உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 455

ஆற்றல், நிலக்கரி 455 படம் 15. தேக்கத் தொட்டிவழிசெல்லும் நிலக்கரி ஏற்றிய தொடர்வண்டி. வகையாகவோ, மின்திறன் இயங்கு அமைப்பின் வழியாகவோ வண்டியின் கதவுகள் மூடப்படுகின் றன. நகரும்போதே சுமையிறக்கம் செய்யும் அமைப் புகள் செலவு மிக்கனவாய் அமைந்தாலும் பல நன் மைகளைக் கொண்டுள்ளன. பள்ளப் பகுதியை நோக்கி ஒரு மணிக்கு 4 முதல் 5 மைல்கள் வரை வேகத்தில் தொகுதி வண்டித் தொடர் நகரும்போது, 100 வண்டிகளைக் கொண்ட அவ்வண்டித் தொடர் படம் 16 டென்னசீயில், புல்ரன் (Bull Run) என்ற இடத்தில் டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரக் குழுவினரது நீராவி நிலைய தில் ஒரு தொடர் வண்டியானது துள்ளும் வண்டிகளைக் (hopper cars) கொண்டு வேகச் சுமையிறக்கம் செய்வதைக காணலாம். 10000 டன்கள் அளவு மொத்தச் சுமையினை 15 நிமி டங்களில் சுமையிறக்கம் செய்யும். தொடங்குவதற்கான நேரத்தையும் சேர்த்துக் கொள்ளும்போது, மொத்தச்சுமையிறக்கம் செய்யும் நேரம் 1 மணியளவில் அமையும். அதே 100 வண்டி களைக் கொண்ட தொகுதி வண்டித் தொடரானது ஒரு நேரத்தில் இரண்டு வண்டிகளுக்கான சுழற்சி முறையிலமைந்த கீழே கொட்டும் அமைப்பினால் கீழே கொட்டும்போது, அவ்வண்டித் தொடர் முழு வதையும் சுமையிறக்கம் செய்ய 4 முதல் 5 மணிகள் வரையில் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு வண்டிக்கு மட் டும் சுழற்சி முறையிலமைந்த கீழே கொட்டும் அமைப் பினால் கீழே கொட்டச் செய்யும்போது, அவ்வண் டித் தொடர் முழுவதையும் சுமையிறக்கம் செய்ய 8 முதல் 12 மணிகள் வரையில் ஆகும். படம் 16 இல் வண்டி நகரும் போதே சுமையிறக்கம் செய்யும் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. நிலக்கரி நீர்மக்கலவையைக் கொண்டு செல்லும் குழாய் வழிகள். அமெரிக்காவில் 1981 ஆம் ஆண்டி லேயே நிலக்கரியும், நீரும் சேர்ந்த கலவை எக்கி மூல மாகக் குழாய் வழியில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 1914 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் ஆற்றின் கரையில் அமைந்த படகுகளில் இருந்து மின்திறன் நிலையத்திற்கு நிலக் கரியானது நீரின் வழியாக 20 செ.மீ குழாய் வழியில்