ஆல்ஃபாக் கதிர்கள் 193
ஆரத்தை ABC, அல்லது ABC, என்ற புள்ளிகளின் மூலம் அறியலாம். BeV my² mx என்பது, காந்தப் புலத்தில் R & துகள்களின் ஓட்டத்தைப் பொருத்தமாக விளக்கும் சமன்பாடாகும். அதாவது my BR. B என்பது காந்தப்புலத்தின் பெருக்கு அடர்த்தி, ( flux density ) m & துகளின் பொருண்மை(mass), e என்பது துகளின் மின்னூட்டம், B,R இவற்றின் தெரிந்த மதிப்பைக் கொண்டு emv இன் மதிப்பைக் காணலாம் செய்முறையில் கண்டுபிடிக்கப்பட்ட e-m,e ஆசிய வற்றின் மதிப்பிலிருந்து, க - துகளின் பொருண்மை 6.62 X 10-27 கி.கி. எனக் கணக்கிடப்படுகிறது. இது ஹைட்ரஜன் அணுவின் பொருண்மையைப்போல் நான்கு மடங்காகும். எனவே துகள் ஹீலியம் அணுவின் பொருண்மையுள்ள ஈரலகு மின்னோட்டம் கொண்ட ஒரு துகள் எனத் தெரிய வருகிறது. இத னால், & துகள், இரு எலக்ட்ரான்களையும் இழந்த ஒரு ஹீலியம் அணு, அதாவது வெறும் ஹீலியம் அணுக்கரு, என்பது தெரிய வருகிறது. இம்முடிவு ரூதர்ஃபோர்டின் மற்றுமொரு ஆய்வு மூலம் உறுதி யாக்கப்பட்டது. துகள்களின் வேகம். பொதுவாக B துகள்களின் வேகம், அவற்றின் தோற்றுவாய்ப் பொருள்களுக் கேற்ப, நொடிக்கு 1.45 X 2. 2 X 101 மீட்டர் வரை வேறுபடுகிறது. ரூதர்ஃபோர்டின் ஆய்வுகளின்படி ரேடியத்திலிருந்து வரும் & துகளின். வேகம் 2 × 10f மீ. ஆகும். & துகள்களுக்கும் மற்ற அணுக்களுக்கும் இடையே யுள்ள சிறு வேறுபாட்டைத் தவிர ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத் தனிமத்திலிருந்து கிடைக்கும் எல்லா துகள்களும் ஒரே வேகத்தையும் ஒரே ஆற்றலையும் கொண்டுள்ளன என முதலில் நம்பப்பட்டது. ஆனால் ஆய்லில் கண்ட நீள இடைவெளி & துகள்கள் (long range a particle), a கதிர் அலை மாலைகள் (a ray spe- ctra) போன்ற உண்மைகளிலிருந்து மேற்கண்ட முடிவு தவறானது என்றும், ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத் தோற்றுவாயிலிருந்து கிடைக்கும் & துகள்கள்கூட வெவ்வேறு வேகத்தைக் கொண்டு உள்ளன என்றும் பின்னர் அறியப்பட்டது. இக்கண்டுபிடிப்பு அணுக் கருவின் நிலை (state) உள்ளமைப்பு ஆகியவை பற்றி முடிவெடுக்க வழிவகுத்தது. அணுக்கருவினுள் உதுகள் கள் நிலை கொள்ளத் தனித்தனியான ஆற்றல் மட் டங்கள் இருக்கின்றன என்பதே அம்முடிவாகும். க துகள்களின் இயங்கெல்லை. துகள்களுக்கு ஒரு தனிச்சிறப்புடைய பண்புண்டு. அதாவது, அவை பருப்பொருளால் உட்கவரப்படும்போது, இயங் கெல்லை என்று கூறப்பட்ட ஒரு குறிப்பிட்ட உய்ய அ.க. 3-13 ஆல்ஃபாக் கதிர்கள் 193 நிலைத் தொலைவுக்குப்பிறகு திடீரென்று நிறுத்தப் படுகின்றன. இத்தொலைவிற்கு அப்பால் & துகளின் அயனியாக்கத்திறன், ஒளிப்படத் தகட்டைப் பாதிக் கும் செயல், ஒளிர்தல் பெறச் செய்யும் விளைவு ஆகிய மூன்று பண்புகளும் ஒருங்கே மறைந்து விடுகின்றன. இவ்வுண்மை 1904 ஆம் ஆண்டில் பிராக் (Bragg), கிளீமன் (Kleeman) என்ற இரு அறிவியலறிஞர் களால் கீழ்க்காணும் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. D C A B E × படம் 3. & துகள்களின் இயங்கெல்லையை அளக்கும் ஆய் கருவி படம் 3 இல் A என்பது ஒரு காரீயப்பெட்டியின் அடித்தளம். B என்பது ஒரு சிறு துளை, C, D என்பன முறையே ஒரு அயனியாக்க அறையின் உலோக வலையும் தகடுமாகும். இவ்விருதகடுகளும் ஒன்றுக் கொன்று இணையாகவும், அருகிலும் அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றிற்கிடையே மின்கல அடுக் கின்.உதவியால் ஒரு நிலையான மின்னிலை வேறு பாடு நிறுவப்படுகிறது. D என்ற தகடு ஒரு மின் மானியுடன் இணைக்கப்படுகிறது. & துகள்களின் தோற்றுவாய்க்கும் அயனியாக்க அறைக்குமிடையே யுள்ள தொலைவு மாற்றக்கூடியது. A என்னும் இடத்தில் சிறிதளவு கதிரியக்கப் பொருள் வைக்கப் பட்டால் B என்ற துளை வழியே கூம்பு வடிவக் கற்றையாக வெளிப்படும் & கதிர்கள் அயனியாக்க அறையுள் நுழைந்து அயனியாக்கம் செய்கின்றன. இந்த அயனியாக்கம் மின்மானியால் அளவிடப்படு கிறது. மின்மானி காட்டுகின்ற மின்னூட்டக்கசிவு வீதம் கதிரியக்கப் பொருளின் இருப்பைச் சாரா நிலை அடையும் வரை அயனியாக்க அறைக்கும் கதிரியக்கப் பொருளுக்கும் இடையே உள்ள தொலைவு அதிகமாக்கப்படுகிறது. அதன் மூலம் அவற்றின் இயங்கெல்லை கண்டுபிடிக்கப்படுகிறது.