உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்டிக்‌ பெருங்கடல்‌ 89

(120° 140° 160° 1957 ஏப்ரல் 1951 ஏப்ரல் 80° 100° 1954 ஏப்ரல் 1950 ஏப்ரல் ஆர்டிக் பெருங்கடல் 89 -1.50-1-0.50 0 +0.50 30 31 32 33 34 350/00 MAÍ SMLO

  • செ வெப்பநிலை

25 25 50 100 881 மேல் பரப்பு நீர் பசியில் நீர் [இடை அடுக்கு நீர் 200 300 400 அட்லாண்டிக் நீர் 500 600 700 மீட்டர்கன் 310 800- 900 - 1000 1100- 1200 1300 இடை கீழ்நிலை நீர் 1400 1500- 1600- 1650 160°W படம் 1. என். பி. உருசிய ஆய்வுக் கூடத்தின் நகர்ச்சி 2 பனி நகர்ச்சியின் சராசரி வேகம் சுமார் 6-7 கி.மீட்டர்களாகும். ஒரு நாளைக்குச் உட்பாய்வும், வெளிப்பாய்வும் (inflow and outflow). வட அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து நீர் கிரீன் லாந்துக் கடல், பெரண்ட்ஸ் கடல் வழியாக ஆர்க் டிக் பெருங்கடலினுள் பாய்ந்து இடஞ்சுழியாகத் (counter clockwise) திரும்பிக் குளிர்கிறது. குளிர்ந்த நீர் கீரின்லாந்துக் கரை ஓரமாக டென்மார்க் நீர்ச் சந்தி (Denmark strait) வழியாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்து கிரீன்லாந்தின் தென் முனையருகே திரும்பி டேவிசு நீர்ச்சந்திக்குள் பாய்கிறது. இ குளிர் நீர் டேவிசு நீர்ச்சந்தியில் ஒன்று கலந்து குளிர் லாப்ராடோர் நீரோட்டம் (cold Labrador current) உருவாகி ஆர்க்டிக் பெருங்கடலிலிருந்து வெளிப்பாய்கிறது. இவ்வாறு ஆர்க்டிக் பெருங் - கடலின் உள்ளும் வெளியும்பாயும் நீரின் அளவு ஏறத் தாழ 20,000,000 - 40,000,000 க.மீ / வினாடி இருக் கலாமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதே போல் பசிபிக் கடற்புறம் (pacific side) வழியாக 1,000, 000- 4,000,000 க.மீ/ வினாடி அளவு நீர் வடக்கு நோக்கிப் பாய்கிறது. கடல் நீர் அமைப்பு. ஆர்க்டிக் பெருங்கடலில் படம் 2. ஆர்க்டிக் பெருங்கடல் நீரின் வெப்பநிலையும் உவர்மையும் (salinity) ஐந்து வகையான நீர் ஒன்றின் மேல் ஒன் றாய் அடுக்குகளாக அமைந்திருப்பதை ஆய்வாளர் கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆர்க்டிக் பெருங் கடலின் மேற்பரப்பில் 50L ஆழம் வரை யிலே - ஆர்க்டிக் மேற்பரப்பு நீர் (arctic surface water) பரவியிருக்கிறது. இந்நீரின் வெப்பநிலை கோடை 1.4 செ. ஆகவும் குளிர்காலத்தில் 1.7° செ ஆகவும் இருக்கிறது. உப்புத்தன்மை 28.8 லிருந்து 30.6%. வரை வேறுபடுகிறது. கோடையிலே பனி உரு கும்போது மேற்பரப்பில் பனிக்குக் கீழே 1 மீ கனம் உள்ள 0.5%. உப்புத்தன்மையுள்ள நீர் காணப்படு கிறது. 50 மீ - 200 மீ ஆழம் வரை உவர்ப்புச் சரிவுப் பகுதி (halocline) அமைந்திருக்கிறது. இப்பகுதியில் ஆழம் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகரிக்கிறது. ஆலோகிளைனின் மேற்பகுதியில் (50-100 மீ) -1.4 செ.லிருந்து -0.7° செ. வரை வெப்ப நிலை உள்ள பசிபிக் நீர் (pacific water) உள்ளது. இது பெரிங் கடலிலிருந்து ஆர்க்டிக் பெருங்கடலுக்குள் பாய் கிறது என்பது கனடா அமெரிக்க ஆய்வாளர்கள் முடிவு. உவர்ப்புச் சரிவின் கீழ்ப்பகுதியில் (100 - 200 மீ) - 1.5° செ. வெப்பநிலை உள்ள குளிர்ந்த இடை அடுக்கு நீர் (cold inter layer) இருக்கிறது. ஆலோ கிளைனுக்குக் கீழே (200-800மீ) நீரின் வெப்பநிலை 0.68 செ. வரை உயர்கிறது. கிரீன்லாந்து மற்றும் பெரன்ட்ஸ் கடல்களிலிருந்து ஆர்க்டிக் பெருங் கடலினுள் புகும் அட்லாண்டிக் நீரால் இவ்வடுக்கு உருவாகிறது. அட்லாண்டிக் நீரடுக்கிற்குக் கீழே