உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 38

விக்கிமூலம் இலிருந்து

ந்தக் கீற்றுக் கொட்டகை, கிட்டத்தட்ட அதே வடிவத்தில் ஒரு கான்கிரிட் கட்டிடமாக மாற்றம் கண்டது. ஒற்றைக் கட்டிடம். ஆனாலும், ஆலமரம் போல், தன்னோடு இணைந்த சில கிளைக் கட்டிடங்களையும் உள்ளடக்கி உள்ளது. மூன்று கிரவுண்ட் இடம், இப்போது இரண்டு ஏக்கரானது. ஆங்காங்கே தென்னை மரக் குட்டிகள், ஓலை விரித்து ஆடின. மாமரக் குழந்தைகள், வயதுக்கு வந்து இலை, தழைகளை ஆடைகளாய் அணிந்து நின்று ஆர்ப்பரித்தன. நான்கைந்து முந்திரி மரங்கள், அடிவாரத்தைக் காட்டாமல், ராட்டின குடை விரித்து நின்றன. நெல்லிக்காய் மரங்கள் கம்மல்களையும், தங்கரளி மரங்கள் பாம்படக் காய்களையும் ஆட்டி ஆட்டிக் காட்டின. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்… அதன் வாய் போன்ற வாசலில், ஒரு இரும்பு கிராதி கேட்… மதில் சுவருக்கு பற்கள் மாதிரியான இந்தக் கேட்டை, தேவைப்பட்டால் மறைத்துக் கொள்ள ஒற்றை உதடு போலான இன்னொரு இரும்புத் தகடு கேட் கதவு…

இந்த மதில் சுவரின் வாசலுக்கு மேலே உள்ள பெயர்ப் பலகையும் வித்தியாசமானது. செவ்வகமாய் நீண்ட பலகை, நடுப்பகுதியில் மட்டும் வட்ட வடிவமானது. இந்த வட்டத்திற்குள் பல்வேறு உள்வட்டங்கள். பெரிய வட்டத்திற்கு வெளியே வளையங்கள். ஒவ்வொரு வளையத்திற்கு வெளியேயும், சுருண்டு நெளிந்த இரண்டு கறுப்புக் கோடுகள், பார்ப்பதற்கு கருநாகங்களாய் வளைந்து நின்றன. மூன்று வளைவுகளாய் நெளிந்தன. இரண்டாவது வளைவில் ஒரு சின்ன உருளை வடிவம். இப்படி இந்த நடுப்பகுதி, ஒரு ஹெச்.ஐ.வி. கிருமியின் கோடிக் கணக்கான பூதாகர உருவத்தை நகல் எடுத்த உருளை வடிவம். இதன் இரு பக்கமும் நீண்ட 330 பாலைப்புறா

செவ்வகப்பலகையில், எய்ட்ஸ் திருமணதடுப்பு இயக்கம்’ என்ற வெள்ளை சிவப்பு வண்ணஎழுத்துக்கள் வெள்ளை... அமைதிக்கு. சிவப்பு. உறுதிக்கு”

அந்தப் பெரிய கட்டிடத் தளம் கிளை பிரிந்து, பிரகாரம் போல் சென்றடையும் பின்பக்கம், ஒரு சுமாரான வீடு... இதன் இரண்டாவது அறையில் கலைவாணி கட்டிலில் படுத்து இருந்தாள். பத்து நாளாய் லேசான காய்ச்சல்; உடலுக்குள்ளேயே ஒட்டிக் கொண்டது மாதிரியான தணல், வெளியே தொட்டால் தெரியாத உள்காய்ச்சல், இவ்வளவு நாளும் மறைத்துப் பார்த்தாள். இன்றைக்கு முடியவில்லை.

காலமாற்றம், கலைவாணியின் உடம்பிலும் மாற்றங்களைக் காட்டியது. கண்களில் படபடப்புக்குப் பதிலாக ஒரு சாந்தம். மாம்பழமாய் இருந்த முகம், நார் நாரான பனம் பழமாய் லேசான சுருக்கங்களைக் காட்டியது. முகத்தில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் சின்னச்சின்னபுள்ளிகள்.

அக்கா மகன் மோகன்ராமை வழியனுப்பி விட்டு, உள்ளே வந்த சீனியம்மா, கலைவாணியை மருவி மருவிப் பார்த்தாள். ‘இப்படியே சாப்பிடாமல் கிடந்தால் எப்படிம்மா? ஹார்லிக்சாவது குடிக்கிறியா?” என்றாள். மகள் கையாட்டி மறுத்துவிட்டாள். பிறகு அம்மாவின் முகம் மேலும் வாடக் கூடாது என்பதற்காகவே, படுக்கையில் இருந்து எழுந்து, கட்டில் சட்டத்தில் ஒரு தலையணையை சுவரோடு சாய்ந்து வைத்து, அதில் தலைசாய்த்து, படுக்காமலும் உட்காராமலும், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் கிடந்தாள்.

வெளியே உள்ள ஆலோசனை கூடத்தில் காரசாரமான சத்தம். ‘கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ என்று நவீனமாய் அழைக்கப்படும் விலை மகளிருக்கு அல்லது விலைபோன மகளிர்க்கு, காண்டோம்கள் கொடுத்து, அவற்றை அவர்கள் தத்தம் தாற்காலிகக் கூட்டாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்ற யோசனை கமிட்டிக்கு வந்தது. கலைவாணியும், பழைய சுமதியிடம் பணியாற்றிய காமாட்சியும் கடுமையாக எதிர்த்தார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வு பெயரால் நடத்தப்படும் காண்டோம் விழிப்புணர்வு கூத்துக்களை, நாம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் ஆரோக்கியத்தை ஏன் வற்புறுத்தக் கூடாது... என்று வாதிட்டார்கள். அதோடு, விலைமாதுகளை அங்கீகரிப்பது போல் கூட்டி வருவது, முறையில்லை என்றார்கள். ஆனாலும் அசோகன், ‘கலைம்மா... பிறக்கும் போதே எவளும் விலைமகளாய் பிறக்கவில்லை... இன்னும் சொல்லப் போனால், ஒருதாசிக்குத்தான் கற்பின் மகிமை அதிகமாய் தெரியும்’ என்ற போது, கலைவாணி, “நோ, நோ” என்றாள். உடனே அவன், ‘'நீ கூடத்தான் லாரிக்காரனைப் பார்த்து ஒன்னை அறியாமலே கையை சு.சமுத்திரம் 331

நீட்டினே... சந்திரா, பார்க்கவிட்டால், நீ என்ன ஆகியிருப்பே. என்றபோது, கலைவாணி, இந்த விலையாக்கப்பட்ட மகளிர் கூட்டத்திற்கு இணங்கினாள். சிறிது நேரம் வரை, அந்தக் கூட்டத்தில்தான் இருந்தாள். அங்கே ஒரு பாவப்பட்ட பெண், பங்களா தொழிலில் இருந்து தூக்கி எறியப்பட்டு, ஒரு லாரிக்காரனிடம், இவளைப் போலவே கையை நீட்டி, புதருக்கு வந்த அனுபவத்தை துக்கித்துச் சொன்னபோது, கலைவாணி அழுதுவிட்டாள். அசோகனின் தூண்டுதலில், காமாட்சிதான், கலைவாணியை, இங்கே கொண்டு வந்துவிட்டாள். இப்போதும் மனதுக்குள், கரையான்அரிப்பு. கண்ணுக்குள்துடிப்பு...

அசோகனும், சந்திராவும் உள்ளே வந்தார்கள். அசோகனின் கைப்பக்கம் ஒரு அய்ந்து வயதுப்பயல்... சந்திராவின் கழுத்தில், இந்தப் பயலுக்குக் காரணமான ஒரு மஞ்சள்கயிறு. இருவருமே... கொஞ்சம் தடித்திருந்தார்கள். முகங்களும் சிறிது கன்றிப் போயிருந்தன... பப்பாளிக்காய் பழுக்கப் போவதுபோல்... அந்தப்பயல் ‘அத்தே ‘ என்று சொன்னபடி, கலை வாணியின் பக்கத்தில் போனான். உடனே, அவள் அவனைத் தூக்கி அருகே வைத்துக் கொண்டு, அவன்முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

சீனியம்மாள், அசோகனைப் பார்த்து கவலை தெரிவித்தாள்.

‘எனக்கு பயமாய் இருக்குது. பத்துநாளாய் காய்ச்சலாம். இவள் இன்னைக்குத்தான் வாயைத் திறந்தாள்.’

‘கலைம்மா... உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். எது வந்தாலும், உடனே சொல்லணுமுன்னு. சந்திரா ஒனக்கு புத்தி எங்கே போச்சுது...? கலையை, டெய்லி செக்கப் செய்யச்சொன்னேனே...”

“சும்மா கிடங்கஅசோக்... டெய்லி செக்கப் செய்கிற அளவுக்கு கலைக்கு எதுவும் இல்ல. நம் இரண்டு பேரையும் விட, ஆரோக்கியமாத்தான் இருக்காள்.’

‘இன்னும் நீஅவசர குடுக்கைதான்.”

‘நீங்கதான் அப்படி... என்னால நிரூபிக்க முடியும்.

“எங்கே... ஆதாரம் காட்டு. பாக்கலாம்’

‘கலைவாணி... ஒங்க கட்சி... அதனால, இப்போ நிரூபிக்க மாட்டேன். ‘

கலைவாணி சிரித்தாள்... பக்கத்தில் இருந்த பயலைப் பார்த்து, ‘பயப்படாத டா... இது ஊடல்’ என்றாள். உடனே அந்தப் பயல், 332 பாலைப்புறா

‘அப்படின்னா அப்படின்னா’ என்று அத்தையை நச்சரித்தான். சீனியம்மா மீண்டும் கவலை தெரிவித்தாள்.

‘எனக்குப் பயமா இருக்குது சந்திரா” ‘கவலைப்படாதீங்க... அத்தே... குரோசின் கொடுத்தால் சரியாயிடும்.”

“ஆமாம் சித்தி... நீங்க இப்போ மட்டுமில்ல, எதிர்காலத்திலயும் கூட, கலைக்காக கவலைப்பட வேண்டியது இருக்காது. அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல் நகர்ல, ஹெச்.ஐ.வி. கிருமிகள் உள்ள ஒரு குழந்தைக்கு, ஐந்து வயதில் அந்த கிருமிகள் இருந்த அடையாளமே தெரியல... இந்த அதிசயத்தை கலிபோர்னிய பல்கலைக்கழக எய்ட்ஸ் பிரிவு ஆய்வு செய்து வருது. இந்தப் பிரிவின் உறுப்பினர் ஜே.பிரைசன் என்பவர் இதை தெரிவித்திருக்கார். கேரளத்தில சரஹஸம்ஹிதை, அஷ்டாங்க இருதயம், சகஸ்ரயோகம் ஆகிய பழைய நூல்கள் தெரிவிக்கிற இருபத்தைந்து மூலிகைகளைக் கொண்டு, இந்த நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்களாம்... இதனால் நோயாளிகளிடம் நல்ல அறிகுறிகள் காணப்படுவதாய் கேள்வி. அமெரிக்கா வில் அதே கலிபோர்னியாவில் உள்ள டாக்டர் எஸ்ஸே, இதே மருந்தை, மெக்ஸிகோக்காரர் எட்வர்டோகார்கியாஎன்பவருக்கு கொடுத்து குணப்படுத் தியதாய் சொல்றார். “அதைக் கண்டேன். இதைக் கண்டுபிடிச்சேன்னு ஆயிரம் பேர் புறப்பட்டாலும், டாக்டர் எஸ்லே சொல்வதும் நம்பும்படியாய் இருக்குது. அதோடரத்தத்தில் ஒரு கோட்டிங் கொடுத்து, எய்ட்ஸ் கிருமிகளை ஒழிக்க முடியுமான்னு எங்க அலோபதி சிஸ்டத்துல. சர்வதேச ஆராய்ச்சி நடக்குது. நானும் சந்திராவும் கலைக்காக அஸிடோ - தைமிடின் மருந்தை லண்டன்லே, இருந்து வருவிக் கிறதுக்கு முயற்சி எடுக்கோம். வேணுமுன்னால் பாருங்க! கலை... நம்மை எல்லாம் வழியனுப்பி வச்சிட்டுத்தான் வருவாள். நாம்தான், கலைக்காக அங்கே காத்திருக்கணும். ஏன்னா, எனக்குப் பிளட் பிரசர். சந்திராவுக்கு டயாபெடிக்ஸ்... ஒங்களுக்கு வயசாயிட்டு...’

‘'டாக்டரய்யா... தத்துப்பித்துன்னு உளறப்படாது. என்னை நல்ல படியாய் வழி அனுப்பி வைக்கிறதாய் வாக்குக் கொடுத்திருக்கீங்க... மறந்திடாதீங்க.”

நெடிய கொடிய அமைதி... சீனியம்மா, தாளமுடியாமல், உள்ளேபோய் விட்டாள். அசோகன் மீண்டும் தொடர்ந்தான்.

‘நீ... நான், சந்திரா, இதோ வந்து நிற்காளே இந்த காமாட்சி... நாம் இப்போக்கூட திருப்தியோட சாகலாம்மா... அந்த அளவுக்கு செய்திருக் கோம். ஐந்தாறு எய்ட்ஸ் கல்யாணத்தை தடுத்திருக்கோம். ஹெச்.ஐ.வி. சு.சமுத்திரம் 333

பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கோம். பல நோயாளிகளுக்குபயனுள்ள தொழில்களை நடத்தப் போறோம். நம்மகிட்ட யோசனை கேட்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க. நம்ம அமைப்போட பெயர், நாலு பக்கமும் அடிபடுது.. அதனால, நாம சாவை சந்தோஷமாய் எதிர் நோக்கலாம்.”

‘என்ன அசோக்...? நாம், இறப்பு விழிப்புணர் இயக்கமா நடத்து றோம்...? நீங்க சொன்னகாரணங்களுக்காகவே, நாம் எல்லாரும் நீண்டநாள் உயிர் வாழனும். நமக்கு சொஜ்ஜி, பஜ்ஜி செய்து தருகிற எங்கத்தை- ஒங்க சித்தி அதிகநாள் உயிர் வாழனும், பீபாசிட்டிவ்...”

‘பரவாயில்ல... சந்திரா இன்னிக்கித்தான் நீ புத்திசாலித்தனமாய் பேசுறே”.

‘நான் எப்போதுமே அப்படித்தான். ஒங்களுக்குத்தான், என்புத்திசாலித் தனத்தை புரிஞ்சிக்கிற புத்தி புதுசா வந்திருக்கு’

கலைவாணியும் காமாட்சியும் சேர்ந்து சிரித்தார்கள். ஆனாலும் கலைவாணியின் சிரிப்பு:உடனடியாய் அடங்கியது.

‘'தேனம்மா... எப்படி இருக்காள்டாக்டரய்யா...’

‘இன்னும் ஒரு வாரத்தில முடிஞ்சிடும். சொல்லுக்குச்சொல் கலைதான். மூச்சுக்கு மூச்சுநீதான்...”

‘என்னை. அவள் கண்ணிலே காட்ட மறுக்கீங்களே டாக்டரய்யா! எத்தனைதடவை கேட்டுட்டேன்?”

‘இப்போ நீ வீக்... நாலு நாளாகட்டும், கூட்டிக்கிட்டுப் போறேன்... அப்புறம் காமாட்சி..அந்தப் பெண்கள் போயிட்டாங்களா?”

‘போயிட்டாங்க... எத்தனையோ எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டம், துண்டு பிரசுரம் நடத்துறவங்க, மக்களுக்கு புரியும்படியா ஏன் ஒரு சினிமா படம் எடுக்கலன்னு கேட்டாங்க. மக்களுக்கு தெரியக் கூடாது என்கிறதுல கவனமா இருக்காங்களோன்னு கிண்டல் பண்ணினாங்க... அப்புறம், கலை! சந்தானக்குமார் வந்திருக்கார்...’

கலைவாணி உடனடியாய், எழுந்தாள். அசோகனும் சந்திராவும் சீனியம்மாபோடுகிற காபிக்காக ‘காத்திருந்தபோது'இவள், காமாட்சியுடன் வெளியே வந்தாள். அலுவலக அறைக்குள் வந்தவளைப் பார்த்து களவிளம்பர அதிகாரியான சந்தானக்குமார் எழுந்தார். கலைவாணி உட்காராமலே கேட்டாள்... 334 பாலைப்புறா

“என்ன சார். நீங்க எனக்கா... எழுந்திருக்கிறது? நான் ஒங்க பழைய

கலைவாணிதான். காமாட்சி... அம்மாக்கிட்ட சொல்லி ஒரு கப் காப்பி”

காமாட்சி, புரிந்து கொண்டாள். அசோகன் சந்திரா போல் தானும் புரிந்தது போல்தலையாட்டி விட்டுப் போய்விட்டாள்.

‘எப்படி சார் இருக்கீங்க...?”

‘நல்லா இல்லம்மா... சி.பி.ஐ.க்காரங்க பழையபடியும் விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காங்க. மூணு வருஷம் இழுத்தடிச்சிட்டு, முனு வருஷம் தூங்கிட்டு, இப்போ எனக்கு பிரமோஷன் வார சமயமாய் பார்த்து கூப்புடுறாங்க...”

‘என்ன சார். அநியாயமாய் இருக்குது... நானே சி.பி.ஐ.க்கு எழுதி கொடுத்தேனே. நேரு இளைஞர் மைய பகுதி நேர ஒருங்கிணைப்பாளராய் இருக்கும் போது, நீங்க நடத்துன பிலிம் ஷோக்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்கலைன்னு எழுதினேனே. சுமதி, ஒரு மோசடிப் பேர்வழி... அவள் கணக்குப் புத்தகம் ஒரு கண்ணாடியாகாதுன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்தேனே. சுமதி வீட்டைவிட்டு வ்ைத்துவிட்டு. ஒங்க வீட்ல சி.பி.ஐ. ரெய்ட் செய்தது தப்புன்னு வேற சுட்டிக்காட்டி இருந்தனே...’

‘இந்தத் தப்புத்தாம்மா... தப்பா போயிட்டு... சிபிஐக்கு புதுசா வந்திருக்கிற டிஐஜி, என் பைல பார்த்துட்டு, ஒங்க ஸ்டேட்மென்டை ஒரு சவாலா எடுத்துட்டாராம். கிணத்துக்குள்ள கல்லாய் கிடந்ததை தூக்கிப்பிடித்து என்தலைக்கு குறி பார்க்கார், ‘

‘'அட கடவுளே’

‘இதுதாம்மா... இன்றைய நேர்மையான கவர்ன்மெண்ட் செர்வன்ட் நிலைமை. மத்திய அரசு ஊழியன்... ஒரு தடவை சி.பி.ஐ.யில் மாட்டிக்கிட்டால், அவனுக்கு பத்து வருஷம் நிம்மதி போயிடும்... மாநில அரசுல... இதைவிடக் கேவலம்... ஒருத்தர், சாயங்காலம் ரிட்டயர்ட் ஆகப் போகிறார் என்றால்... அன்றைக்கு மாலையில் மூன்று மணிக்கு, அவரை சஸ்பென்ட் செய்வாங்க... எனக்கு புரமோஷன் பெரிசில்லம்மா. ஆனால், யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்காத என்னைப் போய், சுமதி கிட்ட பணம் வாங்கினதாய் நினைக்கிறதை, தாங்க முடியலம்மா...’

‘எல்லாம்... ஒங்க இணை இயக்குனரால் வந்த வினை...’

‘அந்த ஆளும். நல்லவர்தான்... ஆனா பாதி பைத்தியம்... படு சுத்தம். ‘சுத்தன் துஷ்டனோட பலன் செய்வான்னு’... மலையாளத்தில ஒரு பழமொழி இருக்குது பாருங்க. அந்த மாதிரி ஆசாமி. எல.எாவது லஞ்சம் சு.சமுத்திரம் 335

வாங்கிட்டான்னு யாராவது சொல்லிட்டால், உடனே நம்பிடுவார். இதுதான் இன்றைய நேர்மையாளர்களோட காபக்கேடு. நானும் எந்த தப்பும் செய்யாததால், அவர் கிட்ட சூடாப் பேசிட்டேன். இதனால அவரும் சிபிஐக்கு எழுதிட்டார். இப்போ, அவரு டில்லியில் இயக்குநராய் இருக்குறார். ரொம்ப வருத்தப்படுகிறார். ஆனால் பாரம் சுமக்கிறது நான், அதுவும் பழிபாவம்...’

‘நான் என்ன செய்யணுமுன்னு சொல்லுங்க சார். அதைச் செய்யுறேன் சார். உங்களோட இந்த நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன். இதுக்காகவே, எது வேணுமுன்னாலும் செய்யத் தயார்’

‘பழையபடியும் ஒரு ஸ்டேட்மெண்ட் வேணும்... இந்தத் தடவை என்னைப் பிடித்துவிட்டு, சுமதி மீது நடவடிக்கை எடுக்காத சிபிஐ மீது வழக்கு போடப் போவதாய் நோட்டீஸ் மாதிரி அனுப்புங்க!”

‘'நான் தயார்... ஆனால் இது ஒங்களுக்கே.’

‘பரவாயில்லம்மா... வருஷக் கணக்கிலே நிம்மதி இல்லாமப் போறதைவிட, ரெண்டுலே ஒண்ணு தெரியட்டும்’

‘இப்பத்தான் புரியுது சார்... ஹெச்.ஐ.வி. கிருமிகள், வேறு வேறு ரூபத்தில், வேறு வேறு காரியங்களை செய்கிறது, இப்பத்தான் புரியுது. நான் நோட்டீஸ் ரெடி செய்து வைக்கேன். நாளை மறுநாள் வர்றீங்களா, இல்ல. நான் வரட்டுமா...’

“நானேவாறேம்மா...”

‘'கண்கலங்காதீங்க... சார்... வேலையில் இருந்து நீங்க விலக்கப் பட்டாலும், இந்த அமைப்பு ஒங்களை தாங்கிக்கும்”

‘வாறேம்மா...துக்கமாவந்துட்டு, சந்தோஷமா போறேம்மா...’

‘இதோ காபி. வந்துட்டு சார்’

சந்தானக் குமார், போய்விட்டார். அதுவரை, வெளியே நாசூக்கு கருதி மட்டுமே பேசிக் கொண்டிருந்த சந்திராவும் அசோகனும் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், அந்த விளம்பர அதிகாரியின் விபரீத நிலைமையை கலைவாணி விளக்கப் போனாள். அதற்குள், இரண்டு பேர் தபதபவென்று உள்ளே வந்தார்கள். எதிர் நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். ஒருத்தர், கட்சி மேடைகளில் வட்டமடிப்பவர். இன்னொருத்தர் கல்லெறி சம்பவங்களின் போது முன்னால் நிற்பவர். கலைவாணிக்கு எரிச்சல், அசோகனுக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். பெரியவர்களாகவே இருந்துட்டுப் போகட்டும். 336 பாலைப்புறா

அதுக்காக இப்படியா கேள்வி முறை இல்லாமல், முன் அறிவிப்பு கூட கொடுக்காமல், வருவது...?

கலைவாணி கேட்டாள்.

‘என்ன வேணும் சார்...?”

எதிர் நாற்காலிக்காரர்களில் வட்டமுகக்காரர், கலைவாணியையும், மற்றவர்களையும் ஏற இறங்கப்பார்த்தார். அந்தப்பகுதியில்தன்னைப் பார்த்த உடனேயே, பலர் பதறியடித்து எழும் போது, இவர்கள் பாராமுகமாய் இருப்பதும், இவள் அதட்டுவதுபோல் கேட்டதும், அவருக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. சூடாகிவிட்டார்.

‘இந்த இடம் எத்தனை ஏக்கர்...?”

‘'எதுக்கு கேக்குறீங்க...?”

‘கேட்கப்படாதா? சும்மாச்சொல்லுங்க...”

‘இரண்டு ஏக்கர்...”

‘இந்த இடத்து பக்கத்துல ஒரு காலேஜ்கட்டப் போறாங்க தெரியுமா?”

‘தெரியுமாவது...? கேட்கிறதுக்கே சந்தோஷமாய் இருந்தது. கிராமத்து இளைஞர்களுக்கு குறிப்பா பெண்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்...”

‘இப்படித்தான் பேசணும்... அதனால... ஒங்க இரண்டு ஏக்கரையும் வாங்கறதுன்னு தீர்மானித்திருக்கு...”

‘அங்கே... மடக்கிப் போட்டிருக்கிற இடத்தில நாலு காலேஜ் கட்டலாமே..?”

‘அதெல்லாம்... ஒங்களுக்கு அதிகப் பிரசங்கித்தனம். ஒங்க இடம் எங்களுக்கு வேணும். எவ்வளவு பணம் வேணும்...?”

அசோகனால், பொறுக்க முடியவில்லை.

‘என்ன சார்... அடாவடியாய் பேசுறீங்க... நாங்க விற்கத் தீர்மானிச் சிட்டதாய் நீங்களே தீர்மானித்தால் எப்படி...? நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும், நாங்க இந்த இடத்தை கொடுக்கிறதாய் இல்லே...”

“யார் கிட்ட பேசுறோமுன்னு தெரியுமா...? டாக்டருங்களுக்கு, நாட்டு நடப்பு தெரியாது என்கிறது சரியாத்தான் இருக்குது' சு.சமுத்திரம் 337

‘இந்த மாதிரி நடப்பு தெரிய வேண்டாம்”

உட்கார்ந்தவர்களில் இப்போது வட்ட முகக்காரருக்குப் பதிலாய், கோணல்முகக்காரர் பேசினார்.

‘போனை, இந்தப் பக்கமாய் தள்ளுங்க... போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டே பேசணும். எஸ்.பி., அவர்கிட்ட ஒரு விபரம் சொல்லச்சொன்னார்.”

‘மன்னிக்கணும்... டெலிபோனை நாங்க யாருக்கும் கொடுக்கிறது இல்லை; இது தர்மத்துக்காக உள்ள இடம். தர்ம சத்திரம் இல்ல...’

உட்கார்ந்தவர்கள், நாற்கலிகளை உதறியபடியே எழுந்தார்கள். வட்ட முகமும், கோண முகமும் மாறி மாறிப்பேசின...

‘மோகன்ராம்... தங்கை என்கிறதால இத்தோட விடுகிறோம். இல்லாட்டால் இந்தபோனைதுக்கிட்டுப்போக அதிக நேரம் ஆகாது.”

‘ஆனாலும் ஒண்னும்மா... இந்த இரண்டு ஏக்கரும், காலேஜ் கட்டுறவங்க இடம். நீங்க முன்னால எவ்வளவுக்கு வாங்கினிங்களோ, அதுல பாதிப்பணத்தை கொடுப்பாங்க. இல்லாட்டால் வம்புதான். கொடுத்தால் உங்களுக்கு நல்லது. நீங்க கொடுத்தாலும், கொடுக்காட்டாலும் எங்களுக்கு எப்பவுமே நல்லது. லாரி மேல சைக்கிள் மோத முடியாது. அடுத்த தடவை பத்திரத்தோடவருவோம்.”

வந்தவர்கள், போனார்களா.. அல்லது மறுபக்கம் நிற்கிறார்களா என்று நினைக்க முடியாத அளவிற்கு, அவர்கள் மரத்துப் போனார்கள். இருந்த இருக்கைகள் மீது இருக்கையானார்கள். இறுதியில் அசோகன் வெகுண்டு சொன்னான்.

‘கவலைப்படாதே... கலைம்மா... ஆனானப்பட்ட சுமதியையே துரத்துணவங்க நாம். இவங்க எம்மாத்திரம்.”

‘சுமதி, இப்போதிண்டுக்கல் பக்கம் கொடிக்கட்டி பறக்கிறாளாம்...”

‘நீங்க நினைக்கிறது மாதிரி விஷயம் சிம்பிள் இல்ல அசோக் இங்கே வந்தவங்க சாதாரணமானவங்கதான்... ஆனால் அசாதாரணமான சக்திக ளோட கருவிகள். எந்த சக்திகள், தமிழ்நாடு முழுதும்... பலரை மிரட்டி மிரட்டி. அவங்க சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிற்றோ, எந்த சக்திகள், பட்டாக்களை அதன் உரிமையாளர்களுக்கே தெரியாமல் மாற்றியதோ, அந்த சக்திகளின் ஏஜெண்டுகள்தான், நம்மை மிரட்டிட்டுப் போறவங்க. ‘

uIr. 22 338 பாலைப்புறா

‘அப்போ இந்த இடத்தை தாரைவார்க்க சொல்றியா?”

‘இப்படி கேட்க... ஒங்களுக்கு எப்படித்தான் புத்தி போகுதோ... அந்த அர்த்தத்திலயா பேசுனேன்?”

கலைவாணியின் கண்கள், தீயாயின. கைகள், முறுக்காயின... தீர்மானமாய் பேசினாள்.

‘எந்த சக்தியாய் இருந்தாலும் சரி, எந்தக் கொம்பன்... கொம்பியாய் இருந்தாலும் சரி... இங்கே அங்கம் வகிக்கிற நூற்று நாற்பத்திரண்டு உறுப்பினர்களின் பிணத்தில ஏறித்தான், அவங்க இந்த இடத்துக்கு வர முடியும். காமாட்சி! நம் பேரவைக் கூட்டத்தை, நாளை மறுநாளே கூட்டணும். நாளைக்கே பணிக்குழு கூடணும். சர்க்குலர் போடும்மா. இதைவிடப்படாது. இந்த நிலம் போயிடுமே...என்கிறது மட்டுமல்ல பிரச்சினை. இந்த ஆணவப் பூனைகளுக்கு யாராவது மணி கட்டித்தான் ஆகணும். அது நாமாவே இருப்போம்”

அசோக், கை தட்டினான்.

‘எனக்கு ரொம்ப சந்தோஷம் கலைம்மா... இந்தப் பிரச்சினை தீர்வது வரைக்கும், ஒனக்கு குரோசின் தேவையில்லை... வைட்டமின்மாத்திரைகள் கூட அவசியம் இல்லை... நிசமாவேத்தான்...’

கலைவாணியும் காமாட்சியும், டாக்டர் ஜோடியோடு எழுந்தார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுகலைக்கூடமாய் விளங்கும் முன்பக்கஅறை வழியாய் நடந்து, வெளியே வந்தார்கள். ஆங்காங்கே முளைவிட்ட பல்வேறு பயிற்சிப்பட்டறைகளையும், அவற்றில் இயங்கியவர்களையும் ஒரளவு கவலையோடு பார்த்தார்கள். அப்போது பார்த்து...

வாடாப்பூவும் எஸ்தரும் ஒடி வந்தார்கள். தொலைவிலேயே, முன்னவள், பின்னவளுக்கு, கலைவாணியை அடையாளம் காட்டிவிட்டாள். கலைவாணி, தன் கையைப் பிடித்த வாடாப்பூவிடம், கேட்டாள்.

‘இவங்க, யாருக்கா?”

‘நானே சொல்றேன், என் பெயர் எஸ்தர்... ஒன் ஹஸ்பென்ட் மனோகரோட...’

‘எனக்கு, எவரும் கணவர் இல்ல... இந்தாப் பாரு கழுத்தை’

‘சரி... நான் ஒன் முன்னாள் புருஷனோட கீப்பு. பச்சையா சொல்லப் போனால், நான்... அவனை வச்சிட்டு இருந்தேன்...’

‘என்ன நீ... காட்டுமிராண்டி மாதிரி...”

வாடாப்பூ. எஸ்தரை பின்னால் தள்ளிவிட்டு பேசினாள். அவள் சு.சமுத்திரம் 339

முகத்திலும் பெரிய சூரியக் கொப்பளம். அதைச்சுத்தி, பூமிக்கோளம் மாதிரி, பாதி வெளிச்சமும், மீதி இருளுமான கொப்பளங்கள். கலைவாணி, தன்னிடம் வரச்சொல்லியும், சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருப்பவள். ஊன் உருகப் பேசினாள்.

‘புருசனோ இல்லியோ? மனோகரை ஊருக்கு வெளியில போட்டு வச்சிருக்கு. அவர் படுற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்ல. ஒன்னை பார்க்கணுமுன்னு துடிக்காரு. அப்படிப் பார்த்துட்டால், சீக்கிரமா உயிர் போயிடும்...’

‘நான் யாரையும் பார்க்கிறதாய் இல்ல...’

டாக்டர் அசோகன், தீர்க்கமாய் பேசினான். ‘இவங்க மனோகரோட மாஜி மனைவி கலைவாணியைக் கூப்பிடல... எய்ட்ஸ் நோயாளிகளை கருணையோடு கவனிக்கிற ஒரு நல்ல அமைப்புன்னு, நம்பப்படுகிற அமைப்போட செயலாளர் கலைவாணியை கூப்பிடுறாங்க. கடைசிக் கட்டத்திலஅவஸ்தைப்படுற ஒரு எய்ட்ஸ் ஜீவனைப் நல்லபடியாய் அனுப்பி வைக்கிறதுக்கு கூப்பிடுறாங்க.”

கலைவாணி, எல்லாரையும் ஜீவனற்றுப் பார்த்தாள்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_38&oldid=1639258" இலிருந்து மீள்விக்கப்பட்டது