உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ஆரை நரம்பு

164 ஆரை நரம்பு கையின் பின்பாகத்தை அடைந்து பொதுவாக நான்கு பின்பக்க விரலுச்குரிய நரம்புகளாகப் பிரி வடையும். தசைக்கு ஆழமாகச் செல்லும் இறுதி நரம்புக் கிளை தொடங்கும் இடத்தில் இருந்த ஆரை எலும் பிற்கு வெளிப்புறமாக, உள்ளங்கையை முன்புற மாகத் திருப்ப உதவும் தசையின் (supinator) இரு தளங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட தசை நார்களுக்கு இடையாகச் சென்று கீழ்க்கையின் பின்பாகத்தை அடையும். பின்பு முதலில் கீழ்க்கையின் பின்பாகத் தில் ஆழமாகவும், வெளிப்புறமாகவும், உள்ள தசைப் படைகளிற்கிடையே கீழ் நோக்கிச் செல்லும். ஆனால் கீழ்க்கையின் அரைப் பாகத்திற்குச் சற்றுக் கீழ், தசைகளுக்குள் ஆழமாகச் சென்று ஆரை ஆரத்தி எலும்புகளுக்கு இடையிலான மென் சவ்வின் பின் பாகத்தின் மேல் கீழ் நோக்கிச் சென்று மணிக்கட்டு எலும்புகளின் மேல் பாகத்தில் தட்டையாகி முடி வடையும். இந்நரம்புக்கிளை எலும்புகளுக்கிடையி லான மென் சவ்வின் பின்பாகத்திற்கு மேல் வரு வதால் இதனைப் பின்பக்க எலும்புகளுக்கிடையி லான நரம்பு என்றும் அழைப்பர். ஆரை நரம்பி லிருந்து உருவாகும் கிளைகளைத் தசைக்குரிய நரம்பு கள், தோலுக்குரிய நரம்புகள், மூட்டிற்குரிய நரம்பு கள் என வகைப்படுத்தலாம். தசைக்குரிய நரம்புகள். உட்புறமாக உருவாகும் நரம்புக் கிளைகள் (medial branches) முத்தலைத் தசையின் உட்புறத் தலைக்கும் (medial head) நீள் தலைக்கும் செல்கின் றன. ஆரை நரம்பு முத்தலைத் தசையின் வெளிப்புறத் தலையிலுள்ள சிறிய பள்ளத்தினூடே செல்லும் போது பின்பக்கக் கிளைகள் (posterior branches ) உருவாகி முத்தலைத் தசையின் நடுத்தலைக்கும், வெளித்தலைக்கும், முழங்கைத் தசைக்கும் (anconeus ) செல்லும். வெளிப்பக்கத் தசைக்கு இடையிலான மென் சவ்விற்கு முன்பாக ஆரை நரம்பிலிருந்து உரு வாகும் வெளிப்பக்க நரம்புக் கிளைகள், மேற்கை ஆரைத்தசை கையைப் பின்பக்கமாக விரிக்க உதவும் நெடும் ஆரை மணிக்கட்டு நீள்தசை என்பவற்றின் வெளிப்புறத்திற்கு வரும் தசைக்குள் ஆழமாகச் செல்லும் இறுதி நரம்புக்கிளை, உள்ளங்கையை முன்பக்கமாகத் திருப்ப உதவும் தசையினுள் நுழை யும் முன், மேற்கூறிய தசைக்கும், கையைப் பக்கமாக விரிக்க உதவும் சிறிய ஆரை மணிக்கட்டு நீள்தசைக்கும் (extensor carpi radialis brevis) கிளைகளை உண்டாக்கும். பின்பு தசையினூடே வெளி வந்தவுடன் மூன்று சிறிய கிளைகளை, விரல் நீட்டி (extensor digitorum) சுண்டு விரல் நீட்டி (extensor digitiminimi) கையைப் பின்பக்கமாக விரிக்க உதவும் அரந்தி மணிக்கட்டு நீள்தசை (exten- sor carpi ulnaris) என்பவற்றிற்குத் தருகிறது. நீண்ட பின் 8 4 3 2 5 ஆரை நரம்பு 6. I. ஆரைநரம்பு 2. முத்தலைத் தசையின் நீள்தலை 3. உட் புறத் தலை 4. வெளிப்புறத் தலை 5. மேற்கை எலும்பு மேற்கைத் தசை 7. மேற்கை ஆரைத் தசை 8. நெடிய ஆரை மணிக்கட்டு நீள்தசை சுட்டை விரல் நீட்டி (extensor pollic longus) ஆள் காட்டி விரல் நீட்டி (extensor indicis) என்பவற்றிற் கும் வெளிப்பக்கமாகச் செல்கிறது. நீண்ட கட்டை விரல் அகட்டி (abductor pollicis longus), சிறிய கட்டை விரல் நீட்டி (extensor pollicis brevis) என்ப வற்றிற்கும் செல்லும். தோலுக்குரிய நரம்புகள். இது மேற்கையின் பின் பக்கத் தோலுக்குரிய நரம்பு அக்குளில் தொடங்கி மேற்கையின் கீழ் அரைப்பகுதியின், பின்பக்கத் தோலிற்குச் செல்லும் சிறிய கிளையாகும். மேற் கையின் கீழ்ப்பாகத்தில் வெளிப்புறத் தோலுக்குரிய நரம்பு முக்கோணத் தசை (deltoid) மேற்கை எலும் புடன் இணையும் இடத்திற்குச் சற்றுக் கீழாக முத் தலைத் தசையின் வெளிப்புறத் தலையை ஊடுருவி வந்து மேற்கையின் கீழ் அரைப்பாகத்தில், வெளிப் புறத் தோலிற்குச் செல்கின்றது. கீழ்க்கையின் பின் பக்கத் தோலுக்குரிய நரம்பு, மேற்கையின் கீழ்ப் பாகத்தில் வெளிப்புறத் தோலுக்குரிய நரம்பில்