உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஆரியபட்டா (செயற்கைக்‌ கோள்‌)

148 ஆரியபட்டா (செயற்கைக் கோள்) பட்டுள்ளது. இதன் வெளிக்கூடு (outer shell) இந்துத் தான் வானியக்க நிறுவனத்தால் (Hindustan Aerona- ticals Ltd.) வலிமையான இணைப்புகளுடனும் தக்க அளவுகளுடனும் அமையுமாறு வடிவமைக்கப்பட்டது. மின்திறன் (power). இதில் காணப்படும் பலவகை மின் துகளியல் துணை அமைப்புகள்,சிலிக்கான் சூரிய மின்கலங்களாலும், நிக்கல் காட்மியம் மின் கலங்களாலும் இயக்கப்படுகின்றன. சூரிய ஒளியுள்ள வட்டணைப் பகுதியில் அவ்வொளி ஆற்றலை நேரி டையாக மின் ஆற்றலாக மாற்றி இச் செயற்கைக் கோள் சுற்றும்போது தேவைப்படும் மின் ஆற்றலைப் பெறுகிறது. நிக்கல் - காட்மியம் மின்கல அடுக்குகள் வட்டணைப்பகுதியில் சூரிய ஒளியில்லாத போது செயற்கைக் கோளுக்கு மின்சாரத்தைத் தருகின்றன. இவ்வமைப்பின் மொத்த மின்திறன் வெளியீடு 46 வாட் ஆகும். வெப்பக்கட்டுப்பாடு. செயற்கைக் கோளின் புறப் பரப்பின் வெப்பநிலை அடிக்கடி மாறிக் கொண்டி ருக்கும். அதாவது, 75°C முதல் 100°C வரை மாறிக் கொண்டிருக்கும். செயற்கைக் கோளைச் சீரான முறையில் இயக்கவும், இச் செயற்கைக் கோளின் உள்ளே ஒரே சீரான வெப்பநிலை நிலவச் செய்ய வும் இதன் மேல் அமைந்துள்ள சரியான புள்ளிகளு டன் இணைக்கப்பட்டுள்ள வெப்பக் கட்டுப்பாட்ட மைப்புகள் அமைந்துள்ளன. இவை இச்செயற்கைக் கோள் உள்வெப்பநிலை 0°C முதல் 40°C வரை அமையும்படிச் செய்கின்றன. தொலைமுறை அளவியல் (telementry). தொலை முறை அளவியல் அமைப்பு, பரந்த செய்தித் தொடர் பைத் தக்க தொடர்புக் கருவிமூலம் செய்திகளைத் தரைக் கட்டுப்பாட்டிற்கு அனுப்புகிறது. இச் செயற் கைக்கோள் சுழலும்போது40 நிமிடங்களுக்குச்செய்தி களை ஒரு பதிவு நாடாவில் (tape recorder) பதிவு செய்து, அச்செய்திகளை, திருப்பி அளிக்கும் கருவி தரைக்கட்டுப்பாட்டுத் கள் மூலம் நிலத்தில் உள்ள தொலைக் தொலைநிலையங்களுக்குத் கட்டளை அமைப்பின் உதவியால் (tele command system), பதிவுசெய்யும் நேரத்தை விட 10 மடங்கு விரைவாக அந்நிலையங்களைச் செயற்கைக்கோள் கடக்கும் போதும், தருகிறது. செய்தி வாங்கும் நிலையங்களை இச் செயற்கைக் கோள் ஒரு முறை கடக்கும்போது குறைந்த கால் அளவு இடைவெளியே அமைவதால் கதிர்வீச்சு முலம் மேற்கூறிய அமைப்புகள் செய்திகளைத் திரட்டுகின் றன. இத்துணைத் தொழில் நுட்ப அமைப்பின் ஒருங் கிணைந்த சிறப்புப் பண்பு என்னவென்றால் இதில் ஏதாவது ஓர் அமைப்பு பழுதடைந்து விட்டாலும், இச் செயற்கைக் கோள் செய்யும் பணியில் எவ்வித மாற்றமும் அடையாமலிருக்க இரண்டாவதுஅமைப்பு இயக்கி வைக்கப்படுகிறது. தரைக்கட்டுப்பாடு (ground control) இந்தத் தரைத் தொலை ஆணை அமைப்பு அடிப்படையான செயற்கைக்கோளிலிருந்துவரும் குறியீட்டுச் செயல் திறனை மாற்றுக் குறியீடுகளாக மாற்றி, செயற்கைக் கோளில் காணப்படும் 1 கிலோவாட் (1kw) வானொலி அலைவெண் கடத்தி மூலம் (148 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது) தரைக் கட்டுப்பாட் டிற்கு அனுப்புகிறது. செயற்கைக்கோளின் உணர் சட்டம் தரையிலிருந்து வரும் செய்திகளை அவை வாங்கி அமைப்புக்கு அனுப்புகிறது. இவ்வகைக் குறி யீடுகள் பின்பு பதிவு செய்யப்பட்ட உண்மையான செய்திகள் பெறப்படுகின்றன. இதற்காக இங்கு 35 வகையான தன்னியக்க ஆணைகள் உள்ளன. அவை, மின்திறன் வழங்குதலை நிறுத்தல், இயக்கல், அமைந்துள்ள கட்டுப்பாடுகள் பதிவு செய்தல், பதிவு செய்ததை ஒளிபரப்புப் பதிவு நாடாவால் இயக்கல், சுழல் இயக்கத்தைச் செயல்படவைத்தல், நெருக்கடிக் காலத்தில் இரண்டாவது அமைப்பை இயக்கவைத்தல் முதலியனவாகும். சுழல் அமைப்பு (spin system) இயக்கவியலாக இச் செயற்கைக்கோளைச் சுழல் அமைப்பில் நிலை நிறுத்த, அறுகோளக வடிவ டைட்டானிய குப்பியில், 200 வளிமண்டல அழுத்தத்தில் அடைக்கப்பட்ட ஈர மில்லா நைட்டிரஜன் வளிமத்தை ஒரு சிறு துளை மூலம் தாரையாக வெளியேற்றும் போது ஏற்படும் திருக்கம் (torque) பயன்படுகிறது. இத்தாரையானது செயற்கைக் கோளின் லெளிப்புறம் இருநிலையில் ஒத்த முறையில் எதிர் எதிர்த் திசையில் இணைக்கப் பட்ட இரு துளைகளின் ஊடாகப் பாய்கிறது. முதல் இரு ஒரு குப்பியில் உள்ள வளிமம், இச்செயற்கைக் கோள் வட்டணையில் செலுத்தப்பட்டவுடன் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் செயற்கைக் கோள் ஒரு நிமிடத்துக்கு 90 சுற்றுகள் சுற்றத் தொடங்கு கிறது. இச்சுழல் அளவு சிறுகச் சிறுக குறைந்து 25 நாள்களில் ஒரு நிமிடத்திற்கு 10 சுற்றுக்களாகக் குறைகின்றது. பின்னர் அடுத்த குப்பியிலிருந்து வளிமம் வெளிப்பட்டுச் சுழற்சி விகிதத்தை உயர்த்த வழி செய்கிறது. இம்முறையில் இச் செயற்கைக் கோளின் சுழற்சி விகிதம் நிமிடத்திற்கு 10 சுற்றுக்கள் முதல் 90 சுற்றுக்கள் வரை சுழல ஆறு குப்புகளி லிருக்கும் வளிமம் வழி செய்கிறது. காந்தமானி (magneto meters) சூரிய உணரி ஆகிய வற்றின் உதவியால் இச் செயற்கைக்கோள் அண்ட வெளியில் சுழல்கிறது. செய்முறைகள் (experiments) இச்செயற்கைக் கோள் வானியல் தொடர்பான கதிர்வீச்சு ஆய்வு முறைகளும், சூரிய இயற்பியலும் (solar physics) வளிமண்டல இயலும் பற்றிய (aeronomy) ஆய்வு கள் நடத்த ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பால்வழியிலுள்ள விண்மீன்களிலிருந்து வரும் கதிர்