உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்க்கிடேசி 81

பூக்களை அலையவற்றின் பெண் தேனீக்கள், குளவி கள் என்ற மயக்கத்தில் பூக்களை வந்தடைந்து இனச் சேர்க்கை நடத்துகின்றன. இந்த வகையிலேற்படும் சேர்க்கை போலிச் சேர்க்கை (pseudocopulation) என்று கூறப்படுகின்றது. இந்தச் செயலின்பொழுது ஒட்டிக்கொண்ட மகரந்தங்கள் வேறு பூக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தன் மகரந்தச் சேர்க்கை. அயல் மகரந்தச்சேர்க்கை பெரும்பாலான சிற்றினங்களிலேற்பட்ட போதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களில் தன் மகரந்தச் சேர்க்கையே ஏற்படுகின்றது. இந்தச் சிற் றினங்களில் தன்மகரந்தச் சேர்க்கை தற்செயலாகவும், பூக்கள் மலராத சிற்றினங்களிலும், அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துகின்ற உயிரினங்களில்லாத பகுதி களில் வளருகின்ற சிற்றினங்களிலும் நிகழ்கின்றது. மேலும் அயல்மகரந்தத்தின் ஏற்புடைத்தகவின்மை யாலும் (incompatibility) தன் மகரந்தச்சேர்க்கை ஏற்படக்கூடும். இவ்வகைச் சூழ்நிலைகளில் மகரந்தச்சேர்க்கை கீழ்க்காணுமாறு ஏற்படுகின்றது. மகரந்தம் ராஸ்ட்டெல்லம்மினால் பாதுகாக்கப்பட் டுத் தனித்திருந்து, பிறகு அது சூலகத்தில் இருக் கின்ற நீர்மத்தில் படிந்து வளர்ச்சியடைந்து, தன் மகரந்தச்சேர்க்கை ஏற்படுகின்றது. இன்னும் சில வற்றில் மகரந்தம் சூலகமுடியை நோக்கி வளைந்து தன்மகரந்தச்சேர்க்கை நேரிடுகின்றது. க தன் பொருளாதாரச் சிறப்பு. முக்கியமாக ஆர்க்கிட்கள் தோட்டக்கலைச் (ஏறக்குறைய 50 பேரினங்கள்) செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றில் முக் கியமான பேரினங்களாலன, Acampe; Arachnanthe; Cattleya; Coelogyne; Cymbidium; Dendrobium; Epidendrum; Laelia; Odontoglossum; Oncidium; Paphiopedilum; Rhynchostylis; Vanda; Vanilla 6761 பனவாகும். கடந்த ஒரு நூற்றாண்டில் ஏறக்குறைய 60,000 ஆர்க்கிட் கலப்பினங்கள் (hybrids) வெவ் வேறு சிற்றினங்கள் பேரினங்கள் கலப்பின் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. எ.கா. Phatocalanthe (Phaius X Calan the); Phoiocymbidium Phaius X Eymbidium ஆகியவற்றைக் கூறலாம். வானில் லின் (vanillin) என்ற மணமூட்டி, நன்கு வளர்ச்சியடைந்த ஆனால் முதிர்ச்சியடையாத வானில்லா பிளேனிஃபோலியாவின் (Vanilla planifolia) காய்கள் பதப்படுத்தி எடுக்கப்படுகின்றன. இந்த மணமூட்டி சாக்லேட்டுகள் (chocolates), கேக் குகள் (cakes), ஐஸ்கீரிம் (ice cream), மது பானங்கள் (beverages ) முதலானவற்றை மணமூட்டு வதற்குப் பயன்படுகின்றது. காலையில் இதன் காய் களைக் காயவைத்துப் பிற்பகலில் அவற்றைக் கம் பளியினால் மூடிவைக்கின்றார்கள். இரவில் காற்றுப் புகாத பெட்டிகளில் வைக்கின்றார்கள். இந்த முறை யில் பதப்படுத்தி மணமும், சுவையும் கொண்ட அ.க. 3-6. ஆர்க்கிடேசி 81 வானில்லின் எடுக்கப்படுகின்றது. மேற்கு இந்திய (West Indies) அல்லது பொம்பானா வானில்லா (Pompana vanilla), வானில்லா பொம்பான (Vanilla pompana) விலிருந்து கிடைக்கின்றது. இது போன்றே வா. டாஹிட்டன்ஸிஸ் (tahitensis) காயிலிருந்தும் வானில்லின் எடுக்கப்படுகின்றது. சிம்பீடியம் அலாய்ஃ போலியம் (Cymbidium aloifolium) பேதி மருந்தா கவும் (purgative), வாந்தி யூட்டியாகவும் (emetic) பயன்படுகின்றது. ஆர்க்கிஸ் லாத்திஃபோலியா வின் (Orchis latifolia) கிழங்குகள் மருந்திற்கும், உண்பதற் கும் பயன்படுகின்றன. இவற்றிலிருந்து நரம்புகளை வலிவு படுத்துவதற்கும், காம மூட்டுவதற்கும் (aphro- disiac) பயன்படும் மருந்து செய்யப்படுகின்றது. இவற்றை நீருடன் கலக்கும்போது கிடைக்கின்ற மூஸி லேஜ் (mucilage) வயிற்றுப்போக்கு (diarrhoea), சீத பேதி (dysentory), காய்ச்சல் ஆகியவற்றைப் போக்கு வதற்குப் பயன்படுகின்றது. வாண்டா டெஸ்ஸவாத் தாவின (Vanda tessellara) வேர்கள் செரிப்பின்மை (dyspepsia) மூச்சுக்குழல் அழற்சி (bronchitis), கீல் வாதம் அல்லது மூட்டுவாதம் (rheumatism), காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. இதன் இலைகளை அரைத்துப் பெறும் பசையை உடம்பில் தடவினால் காய்ச்சல் குணமா கின்றது. காதிலேற்படும் எரிச்சல், வேறுபலவகை யான கோளாறுகள் ஆகியவற்றைப் போக்குவதற்கு இதன் இலைச்சாறு பயன்படுகின்றது. மலேயாவில் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு நெர்வில்லியா ஆர கோவானாவின் (Nervillea aragoana) வேகவைத்த வைகளின் சாற்றைக் குடித்து நோய் ஏற்படாத வண்ணம் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார் கள். மலாக்காவில் ஓபிரோனியா ஆன்சப்ஸ் (Oberonia anceps) செடியைப் பயன்படுத்திக் கொப்புளங்களைக் குணப்படுத்துகின்றார்கள். ஸ்பைராந்த்தஸ் டய்யூரிட் டிக்கா (Spiranthes diuretica) சிறுநீர்ப்பெருக்கியாகச் (diuretic) சிலி நாட்டில் பயன்படுகின்றது. ஆசியா வின் வெப்பமண்டலப் பகுதிகள் சிலவற்றில் காஸ்ட் ரோடியாவின் (Gastrodia) கிழங்குகள் உருளைக் கிழங்கு போன்று சமைத்து உண்ணப்படுகின்றன. பல ஆர்க்கீடுகள் பசைக்குப் (glue) பதிலாகப் பயன் படுத்தப்படுகின்றன. நூலோதி எ,கோ 1. Fischer, C.E.C., Gamble's Fl. Pres. Madras, Adlard & Son, Ltd., London. 1928, 2, Hill, A.F., Economic Botany, Tata McGraw- Hill Co., Ltd., New Delhi, 1952. 3. Lawrence, G.H.M., Taxonomy of Vascular Plants, The Macmillan Co., New York, 1951. 4. The Wealth of India, CSIR Publication. New Delhi, 1984.