உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, வானியல்‌ 67

ஆயமுறைகள் வானியல் 61 என்பவை உருமாற்றச் சமன்பாடுகளாகும். இந்த உருமாற்றச் சமன்பாடுகளைப் பலமுறைகளில் கூறலாம். இச்சமன்பாடுகள் P(x,y,z) என்ற புள்ளியை அதே ஆய முறைகளில் உள்ள P(x',y',z) என்ற புள்ளியாக மாற்றுகிறது; மேலும், அதே வெளிக்குள் ஒரு வரைவை உருவாக்குகின்றது. இந்த வரைவு (map) ஒரு உருவத்தை மற்றொரு உருவமாக மாற்று கின்றது. காண்க, பகுமுறை வடிவகணிதம்; வடி வொத்த வரைவு: கோளக் கிளையலைகள்; வகை நுண்கணிதம்; தொகை நுண்கணிதம். ஆயமுறைகள், வானியல் பெ.வ. வானக்கோளத்தில் (celestial sphere) அமையும் விண் இருப்பிடத்தைக் குறிக்க உதவும் பொருள்களின் கோள ஆய முறைகள் (spherical co-ordinate systems ) வானியல் ஆயமுறைகள் (celestial co-ordinates) பார்வையாளரை எனப்படும். இவ்வானக்கோளம் மையமாகக் கொண்டு, தீர்மானிக்க இயலாத ஆரம் உள்ள ஒரு கோளமாகும். இதனுடைய உட்புறப் பரப்பில் விண் பொருள்களின் இருப்பிடம் உள்ள தாகக் கருதப்படுகிறது. வானக்கோளம் என்று ஒன்று புறநிலையில் நிலவவில்லை. இது ஒரு கற் பனைக் கோளமே. வான நடுவரையும் துருவங்களும் (celestial equator and poles). இருபுறமும் நீட்டப்பட்ட புவியின் சுழலச்சு வானக்கோளத்தை வெட்டும் P,P. என்ற இரு So Z1 படம் 1. வானியல் முறைகள் அ. க. 3-5அ N புள்ளிகள், முறையே, வடதுருவம், தென் துருவம் எனக் குறிக்கப்படுகின்றன. இவற்றை அச்சுமுனைகளாகக் கொண்ட வானக்கோளத்தில் அமைந்த வட்டம் OR வான நடுவரை எனப்படும். பார்வையாளரின் இடம் மையம் 0 ஆகும். மையம் வழியே வரையப்படும் செங்குத்துக்கோடு, வானக்கோளத்தை வெட்டும் புள்ளிகள், தலைக்குமேல் உள்ள Z என்ற புள்ளி வான உச்சிப்புள்ளி (zenith) என்றும், கீழே உள்ள Z என்ற புள்ளி வானக்கீழ்ப்புள்ளி (nadir) என்றும், குறிக்கப்படுகின்றன. ZZ', தொடுவானம் (horizon) வட்டம் NS க்கு அச்சாகும். மேலும் Z Z' வழியே, தொடுவானத்திற்குச் செங்குத்தாக வரையப்படும் பெருவட்டங்கள் நிலைக்குத்து வட்டங்கள் (vertical circles) என்றும், Z,Z', P,Q வழியே செல்லும் வட்டம் உச்சி வட்டம் (meridian) என்றும், உச்சி உச்சி வழியாக வட்டத்திற்கு நிலைக்குத்தாக வரையப்படும் பெருவட்டம், முதன்மை வட்டம் (prime vertical) என்றும் குறிப்பிடப்படுகின்றன. தொடுவானமும் நடுவரையும் E,W என்ற கிழக்கு மேற்குப் புள்ளிகளில் வெட்டிக்கொள்கின்றன. N, S முறையே வடபுள்ளி, தென்புள்ளி எனப்படும். இந்நான்கு புள்ளிகளும் வானக்கோளத்தின் தலையாய் புள்ளிகள் (cardinal points) எனப்படும். சூரியனின் தோற்றப்பாதையும் (ecliptic) வான நடுவரையும் ஒன்றையொன்று என்ற மேடமுதற் புள்ளி (first point of aries) யிலும், என்ற துலா முதற்புள்ளி (first point or libra) யிலும் வெட்டிக் கொள்கின்றன. இவற்றைச் சம இரவு நாட் புள்ளி கள் (equinoctial points or equinoxes) என்று குறிப் பிடுவதுண்டு. சூரியன், தன் ஓராண்டு இயக்கத்தில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது மேடமுதற்புள்ளிக்கு மார்ச்சுத் திங்கள் 21 ஆம் நாளும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும்போது துலாமுதற்புள்ளிக்குச் செப்டம்பர்த் திங்கள் 23 ஆம் நாளும் வருகிறது. வானக்கோளத்தில், விண்மீன் களின் இருப்பிடத்தைக் குறிக்கப் பொதுவாகச் சில வான ஆயமுறைகள் உள்ளன. தொடுவான ஆயமுறை (horizon system). தொடு வானத்திலிருந்து வின்மீனின் தொலைவு, SM ஐ க் கோணவேற்றம் அல்லது குத்துயரம் (altitude) என் றும், உச்சியிலிருந்து அதன் தொலைவை உச்சித் தொலைவு (zenith distance) என்றும், உச்சி வட்டத் திற்கும் விண்மீன் வழியே செல்லும் குத்து வட்டத் திற்கும் இடையே உள்ள கோணத்தைத் திசைவில் அல்லது அடிவானத்தொலைவு (azimuth) A என்றும் குறிப்பிடுகின்றனர். திசைவில் NM க்குச் சமமாகும். N இலிருந்து கிழக்கு நோக்கி, 0° இலிருந்து 360° என அளக்கப்படும். கோணவேற்றம். உச்சித் தொலைவு அல்லது திசையில் இவற்றைக் கொண்டு ஒரு லிண்மீனைக் குறிக்கலாம்.