உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்கஹால்கள்‌ 171

ROH + n CHg-CH, → R(OCH,CH), OH பல்லத்தாக்சிலேற்றம் பெற்ற ஆல்கஹால் ஹாலஜனேற்றம். ஹைட்ரஜன் ஹாலைடுகள் அல் லது ஃபாஸ்ஃபரஸ் மூ ஹாலைடுகளுடன் (phos- phorous trihalides) ஆல்கஹால்கள் வினைப்படுவ தால் அல்க்கைல் ஹாலைடுகள் விளைகின்றன. RCI + H₂O ROH + HC! 3ROH + PC', 3 RCI + P(OH), கார உலோகங்களுடன் வினை. சோடியம், பொட் டாசியம் போன்ற கார உலோகங்களுடன் வினையுறு வதால் ஹைட்ரஜன் இடப்பெயர்ச்சி அடைந்து உலோக அல்க்காக்சைடுகள் (metal alkoxides) உண்டாகின்றன. 2 ROH + 2 Na → 2 RONa + H, சல்ஃபோனேற்றம். புகையும் சல்ஃப்யூரிக் அமிலத் துடன் ஆல்கஹால்கள் வினைப்படுவதால் அல்க்கைல் சல்ஃபேட்டுகள் உண்டாகின்றன. ROH + H,SO, + SO, → ROSOH + H,SO, ஓரிணைய ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றத்திற் குட்படுத்தும்பொழுது, முதலில் ஓர் ஆல்டிஹைடும் பின்னர் ஓர் அமிலமும் உண்டாகின்றன. இவற்றில் உள்ள கார்பன் அணு எண்ணிக்கை, ஆல்கஹாலின் கார்பன் அணு எண்ணிக்கைக்குச் சமம். ஈரிணைய ஆல்கஹால் முதலில் ஒரு கீட்டோனையும் பின்பு ஒரு கார்பன் அணுக் குறைந்த அமிலத்தையும் தரு கிறது. மூவிணைய ஆல்கஹால் எளிதில் ஆக்சிஜ னேற்றமடைவதில்லை. கடினமான சூழ்நிலையால் கார்பன் அணு எண்ணிக்கை குறைந்த அமிலம் உண்டாகிறது. இவ்வாய்வு மூவகை ஆல்கஹால் களை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுகிறது. இது நிறைவுறா ஆல்கஹால் வரிசையில் உள்ள முதல் சேர்மம் வைனைல் ஆல்கஹால் (vinyl alcohol). இதன் அமைப்பு CH,=CH-OH. இது நிலையற்றது; எல்ட்டிகாஃப் விதிப்படி (Eltekov's rule) அசெட்டால்டிஹைடாக (CH,CHO) மாற்றம் அடை கிறது. அடுத்துள்ள ஆல்கஹால் அல்லைல் ஆல்க ஹால் (ailyl alcohol); இதன் அமைப்பு CH,=CH- CH₂OH. CH,OH,இதன் வேதி வினைகள் அதிலுள்ள ஹைட்ராக்சில் தொகுதி, இரட்டைப் பிணைப்பு ஆகிய இரண்டுக்கும் உரியவை. ய இரு ஹைட்ரிக் ஆல்கஹாலில் முக்கியமானது எத்திலீன் கிளைக்கால். இது ஒற்றை ஹைட்ரிக் ஆல்கஹாலின் வினைகளைக் கொண்டது. இதில் இரு ஹைட்ராக்சில் தொகுதிகள் உள்ளமையால் இது இருவகைப் பெறுதிகளைத் தருகிறது. கிளைக் காலுடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்து ஆல்கஹால்கள் 171 வெப்பப்படுத்தும்போது டைஆக்சேன் (dioxane) என்னும் வளைய ஈதர் உண்டாகிறது. டை ஆக்சேன் ஒரு கரைப்பானாகப் பயன்படுகிறது. மூ ஹைட்ரிக் ஆல்கஹால் வரிசையில் முதன்மை யாகவும் முக்கியமாகவும் உள்ளது கிளிசரால் (கிளி சரின்). இதன் மூலக்கூறில் இரண்டு ஓரிணைய ஆல்கஹால் தொகுதிகளும் ஓர் ஈரிணைய ஆல்க ஹால் தொகுதியும் உள்ளன. இதை அடர் நைட்ரிக் அமிலத்துடன் சூடுபடுத்தும் பொழுது நைட்ரோ கிளிசரின் (nitroglycerine) என்னும் சேர்மம் கிடைக் கிறது. து அமட்டால் (amatol) என்ற வெடி மருந்து தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. கிளி சராலுடன் ஃபாஸ்ஃபரஸ் பென்டாக்சைடு (P,0,) சேர்த்துச் சூடுபடுத்தும்பொழுது நீரிறக்கம் அடைந்து அக்ரோலின் (acrolein) என்னும் நிறைவுறா ஆல்டி ஹைடு உண்டாகிறது. கிளிசராலுடன் ஃபார்மிக் அமிலத்தைச் சேர்த்து வெப்பப்படுத்தும் பொழுது அல்லைல் ஆல்கஹால் உண்டாகின், றது. மிக அதிக பயன்கள். நீருக்கு அடுத்தபடியாக மாகப் பயன்படும் கரைப்பான் ஆல்கஹால்தான். எண்ணெய், கொழுப்பு, வண்ணம், வார்னிஷ், பிசின், அல்க்கலாயிடு முதலியவற்றைக் கரைப் பதற்கு ஆல்கஹால் பெரிதும் பயன்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆல்கஹால் மிகவும் முக்கியமானது. ஆல்கஹாலில் பெருமளவு, ரப்பரைத் தொகுப்பு முறையில் தயாரிக்கப் பயன் படுகிறது. மேலும், மெருகெண்ணெய், நகப்பூச்சு, கறையகற்றி, வண்ணம், வாசனைப் பொருள், செயற் கைத் தோல், சவர்க்காரம், இயங்குபடங்கள், வெடி மருந்து, சாயம்,மை, மயக்க மருந்துகள், நச்சு நீக்கிகள், பூச்சிக் கொல்லிகள் முதலிய பல்வே பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. பறு மெத்தனால் கரைப்பானிலும், அருந்தத் தகாத இயல்பு நீக்கப்பட்ட சாராயத் (denatured spirit) தயாரிப்பிலும், சாயங்கள், மருந்துப் பொருள்கள், வாசனைப் பொருள்கள் தயாரிப்பிலும், ஆல்கஹால் எரிபொருள்கள் தயாரிப்பிலும் பெரிதும் பயன் படுகிறது. எத்தில் ஆல்கஹால் பொருள்காட்சிச் சாலை யிலும் மருத்துவமனைகளிலும் உடல்களையும் உறுப் புகளையும் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைக்கப் பயன்படுகிறது. மேலும் மேலும் விளக்குகள், அடுப்புகள் ஆகியவற்றில் எரிபொருளாகப் பயன்படுகிறது. வெப்பமானிகளிலும் ரசமட்டம்(spirit level) போன்ற கருவிகளிலும் பயன்படுகிறது. மேலும் ஈதர், குளோ ரோஃபார்ம், அயோடோஃபார்ம், ஒளிபுகும் சவர்க் காரங்கள், வண்ணங்கள், வார்னிஷ்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இவை தவிர எத்தனால் மதுபானமாகப் பயன்படுகிறது. மதுபானங்களில் எத்தனாலுடன் நீர், வாசனைப்