலார் யாரோவந்து விட்டார்களென்று உணர்ந்து புவனசுந்தளியைத் திரும்பிப் பார்த்து உறுமியவண்ணமே ஓட ஆரம்பித்தது. கீழே விழுந்த சிறுத்தைப்புவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் தன் இனச் சமாளித்துக்கொண்டு மேலும் அங்கு கின்ருல் தனக்கு என்ன நேருமோ என்று பயந்துகொண்டு கழுதைக்குறத்தி யைப் பின் தொடர்ந்து ஒட்டம் பிடித்தது. சிறுத்தைப்புலி யைப் பற்றத் தாவிய வேகத்தில், சாதாரணமாகக் கோதி முடிந்திருந்த அவளது கூந்தல் கற்றை அவிழ்ந்து அலங் கோலமாகக் காற்றில் பறந்தன. எனவே, அவள் அச் சிறுத்தைப்புலியின் வாலேப்பற்றி மேலே சுழற்றியபோது 'இவள் என்ன காளிதேவியோ!' என்றே கருதவேண்டி யிருந்தது. பண்டைக்காலத்து வீரப் பெண்மணிகள் பலர் பல அருஞ்செயல்களைச் செய்ததாக வரலாறுகளின் வாயி லாகப் படித்திருக்கிறேன். ஆனல் புவன சுந்தரியைப் போன்ற வீரமகளே-அஞ்சாநெஞ்சம் பன்டத்த அணங்கை ஆபத்தை ஆனந்தத்தோடு வரவேற்று எதிர்த்து கிற்கும் ஆற்றல் வாய்ந்த காரீமணியை-நான் இதுவரை பார்த்தது கிடையாது. அவளே வீரத்தின் உருவென்றே சொல்லுதல் வேண்டும். அம் மிருகங்கள் அவ் விடத்தைவிட்டு ஓடிய பி. நான் கன்முக மூச்சுவிடலானேன். எனது அச்ச லும்.அப்போதுதான் என்னைவிட்டு அகன்றன. கள். வெகுதாரம் ஒடிக் கண்ணுக்கு மறையும் வரை அத்திக்கையே பார்த்துக் கொண்டிருந்த புவனசுந்தரி பின்னர் என் பக்கமாகத் திரும்பியவள், நான் மெய்க் கூச்செறிந்து நிற்பதையும், பெருமூச்சு விடுவதையுங் கண்டு கலகலவென நகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தாள். அப்பா! அச்சிரிப்பில் எவ்வளவு பொருள் அடங்கியிருந்தது? நானும் மிகவுஞ் சிரமப்பட்டுச் சிரிப்பை வருவித்துக் கொண்டேன்.
என் அசட்டுச் சிரிப்பையுணர்ந்த புவனசுந்தரி, “தோழரே! மிருகங்களின் சண்டை எப்படியிருந்தது? இதைக் கண்டு நீர் பயப்பட்டீரல்லவா?” என்று கேட்டாள்.
எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எனவே, வாய் திறவாது வாளாயிருந்தேன்.