உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 ஆற்றல்‌, நிலக்கரி

452 ஆற்றல்,நிலக்கரி இயற்பியல் அளபுருவின் (parameter) வேறுபாடுகள் வகை நிலக்கரியைப் பிரிப் கழிவிலிருந்து எந்திர அடிப்படையைக் கொண்ட ஈர்ப்பு பதற்கான விசையில் இயங்கும் கருவிகளிலும் மையவிலகு விசையைப் பயன்படுத்தும் கருவிகளிலும் பயன்படுத் தப்படுகின்றன. இக்கருவிகள் நிலக்கரியைக் கழுவு வதற்குக் காற்றையோ நீர்மங்களையோ பயன்படுத் துகின்றன. சுரங்கக் கட்டுப்பாடுகளில் நிலக்கரியில் ஈரம் இருக்க வேண்டிய காரணத்தினால், காற்றினால் கழுவப் பெறும் முறை ஒரு சில தேவைகளுக்கு மட் டுமே பயன்படுத்தப்படுகின்றது. மூல நிலக்கரி தேவை யான அளவிற்கு உலர்ந்துள்ளபோது, காற்றைக் கொண்டு கழுவப் பெறும் சில வகைகளில், காற்று மாசுறுதலைக் கட்டுப்படுத்துவதற்காக, தூசுப் பொருள்களை முழுமையாகத் திரட்டும் அமைப் பினைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகின் றது. இவ்வாறாகச் சில நிலையங்கள் காற்றினால் கழுவப்பெறும் முறையினைக் கையாளுகின்றன. நீர்ப் பற்றாக்குறையின் காரணமாக, மேற்குப் பகுதியில் மைந்த நிலக்கரி வயல்களில் காற்றினால் கழுவப் பெறும் போக்கு அமைவதைக் காரணலாம். கழுவப் பெறும் முறைகளை மூன்று வகைகளா கப் பிரிக்கலாம். அவையாவன, நீரியலாகப் பிரித்தல், அடர்ந்த ஊடுபொருள் வழியாகப் பிரித்தல், விலகு விசை வழியாகப் பிரித்தல் என்பனவாகும். மைய நீரியல் முறையில் பிரிப்பது கீழ்க்கண்டவாறு நிகழும். துடிப்பினைக் கொண்ட நீர்மப் பாய்வில் அடுத்தடுத்த விரிவாக்கம் நெருக்கங்களின் காரண மாய்ப் படுகைத் துகள்கள் அடுக்குகளாக அமைகின் றன. தொடக்கத்தில் உருவாக்கப் பெற்றபோது, நீர் நிறைந்த தொட்டியில், பொருள்கள் நிரப்பப்பட்ட கூடை மேலும் கீழுமாக நகர்த்தப்பட்டது. மிகவும் புதிய நீரியலாகப் பிரிக்கும் முறையில், காற்றுத் தாக்கு விசைக் கருத்து பயன்படுத்தப்படுகின்றது. இம்முறை யில், அருகிலமைந்த மூடப்பட்ட அறையிலிருந்து காற்றினை அழுத்தத்தில் செலுத்தி நீர் நகர்த்தப்படு கின்றது. இம் முறையில் பல நுண்மையாக்கம் செய் யும் முறைகள் அமைகின்றன. இவற்றில் தரமான மெக்நல்லி நார்ட்டன் கழுவும் முறையும் அடங்கும். அடர்த்தியான இடையீட்டுப் பொருளைக் கொண்ட கொள்கலங்களில், மிக நுட்பமான பிரிப்புகள் செய்யப்படுகின்றன. பிரிக்கப்படுவதற்கேற்ற ஒப் படர்த்தியைக் கொண்ட ஓர் இடையீட்டுப் பொருளில் நிலக்கரியைக் கலந்து அரை நீர்மக் கலவை உண்டாக் கப்படுகின்றது. எடை குறைந்த நிலக்கரி மிதக் கின்றது. கழிவுப் பொருள்கள் நீர்மத்தினடியில் சென்று விடுகின்றன. இதன் பின்னர் இவ்விரு பகுதிகளை யும் எந்திர வகையில் பிரித்திடலாம். கருத்துவடிவில், எந்த ஓர் அளவிலான துகளையும், அடர்ந்த இடை யீட்டுப் பொருளைக் கொண்ட முறையில் செயல் முறைப்படுத்தலாம். செயல் முறையில், இந்த அளவு கள் 0,5 மில்லி மீட்டரிலிருந்து 15 செ.மீ. வரையி லாக இடைவெளியைக் கொண்டிருக்கும். கரிம நீர். மங்கள்,உப்புக் கரைசல்கள், காற்றூட்டப்பட்ட பொருள்கள், மிதக்க வைக்கும் நீர்மங்கள் ஆகியன வணிக இடையூட்டுப் பொருள்களாகப் பயன்படு கின்றன. நடைமுறைத் தேவைகளுக்கு மிகவும் உகந்த தாயும், செலவு குறைந்ததாயும், மிதக்க வைக்கும் நீர் மங்கள் அமைகின்றன. அடர்ந்த இடையீட்டுப் பொருளைக் கொண்ட முறையில், பெரும்பான்மை நிலக்கரி எந்திர வகையில் தூய்மையாக்கப் பட்ட பின்னர் நீரும் மேக்னட்டைட்டும் கொண்ட மிதக்க வைக்கும் கலவையில் பிரிக்கப்படுகின்றன. யான நிலக்கரியைத் தூய்மையாக்கம் செய்யும் முறை யில் அண்மையில் மையவிலகுவிசை வழி கையாளப் பட்டது. தொடக்கத்தில் உருவாக்கப் பெற்றவாறு, இக்கருவி அடர்ந்த வேலை செய்யும் இடையீட்டுப் பொருளைப் பயன்படுத்துகின்றது. மிகப் புதிய தொகுதிகள் செயற்கையான ஈர்ப்பு விசை சார்ந்த மிதக்க வைக்கும் முறையினைப் பயன்படுத்துவ தில்லை. அதற்குப் பதிலாக நீர்மச் சுழற்காற்று அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஈர்ப்பு விசையின் காரணமாய், அடர்ந்த துகள்கள் பக்கத்து சுவரின் அடியில் செல்லும்போது, தடங்கலமைந்த படிவுறும் படுகை உருவாவாதற்கு ஏற்ப இத்தொகுதி வடிவமைக்கப்படுகின்றது. அடர்த்தி குறைந்த துகள் கள், பளுவான படுகையினை ஊடுகுவ இயலாமற் போவதால், முதன்மையான நீரோட்டத்திற்கே சென்று தொகுதியின் மேற்புறமாக வெளியேற்றப் படுகின்றன. நிலக்கரியைக் கழுவுவதற்கு மேசைகள் கூடப் பயன்படுத்தப்படுகின்றன. முன்னும் பின்னும் எதி ரெதிராக இயங்கும் மேசையின் செயற்பாட்டில் உயர் ஈர்ப்பினைக் கொண்ட நிலக்கரித் துகள்கள் அடியில் அடுக்காக அமைகின்றன; குறைந்த ஈர்ப்பு விசையினைக் கொண்ட துகள்கள் படுகையின் மேலே சென்றடைகின்றன. குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட துகள்கள் மேலெழும் போது இவை தேக்கப் பள்ளத்தின் குறுக்காக நகர்த்தப் பெற்று, மேசைத் தளத்தின் தாழ்ந்த பக்கத்தை நோக்கிப் பாயும் நீரினால், உயர்ந்த ஈர்ப்புப் பொருள்களினின்று குறைந்த ஈர்ப்புப் பொருள் கள் பிரிக்கப்படுகின்றன. கழிவுப் பொருள்கள் தேக்கப் பள்ளத் தொட்டிகளில் அடைபடுகின்றன. மேசைத் தளத்தின் அசைவினால், கழிவுப் பொருள் கள் நகர்ந்து மேசையின் முனையில் வெளியேற்றப் படுகின்றன. கழிவுத் துகள்களிலிருந்து, நுண்ணிய நிலக்கரித் துகள்களைப் பிரித்தெடுப்பதற்கு, மிதத்தன் முறை அடிக்கடிப் பயன்படுத்தப் படுகின்றது. நிலக் கரி நீர்மக் கலவையின் வழியாக, நுண்ணிய பரவ விடப்பட்ட காற்றுக் குமிழிகள் செலுத்தப்படு கின்றன. நுண்ணிய நிலக்கரித் துகள்கள், காற்றுக்