உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 461

ஆண்டுகளில் நிலக்கரிச் சோதனையிடுதல் புதிய தொரு சிறப்புப் பெற்றது. நிலக்கரியின் இயற்பியல், வேதியியற் பண்புகள் வேறுபட்டிருந்தாலும் அதன் மிகச் சிறிய அளவான பண்பு, வளிமமாக்க முறைக் கும் நீர்மமாக்க முறைக்கும் தீமை பயப்பதாய் உள்ளது. அளவீடுகளின் ஏற்றுக் கொள்ளப்படும் திறமை குறுகிய இடைவெளியினைக் கொண்டதாயும் ஒரே மாதிரியான மூலப்பொருள் மிகவும் முக்கிய முடையதாயும், மூலப்பொருள்களின் துள்ளல் நெருங் கிய கட்டுப்பாடு மிகவும் முக்கியமுடையதாயும் அமைகிறது. நெருக்கமான விவரக் குறிப்புகளின் வேறுபாட்டின் காரணமாய் விளைவுகள் கடுமையாய் பாதிக்கப்படும். அதனால் பொருளாதாரச் சிக்கனத் துடன் செயல்படக்கூடிய நிலக்கரியை மாற்றும் முறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். இவை உருக்குலைவின் வழியாகச் சாதனம் ஊறுபடுவதற்கு வழிவகுக்கும். இத்தகைய ஊறுபாடுகள் தோன்றும் போது அவற்றைச் சரிசெய்வதற்குச் சிலநேரங்களில், நிலையத்தின் இயக்கத்தைச் சில மணிகள் முதல் பல நாள்கள் வரையில் மூடச்செய்வது தேவையாகலாம். பயன்படுத்தும் நிலக்கரி மூலப்பொருள், நிலக்கரியின் கழிவு வெளியேற்றங்களைப் பெரிதும் பாதிப்பதுடன், வளிமச் செயற்பாட்டுத் தொகுதிகளிலும், மீட்கும் தொகுதிகளிலும் இயக்கச் சமநிலையைச் சீர்குலைத்து நெருங்கிய சுற்றுப்புறக்கட்டுப்பாட்டிற்கு இடர்ப் பாட்டினையும் உண்டாக்கும். வு நிலக்கரியை மாற்றும் செயல்முறைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில பத்தாண்டுகள் வரையிலும் நிலக்கரி அல்லது கோக்கிலிருந்து பெறப்பட்ட செயற்கை வளிமம், வெப்பப்படுத்தும் எரிபொருளாகப் பயன்படுத்தப் பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சீன நாட்டவர் இயற்கை வளிமத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தினர். முதன்முறையாக இயற்கை வளிமத்தை வணிக முறையில் பயன்படுத்தியதற்கான சான்று 1802 ஆம் ஆண்டிலேயே உள்ளது. அப் போதே இயற்கை இயற்கை வளிமத்தைப் பயன்படுத்தி இத்தாலியில் ஜெனோவா என்ற இடத்தின் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. இயற்கை வளிமத் தைப் பயன்படுத்தும் முதல் நிறுவனம் 1858 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. பிரிடோனியா (நியூயார்க்) வளிம ஒளி நிறுவனம் இயற்கை வளி மத்தை உண்டாக்கும் கிணறுகளிலிருந்து பேரளவில் இயற்கை வளிமத்தை ஆக்கம் செய்து, அக் கிணற்றி லிருந்து பல நூறு மைல் தொலைவில் அமைந்த சமுதாயத்தினருக்குக்கிடைக்கச் செய்ததற்குமுன்னரே குழாய் வழியாகத் தொழிற்சாலைக்கும் வணிகருக்கும் குடியிருப்பு நுகர்வாளர்களுக்கும் வளிம் பொருளைச் செலுத்தும் மாபெரும் நலங்களை நன்கு எரி ஆற்றல், நிலக்கரி 451 அறிந்திருந்தனர். இவ்வாறாசப் பல பத்தாண்டுக ளாகச்செயற்கை வளிமம் பயன்படுத்தப்பட்டது.நிலக் கரி அல்லது கோக், நீராவியினால் தரம் குறைவான வளிமத்தை ஆக்கம் செய்வதற்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளிம உற்பத்தித் தளங்கள் கொண்டு உள்ளூர் வளிமம் தயாரிக்கும் தொழிற் சாலை அமைந்தது. உள்ளூர் வளிமத்தை உற்பத்தி செய்யும்போது, காற்று நீராவிக் கலவையினைக் கொண்டு, நிலக்கரி அல்லது கோக்கினைக் கொண்ட வெப்பமான ஆழந்த படுகையின் மீது ஊதி வளிம ஆக்கம் செய்தனர். இம்முறையின் விளை பொருளாக கார்பன் மோனாக்சைடும், சிறிய அளவுகளில் நைட்ரஜனும், சிறிதளவு கார்பன்-டை- ஆக்சைடும் கிடைத்தன. வளிமத்தில் நைட்ரஜனின் விழுக்காடு மிகவும் உயர்ந்து காணப்பட்டதால் அதன் வெப்பப்படுத்தும் மதிப்பு குறைந்தது (ஒரு பருமன் அடிக்கு 125 முதல் 150 பி.வெ. அ. இத னுடன் ஒப்பிடும்போது இயற்கை வளிமத்தின் வெப்ப மதிப்பு ஒரு பருமன் அடிக்கு 900 முதல் 1200 பி.வெ.அ. ஆகும்). நிலக்கரி அல்லது கோக்கி லிருந்து சில நேரங்களில் எண்ணெய்ச் செறிவுடனும் பின்னர் இயற்கை வளிமச் செறிவுடனும் நில நீர் வளிமம், காற்று வளிமக் கலப்பினைக் கொண்ட நீர் வளிமம் ஆகியன ஆக்கம் செய்யப்பட்டன. ஒரு காலத்தில் இயற்கை வளிமம் பேரளவில் கிடைத்தாலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளிலும் உலகின் மற்ற சில பகுதிகளிலும் குறையாத வழங்கீடு இருந்ததாலும், தயாரிக்கப்பட்ட வளிமங்கள் வேகமாக வழக்கற்றுப் போய்விட்டன. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் 1940 முதல் 1970 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் இயற்கை வளியப் பயன் பாடு 730./ ஆக உயரலாயிற்று. இந்த ஆண்டுகளின் போதுதான், வளிமத் தொழிற்சாலை 313 டிரில்லியன் பருமன் அடி இயற்கை வளிமத்தை ஆக்கம் செய்தது. உலகில் மற்றைய பகுதிகளில் உள் நாட்டில் இயற்கை வளிமம் கிடைக்காதபோது, நகர வளிமம் (town gas) என்றழைக்கப்படும் தயாரிக்கப்பட்ட வளிமம் பயன் படுத்தப்பட்டது. தற்போதைய நிலக்கரி வளிம மாக்கம் செய்யும் புதிய தொழில் நுட்பம் ஐரோப்பாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் அறி யப்பட்டதாகும். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் 1930 முதல் 1940 வரையிலான ஆண்டுகளில், நிலக் கரியை வளியமாக மாற்றம் செய்யும் சில திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. இதற்கு எடுத்துக் காட்டாக மிசௌரியில், லூசியானாவில் அமைந்த,. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் சுரங்கங்களுக்கான குழுவின் திட்டத்தைக் கூறலாம். 1970 ஆம் ஆண்டில் புதிய நிலக்கரிக்கான தொழில் நுட்பத்தில் செயற்கை வளிமம் என்ற சொற்றொடருக்குப் பதிலாக மா.இ.வ. (மாற்று இயற் கைவளிமம் அல்லது செயற்கை இயற்கை வளிமம்