உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆப்பெலும்பு

10 ஆப்பெலும்பு தூக்கி (wedge core lifter) ஆகும். அணுவியலில் ஒரு முனையிலிருந்து மற்றதற்குத் தொடர்ச்சியாகவோ படிப்படியாகவோ, தடிப்பு அல்லது கடத்தம் (condu- ctance) மாறுபடும்படி, அமைக்கப்பட்ட சீரான கதிர் வீச்சு மிகுப்பிற்குப் பயன்படும் கதிர்வீச்சு வடிப்பான ஆப்பு வடிப்பான் (wedge filter) ஆகும். வெப்ப அமுக்க முறையில் மின்கடத்திக் கம்பிகளை ஓர் ஆப்பு வடிவக்கருவியைப் பயன்படுத்தி இணைக்கும் ஆப்புப் பிணைப்ப (wedge bonding) முறை எனப்படுகிறது. நூலோதி 1. தமிழ்நம்பி Theodore Baumeister, Marks' Standard Hand- book for Mechanical Engineers, eighth edn., McGraw-Hill Book Company, New York. 1978. 2. Mazda, F., Electronics Engineers' Refererence Book, Butterworth Company, London, 1983. ஆப்பெலும்பு ஆப்பெலும்பு (sphenoid bone) மனிதனின் மண்டை ஓட்டின் அடித்தளத்தில் (base of skull) மையமாக அமைந்துள்ளது. மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களைத் தனித்தனியே பிரித்துப் பார்த்தால், இவ் வெலும்பு கழுகு தன் சிறகுகளை விரித்து நிற்பதைப் போன்ற தோற்றமளிப்பதால் இதனைக் கழுகு வடி வெலும்பு என்று கூறலாம். இந்த எலும்பைச் சுற்றி மூளையின் முக்கியமான பகுதிகளும், குருதி நாளங்களும் அமைந்துள்ளன. இந்த எலும்பில் உடம்பு (body of sphenoid bone), நடுமுள் (rostrum), பெரிய சிறகு (greater wing), சிறிய சிறகு (lesser wing), உள்புறத் தகட்டுக்கால் (medial pterygoid plate), வெளிப்புறத் தகட்டுக்கால் (lateral pterygoid plate) ஆகிய பகுதிகள் அமைந் துள்ளன. ஆப்பெலும்பின் உடம்பு கனசதுர வடிவ மானது.உடம்பின் மேல் பகுதியில் உள்ள குழிவான இடத்தில் நாள்மில்லாச் சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியாகிய பிட்யூட்டரி சுரப்பி (pitutary gland) மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உடம் பின் முன் பகுதி மிகவும் மெல்லியதாகவும் தன்னுள் பல சிறிய காற்றறைகளைக் (air sinuses) கொண் டதாகவும் உள்ளது. ஆப்பெலும்பு உடம்பின் மேல்புறத்தில் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறிய சிறகுகள் இணைந்துள்ளன. இச் சிறகும் உடம்பும் சேருமிடத்தில் பார்வை நரம்புத் துளை (optic fora- men) அமைந்துள்ளது. இத்துளை வழியாகத்தான் அ. 9 7 6 5 10 படம் 1.ஆப்பெலும்பு . 3 9 முன்பக்கத் தோற்றம் ஆ. மேல்பக்கத் தோற்றம். 1. எலும்பு உடம்பு 2. நடுமுள் 3. பெரிய சிறகு 4. சிறிய சிறகு 5. உட்புறத் தகட்டுக்கால் 6. வெளிப்புறத் தகட்டுக்கால் 8. 7.பீட்யூட்டரிக் குழி பார்வை தரம்புத் துளை 9. நீள் வட்டத்துளை காற்றறைகள். 10. பார்வை நரம்பும் (optic nerve), விழியடிக் கரும் படல நடுத்தமனியும் (central artery or retina) விழிக் குழியைச் (orbital cavity) சென்றடைகின்றன. சிறிய சிறகின் மேல்பகுதி, மண்டை ஓட்டின் முன் தளத்தில் (anterior cranial fossa) ஒரு பகுதியாக அமை கின்றது. பெரிய சிறகுகள் (greater wings of sphenoid ) உடம்பின் நடுப்பகுதியோடு சிறிய சிறகிற்குச் சற்றுக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக இணைந்துள்ளன. இவை மண்டை ஓட்டு நடுத்தளத்தின் (middle cranial fossa ) ஒரு பகுதியாகவும், மேல் ஓட்டின் (vauit of the skull) ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளன. பெரிய சிறகிற்கு மூன்று பக்கங்கள் உள்ளன. முன் தோற்றத்தில் தென்படும் பகுதி விழிக்குழியின் வெளிச்சுவராக அமைகின்றது. மண்டை ஓட்டின் பக்கத் தோற்றத்தில் தெரியும் பகுதி பொட்டுக் குழிச் (temporal fossa) சுவரின் ஒரு பகுதியாக