உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 467

படுத்துவதற்கு ஏற்றதாய் அமைகிறது. 160' செ. வெப்பநிலையில், நீராவியுடன் இவ்வளிமம் செறிவூட் டம் பெறுகின்றது. வெளியேற்றம் செய்வதற்கான பிரச்சினைகளைக் குறைப்பதற்குச் சாம்பல் துகள் வடி வில் எடுக்கப்படுகின்றது. வளிமமாக்கம் செய்யும் முறையின் வெப்பத் திறன் உயர்ந்து காணப்படு கின்றது. 90% க்கும் அதிகமான நிலக்கரியின் உள் ளுறை வெப்பம் மீட்கப்படுகின்றது. வளிமமாக்கத் தின் போதும் விளைந்த வளிமத்தைக் குளிர்விக்கும் போதும், நிலைத்த அழுத்தத்தில் பருமன் அளவு உயர்வு தோன்றுகின்றது. இவ்விளைவு, இதனை அடுத்த வளிமச் சுழலி முறைகளில் பயன்படுத்த உதவுகின்றது (காண்க, படம் 21). வெப்பத்தை மீட்கும் அமைப்பில் வளிமத்தைக் குளிர வைத்த பின்னர் வணிகமுறையில் கிடைக்கப் பெறும் உட்கவர்தல் முறைகளைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் சல்பைடினை நீக்கம் செய்யலாம். இதுவே கந்தக நீக்கம் செய்வதற்கான. நல்லதொரு அணுகுமுறையாகும். ஏனெனில் சுந்தகச் சேர்மங்கள், அழுத்தப்பட்ட வளிமத்தில் ஹைட்ரஜன் சல்பை டாகத் தோன்றுகின்றன. அவை வளிமண்டில் அழுத் தத்தில் சல்பர்-டை-ஆக்சைடாகத் தோன்றுவதில்லை. இவ்வாறு நீக்கப்பட்ட ஹைட்ரஜன் சல்பைடு வளிமம் கிளாஸ் உலையில் தனிமக் கந்தகமாக மாற்றம் செய்யப்படுகின்றது. ஹைட்ரஜன் சல்பைட் நீக்கத்திற்குத் தேவையான திறன், வளிமத்தின் உணர்வெப்பத்தினால் வழங்கப்படுகின்றது. இதன் விளைவாகத் தூய எரிபொருள் வளிமம் 16 kscm அழுத்தத்தில் கிடைக்கின்றது. இதனை நீராவிக் கொதி கலன்களுக்கும் மேம்படுத்தப்பட்ட திறன் சுழற்சிகளுக்கும் உலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். 1950 ஆம் ஆண்டின் நடுவில் தென் ஆப்பிரிக்கக் குடியரசின் சாசல்பர்கில் அமைந்த தென் ஆப்பிரிக்க நாட்டிற்கான நிலக்கரி, எண்ணெய், வளிமக் கழக நிறுவனம் உள் நாட்டில் கிடைத்த நிலக்கரிகளின் தொடர்பாக லூர்கி முறையைப் பயன்படுத்தியது. தென் ஆப்ரிக்கா மிக்க அளவிலான கனிமப் பொருள் களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் முதன்மையான எண்ணெய்ப் படிவுகள் இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. இவ்வாறாக 1920 ஆம் ஆண்டின் நடுவிலேயே நிலக்கரியிலிருந்து ஹைட்ரோக் கார்பன்களை ஆக்கம் செய்யும் இயலத்தக்க தன்மை மீது தென் ஆப்பிரிக்க அறிவியல் அறிஞர்களும் பொருளாதார வல்லுநர்களும் ஆர்வம்கொண்ட னர். நிலக்கரி ஆக்கமும், அதனைச் செயல் முறைப் படுத்தலும் ஓர் ஆண்டிற்கு 5 மில்லியன் டன்கள் அளவில் அமைகின்றன. நிலக்கரி குறைந்த தரத்தி னைக் கொண்டதாயும், அதனுடைய இயல்பான சாம்பல் அளவு 35% அளவினைத் தாண்டக் கூடிய அ.க. 3-30அ ஆற்றல், நிலக்கரி 467 தாயும், அதனுடைய சராசரி கலோரி மதிப்பு 8300 பி. வெ. அ ) பவுண்டு கொண்டிருப்பதாயும் அமை கின்றது. நிலக்கரிப் படுகையின் உள் அமைந்த நிலக்கரிவளங்கள் 1 மில்லியன் டன்கள் அளவில் இருக்கும், சாசல் நிலையத்தில் நிலக்கரியிலிருந்து பல டன்கள் அளவில் உண்டாக்கப்பட்ட பொருள்கள் எரிபொருள் வளிமம், புரோப்பேன்/புரோப்பை லீன் பூட்டேன்/பூட்டைலீன், பெட்ரோல், ஒலிஃபின் கள், எடைகுறைந்த உலை எண்ணெய், மெழுகு எண்ணெய், மிருதுவான, இடைப்பட்ட மற்றும் கடின மெழுகுகள் மீத்தேனால், ஈத்தேனால், புரோப்பே னால், பூட்டேனால், பென்ட்டேனால், அசெட்டோன். மெத்தில் எத்தில் கீடோன் ஆகியன. ஹைட்ரோக்கார் பன் வேதியியற் பொருள்களை ஆக்கம் செய்வதற்குத் தொடக்க நிலக்கரி வளிமமாக்க முறைக்குப் பின்னர் கூடுதலான முறைகள் தேவையாகின்றன. சரியான உண்மையாதெனில் இப்பொருள்கள் யாவும் அடிப் படை மூலப் பொருளான நிலக்கரியிலிருந்து பெறப் பட்ட தென்பதாகும். மொத்த சாசல் அமைப்பின் ஒரு பகுதியான மேற்கூறப்பட்ட ரெக்டிசால் தொகுதி படம் 22 இல் காட்டப்பட்டுள்ளது. புதிய நிலக்கரித் தொழில் நுட்பத்தில் இயங்கும் இப்பெரிய அமைப்பு, மிகவும் முன்னேற்றமடைந்த நிலையில் உள்ளது. பல நிலக்கரித்தொழில் நுட்பத் திட்டங்கள். 1970 ஆம் ஆண்டின் மத்தியில், மேலே கூறப்பட்ட லூர்கி படம் 22. தென் ஆப்பிரிக்கக் குடியரசின் சாசல் பர்கி லமைந்த நிலக்கரி வளி மாக்க நிலையத்திலமைந்த ரெக்டிசால் (வளிமத்தூய்மையாக்கும்) பகுதி