உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் 6

கஞ்சுகி : மன்னற்குள்ள இந்தத் துயரத்தினாலேதான் விழாக்கொண்டாட்டந் தடைசெய்யப்பட்டிருக்கின்றது.

இருவரும் : அது முறைதான்.

(திரைக்குப் பின்னே)

தாங்கள் முன்னே செல்லுங்கள்.

கஞ்சுகி : (உற்றுக்கேட்டு) ஓ! மன்னன் இவ்வழியே தான் வருகின்றார். நீங்கள் உங்கள் க மையைச்

கொண்டிருங்கள்.

இருவரும் : அப்படியே. (போய்விட்டார்கள்.)

செய்து

(கழிந்ததற்கு இரங்குங் கோலத்திற்கு இசைவான உடையொடு அரசனும், விதூஷகன் பிரதீகாரிகளும் வருகின்றனர்.)

கஞ்சுகி : ஆ! எந்த வகையான நிலைமையிலும் அழகிய வடிவமானது எவ்வளவு அழகாக விளங்குகின்றது! அவ்வளவு கவலையொடு கூடியிருந்தாலும் அரசன் கண்ணைக் கவரத்தக்க தோற்றமுடையராகவேயிருக்கின்றார்! ஏனெனில்,

சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நீக்கி இடதுகை முன்பொற் கடகம் பிணைந்தும்

நெட்டுயிர்ப் பெறிதலிற் றுப்பிதழ் விளர்த்துந்

துயிலா திருத்தலிற் பயில்விழி யிடுகியும்

உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி

தேய்த்தொறுந் தேய்த்தொறும் வாய்த்துருக் குறைந்து

நிறமிக வுறுதல் போல

இறைவன் மேனியும் ஒளியா னதே.

சானுமதி : (அரசனைப் பார்த்து) சகுந்தலை இவரால் தள்ளப்பட்டு வருந்தினாலும், அவள்

உருகுதல் தகுதிதான்.

வரை நினைந்து

அரசன் : (ஆழ்ந்த நினைவொடு மெல்லநடந்து) மான் பிணைபோன்ற விழிகளையுடைய என் காதலி எழுப்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/137&oldid=1577238" இலிருந்து மீள்விக்கப்பட்டது