உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, படிகவிளக்க 63

100/ | 001 001 ஆயமுறைகள், படிகவிளக்க 63 101 010 170 110 010 101 படம் 15. திறந்த படிக வடிவங்கள் படும் ஒரு பொதுக் கோட்டிற்கு அது படிகததின் மையப்புள்ளி வழியாகச் செல்லும்பொழுதும் அதை வளாக அச்சு (zonal axis) என்று குறிக்கலாம். இதன்படி ஒரு வளாகத்தில் உள்ள எல்லாப்ப முகங்களின் விளிம்புகர் ஒன்றுக்கு ஒன்று இணையா கவும் அவ்விளிம்புகள் வளாக அச்சிற்கு இணையாக வும் அமையும். ஒரே வளாகத்தில் அமையக்கூடிய முகங்களின் எண்வடிவச் சுட்டெண்கள் சேர்க்கப் பட்டால் அவற்றின் கூட்டுத்தொகை அலை இரண் டிற்கும் இடையே உருவாகக்கூடிய ஒரு முகத்தின் சுட்டெண்ணாக அமையும். 16ஆம் படத்தில் முகம் dy (101) உம் fz (121) உம் சேர்ந்தால் 222 அல்லது சுருங்கிய வடிவத்தில் 111 என்ற ஒரு முகம் கிடைக் கக் கூடும். அதைப்போல் m மும் (110) c யும் (001) சேர்ந்தால் 111 என்ற முகம் இடையில் உருவாகும் என்று வளாகத் தத்துவத்தின்படிக் கூறலாம். ஒரு முகம் 2 வளாகங்களுக்குப் பொதுவாக இடை டையில் அமையுமானால் அதனுடைய சுட்டெண்கள் அம் முகத்தின் கோண அளவைப் பார்க்காமல் மேற்கூறிய முறையில் எளிமையாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. 16 ஆம் படத்தில் a (100), d (101) c (001) ஆகிய உள்ளன. முகங்கள் ஒரே வளாகத்தில் இவை கிடை அச்சுக்கு இணையாக அமைந்துள்ளன. எனவே, d d 8 படம் 16. கிரைசோலைட்டு என்ற படிக வளாகம் இந்த வளாகத்தில் உள்ள பக்கங்கள் யாவற்றிற்கும் K=0 அதேபோல் b (001), k (021) h (001)c (001) போன்ற பக்கங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. ஏனென்றால் இவை யாவும் கிடை அச்சுக்கு (a) இணையாக இருப்பதால் இம்முகங்களின் பொது அடையாளக் குறியீடான hki என்பதில் n=0 ஆகும். விளிம்பு (edge). ஒரு படிகத்தின் இரு முகங்கள் சந்திக்கும் கோட்டை விளிம்பு என்கிறோம். இவ்விளிம்பு படிக அணுக்கள் வரிசை வரிசையாக அடுக்கிக் கோக்கப்பட்ட தளங்களுக்கு இணையாக இருக்கும். ஒரு விளிம்பின் இருப்பிடம் அது அடுக்கப் பட்டுள்ள வெளியில் (space) அவ்விளிம்பு உண்டாவ தற்குக் காரணமான முகங்களின் அமைப்பைப் பொறுத்தே அமையும். மூன்றுக்கும் மேலான முகங் கள் ஒரே இடத்தில் சந்திக்கும்பொழுது உண்டாகும் கோணத்தைத் திண்மக்கோணம் (solid anglc) என்று குறிப்பிடலாம். இரண்டு முகங்களுக்கு இடையே உண்டாகும் கோணத்தை முகத்திடைக் கோணம் எனலாம். இக்கோணம் உண்மையாக முகங்களுக்குச் செங்குத்தாக வரையப்பட்ட இருசெங்கோடுகளுக்கும் இடையே அமையும் கோணமாகும். இக்கோண அளவு படிக அமைப்பில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு படிகம் ஒரு குறிப்பிட்ட வேதியியல் பண்பைப் பெற்றுப் படிகமாகி இருக்குமேயானால் அவ்விதம் உருவாகும் படிகங்களின் முகத்திடைக் கோணம் மாறுவதில்லை. இதைப் பயன்படுத்தி முக அளவைக் கொண்டு அப்படிகம் எத்தன்மை வாய்ந்தது என்பதைக் கூறிவிட முடியும் என்பதால் இரு முகங் களின் இடைக்கோணத்தின் மாறாத்தன்மை விதி (law of interfacial angle) படிக இயலில் ஓர் அடிப் படை விதியாகக் கொள்ளப்படுகிறது. ஒரு குறிப் பிட்ட கனிமப் படிகத்தின் முகத்திடைக்கோணங்கள் ஒன்றாயிருந்தாலும் அது வடிவத்தில் வெவ்வேறாகத் தோன்றலாம். 17 ஆம் படத்தில் சிர்கான் (zircon கனிமத்தின் பல்வேறு படிக வடிவ வகைகளைக் (habitats) காணலாம். ஒரு படிகத்தில் எத்தனை முகங்கள் இருக்க வேண்டும் அல்லது எந்தக் குறிப் பிட்ட உருவில் அமைய வேண்டும் என்பதில் ஒரு நிலைவரம்பு (norm) ஏதும் கிடையாது. ஒரு கனிமம் எந்தச் சூழ்நிலையில் படிகமாகிறதோ அதைப் பொறுத்து அதன் உருவம், முகம், வடிவம், ஆகியவை அமையும். சில சமயங்களில் வேதியியல் உட்கூறில்