உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்‌ஃபாக்‌ கதிர்கள்‌ 191

வரு தொட்டு இக்கனிமம் அகழ்ந்தெடுக்கப்பட்டு கிறது. நேவாஸ்காட்டியாலில் பிட்டுமன் கரியைச் செறிவூட்ட இக்கனிமம் பயன்படுகிறது.ஒளிர்வூட்டும் வளிமம் தயாரிக்க இக்கனிமம் பயன்படுகிறது. நூலோதி சு.ச. Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985. ஆல்ஃபாக் கதிர்கள் கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிவிடப்படும் கதிர்வீச்சுகள் பொதுவாக அதிக ஊடுருவும் திற னைப் பெற்றிருக்கின்றன. ஒளிப்படத் தகடுகளைப் பாதிக்கின்றன. வளிமங்களை அயனியாக்கம் செய் கின்றன. ஒளிர்திரையில் சுடர் ஒளிர்வை உண்டாக் குகின்றன. இக்கதிர்வீச்சில் உள்ள தனிப் பண்புகள் வாய்ந்த ஆல்ஃபா(a), பீட்டா(B),காமா(7), என் னும் மூன்று வகைக் கதிர்களின் ஊடுருவும் திறனைப் பகுத்துணர்ந்து நிறுவியுள்ளார் கியூரி அம்மையார். ஆல்ஃபாக் கதிர்கள் மிகக் குறைந்த ஊடுருவும் திற னைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, சில செ.மீ அளவுக் காற்றுத் தடுப்பினாலோ 0.1 மி.மீ தடிப் புள்ள அலுமினியத் தகட்டினாலோ பெரிதும் தடுக் கப்படுகின்றன. ஒரு காந்தப் புலத்தின் உதவியால் B- கதிர்களை ஒருபுறமும், நீ-கதிர்களை எதிர்ப்புறமும், 7-கதிர் களை விலகாமல் செல்லும்படியும் செய்து அவற் றைத் தனித்தனியே பிரிக்க இயலும் என்பது கியூரி அம்மையார் மேற்கொண்ட சிறு ஆய்வு மூலம் அறுதி யிட்டுக்காட்டப்பட்டது. விலக்கமுறக் a - கதிர்கள் காந்தப்புலத்தினால் கூடியவை; நேர்மின் துகள்களைக் கொண்டவை, மேலும் இவை சில பொருள்களை ஒளிரச் செய்கின் றன. இந்த ஒளிர்தலை ஒரு குறைந்த திறன் கொண்ட நுண்ணோக்கியால் பார்த்தால், தனித்தனிச் சுடர் களாகக் காணலாம். இதன்மூலம் a-கதிர்கள் தனித் துகள்களால் ஆனவை என்று தெரியவருகிறது. ஆக. இத் தனித் துகள்களின் இனம், பண்பு ஆகியவை &- கதிர்களின் பண்புகளாகும். இத் தனித் துகள்களைப் பற்றி அறியும் பணியை 1903-ஆம் ஆண்டில் எர் னஸ்ட் ரூதர்ஃபோர்டும் (Ernest Rutherford) மற்ற அறிஞர்களும் மேற்கொண்டனர். தனி & துகள்களைக்காணல். க துகள்களைப் பற் றிய ஆய்வுகளில், அவை கதிரியக்கப் பொருள்களி லிருந்து வெளிப்படும் போதே அவற்றைத் தனித் தனியே கண்டறியப் பொருத்தமான கருவிகளும் முறைகளும் தேவைப்படுகின்றன. அவை மூன்று ஆல்ஃபாக் கதிர்கள் 191 வகைப்படும். கைகர் துகள் எண்ணி முறை, முகிற்கல முறை, ஒளித்தெறிப்பு முறை என்பனவாகும். கைகர் &துகள் எண்ணி.இந்த எண்ணியில் a-துகள் நுழையும்போது ஏற்படும் அயனிகளின் மோதலினால் உண்டாகும் அயனியாக்கம் அதிகரிக்கின்றது. இவ் வாறு அதிகரித்த அயனிகள், மின்னூட்டமானி வழி யாகக் கணநேர மின்னோட்டம் ஒன்று செல்லுமள வுக்கு உய்யநிலை (critical) மின்னழுத்தத்தைக் குறைக் கின் றன. இந்தக் கணநேர மின்னோட்டம் மின்மானி யில் ஒரு கணநேர விலக்கமாகப் பதிவு செய்யப்படு கிறது. எனவே, தனித்த & துகளின் நுழைவு பதிவு செய்யப்படுகிறது. இம்முறை முதலில் கைகரால் (Geiger) அமைக்கப்பட்டு, ரூதர்ஃபோர்டால் பயன் படுத்தப்பட்டது. ஒளித் தெறிப்பு முறை. இது முதலில் வில்லியம் குரூக்ஸ் (William Crookes) என்ற அறிவியலறிஞரால் உருவாக்கப்பட்டது. இது நுட்பமானதும், துல்லியம் மிகுந்ததும் பெருமதிப்பு வாய்ந்ததும் ஆகிய ஒரு முறையாகும். துத்தநாகப் படிகங்கள் பூசப்பட்ட ஒரு திரையில் & - கதிர்கள் படும்படிச் செய்தல், ஒவ்வொரு துகள் மோதும் போதும் ஒவ்வொரு ஒளித்தெறிப் புக் காணப்படுகிறது. இம்முறை & துகள்களை எண் ணுவதற்கு ஏற்றதாகும். முகிற்கலமுறை. விரிவுக்கலம் (expansion chamber) ஒன்றின் வழியே a துகள்கள் சரியான நேரத்தில் கடக்கும்பொழுது, அவற்றின் வழியிலுள்ள வளி மத்தை அயனியாக்கம் செய்து அப்பாதைகளில் சுவடு களை ஏற்படுத்துகின்றன. இச்சுவடுகள் ஒவ்வொன் றும் & துகளின் பாதையைக் குறிக்கிறது. இச்சுவடு களைப் பின்னர் ஓய்வாக ஆராய்ந்தறியலாம். Z W R7 (X) படம் 18-துகளின் மின்னூட்டத்தை அளவிடும் மின்மானி