உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்பிபோல்‌ தொகுதிக்‌ கனிமங்கள்‌ 17

நூலோதி 1. Dana, E.S., Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Milovsky, A. V., Konanov, O. V., Mineralogy and Petrography, Mir Publishers, Moscow, 1982. ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் (amphibole group of minerals) ஆக்சிஜன் உப்புக் கனிமங்களைச் (oxygen salts) சேர்ந்த சிலிக்கேட்டுகளில் ஒருவகைக் கனிமங்களான ஐனோசிலிக்கேட்டுகள் வகையைச் (inosilicate) சேர்ந்தவை. ஐனோசிலிக்கேட்டுகளில் அடங்கிய மற்றொருவகை பைராக்சின் தொகுதிக் கனிமங்கள் (pyroxene group minerals) ஆகும். அணுக் கட்டமைப்பு. ஆம்பிபோலின் அணுக்கட்ட மைப்பு (atomic structure) சிக்கலானது. இது வேதி யியல்படி, மெட்டாசிலிக்கேட்டு (Si, O1,) ஆகும். ஆனால் இரண்டு சிலிக்கான் ஆக்சிஜன் சங்கிலிகளின் சேர்க்கையால் இத் தொகுதிக் கனிமங்கள் இரண்டு Si,On சங்கிலிகளைக் கொண்டவையாகும் (படம் 1). A,M1, M2,,M3, M4 என்பன அணுக்கட்டமைப்பில் நேர்மின் அயனிகளின் இடங்கள் (cation sites) ஆம்பிபோல் தொகுதிக் கனிமங்கள் 17 ஆகும். அட்டவணையில் நேர்மின் அயனிகளின் இடங்கள் இத்தொகுதியின் பல்வேறு கனிமங்கட்குத் தரப்பட்டுள்ளன. ஆக்சிஜன் மற்றும் ஹைடிராக்சில்களோடு 10 முதல் 12 தொடர்புகளையுடைய A இருப்பிடத்தில் சோடியத்திற்கும் சில சமயங்களில் பொட்டாசியத் திற்கும் இடமளிக்கிறது. 6 முதல் 8 தொடர்புகளை யுடைய M4 இருப்பிடத்தில் X பிரிவு நேர்மின் அய னிகள் இடம் பெறுகின்றன. எண்முக (octahedral) M1, M2, M3 இருப்பிடங்களில் Y பிரிவு எதிர்மின் அயனிகள் இடம் பெறுகின்றன. M1 இருப்பிடத்தி லுள்ள நேர்மின் அயனியை நான்கு ஆக்சிஜன் அணுக்களும், M2 இருப்பிலுள்ளவற்றை ஆறு ஆக்சி ஜன்களும், M3 இன் இருப்புகளை இரண்டு ஹைடி ராக்சில், புளோரின் (OH, F) தொகுதிகளும் பகிர்ந்து கொள்கின்றன (பார்க்க, படம் 1, 2). சிறிய நேர்மின் அயனிகள் M4, M3, M2, M1 இருப்பிடங்களில் இருப்பின் கனிமங்கள் செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியைச் (orthorhombic system ) சார்ந்துவிடுகின்றன. வேதியியற் பண்பு. இத்தொகுதிக் கனிமங்களின் பொது வேதியியல் வாய்பாடு, W0=1X,YzZgOg2(OH), இதில் W என்பது சோடிய, பொட்டாசியத் தனிமங்க ளைக் குறிக்கிறது. இவை A புரையில் இடம் பெறு கின்றன. X என்பது Cat, Nat, Fes+, Mn'+, Mg2+ B Ml MI M4 A M2 M3 M2 A T2 படம் 1. ஆம்பிபோல், பைராக்சின் சுட்டமைப்புகள் OOH