உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

45

அடிகளார்க்கு அன்பராய் நெல்லையிலே திரு. மா. திரவியம் பிள்ளை என்பார் ஒருவர் திகழ்ந்தார். அவர் அடிகளாரைப் பன்முறை நெல்லைக்கு அழைப்பித்துச் சொன் மழை பொழியச் செய்தார். அடிகளாரின் அறிவுப் பயிர் வளர்ச்சிக்கு அவர் திரவியமாகவும் இருந்தார். அவர்க்கு அன்பர் திரு. செ. விசுவநாத பிள்ளை என்பார். அவர் தமிழும் சைவமும் தழைத்தோங்க வேண்டும் என்பதில் தீராக்காதலர். நம்மக்கள் எத்தனையோ புதுப்புதுத் தொழில்முறைகளில் ஈடுபடுகின்றனர். உயிர்க்கு ஊதியமாம். இப்பணியில் ஈடுபடுவார்,லரே என்னும் எண்ணம் உடையவராக இருந்தார். தம் கருத்தைத் திருவியம் பிள்ளையினிடம் வெளியிட்டார். திரவியம்பிள்ளை அடிகளார் துணையை அவாவினார். அடிகளார்எண்ணம் அரங்கர்மேல் படிந்தது.

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.”

என்பதற்கு ஏற்ப அடிகளார் அரங்கரை அணுகுமாறு ஆற்றுப்படுத்தினார். அடிகளார்வழிவந்த அவ்வாற்றுப்படை அருந்தமிழ் அரங்கர்க்கு அளப்பிலா ஆனந்தத்தேனாக அமைந்தது.

திரவியம்பிள்ளை, வழக்குரைஞர் ஒருவரிடம் எழுத்த ராகப் பணி செய்து வந்தவர். தென்னிந்திய வங்கி விதிகளைத் திறமாக அமைத்துத் தந்தவர் அவர். ஆகலின் கழக விதிகளை அருமையாய் அமைத்ார். அப்பொழுது உடனிருந்து உதவினார் இளவலார் வ. சு. சீரிய மாளிகை எழுப்புதற்கு முன்னே வரையும் வரைபடத்தில் அன்றோ அதன் அமைப்பும் அழகும் அருமையும் வளர்ச்சி வாய்ப்பும் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன.ஆலின் வித்தில் அப் பெருமரப் பகுதியெல்லாம் அடங்கிக் கிடத்தல் போல, அமைப்பு விதிகளிலேதாம் அடங்கிக் கிடக்கின்றன, ஒருநிறுவனத்தின் செயன்முறைகள் என்பது உண்மையாம். இதனை எதிர்கால வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு வகுத்த மைக்கத் துணை நின்றார், வ. சு. என்பது அவ்விளமைக்கே பெருமை தருவதாம். திட்டமிட்டுத் தெரிந்தமைந்த கழக விதிமுறை களை வழக்குரைஞர் திரு. தி. கோமதி நாயகம்பிள்ளை அவர்கள் சரிபார்த்து உதவினார்.