உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 477

வளர்ச்சித் திட்டம். இத்திட்டம் சு. எ .ஆ.உ என வழங்கப்படுகின்றது. நிலக்கரியைச் செயற்கை நில எண்ணெயாகவும் தூய எரிபொருள்களாகவும் மாற்றம் செய்வதற்கு இம்முறை பயன்படுகின்றது. படம் 28 இல் திட்டவடிவில் காட்டப்பட்டுள்ள இம்முறை, கழகத்தினருக்கும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் நிலக்கரி ஆராய்ச்சிக்கான அலுவலகத் திற்கும் இடையே நிகழ்ந்த 12 ஆண்டுத்திட்டத்தின் விளைவாகத் தோன்றியதாகும். பல்லாண்டுகளாக மேசை அளவிலான ஆராய்ச்சி ஆய்வுகளிலிருந்து இத்திட்டம் ஒரு மணிக்கு 100 பவுண்டு ஆக்க அள வினைக் கொண்ட தொகுதியாக உருவாக்கப்பட் டுள்ளது. இந்தச் சிறியதொகுதியில் 12 வேறுபட்ட நிலக்கரி வகைகளைக் கொண்டு கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதி 1 நாளைக்கு 36 டன்கள் அளவு நிலக்கரி ஆக்கம் செய்யும் முன்னோடி நிலையம் வடிவமைத்துக் காட்டுவதற்கு உதவியது ஆக்க அளவில் முன்னோடி நிலையம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்நிலை யத்தின் இயக்கக் காலத்தில் 20000 டன்கள் அளவில் பிட்டுமன் இயல்பு நிலக்கரிகளும் பழுப்பு நிலக்கரி களும் பதப்படுத்தப்பட்டன. வடிவமைக்கப்பட்ட இம்முறையில் தொடர்ந்த நீர்மப்படுத்தப்பட்ட படுகைகளில் நொறுக்கப்பட்டு உலர்த்தப்பட்ட நிலக் கரி (0.3 செ.மீ) வெப்பப்படுத்திச் சிதைக்கப்படுகின் றது (ஆக்சிஜன் இல்லாமல் ஆற்றல், நிலக்கரி 477 வெப்பப்படுத்தப்படு கின்றது). அடுத்தடுத்த உயர்வெப்ப நிலைகளில் ஒவ் வொரு வெப்பப்படுத்திச் சிதைக்கும் கருவியிலும் நிலக்கரித் துகள்கள் அதிர்ச்சிமுறையில் வெப்பப்படுத் தப்படுகின்றன. வகைமை வெப்பநிலை இடை வெளிகளாவன, 316°, 427°, 5388, 871 செ. முதல் அடுக்கிலுள்ள நிலக்கரி வளிம் எரிப்பினைக் கொண்ட முன்வெப்பப்படுத்தும் உலையிலிருந்து பெறப்பட்ட வளிமத்தைக் கொண்டு வெப்பப்படுத் தப்பட்டு நீர்மமாக்கப்படுகின்றது. ஆக்சிஜனையும் நீராவியையும் செலுத்தி நான்காம் அடுக்கில் கரிப் பொருளை எரித்தும் வளிமமாக்க வினைகளினாலும் உண்டாக்கப்பட்ட வெப்பத்தினைக்கொண்டு 2.3 4 ஆம் அடுக்குகள் வெப்பப்படுத்தப்படுகின்றன. இந்த வெப்பமான நீர்மமாகும் வளிமங்கள் பாய்விற்கு எதிர்ப்பாய்வாகச் சென்று, எண்ணெய் வளிமங்களாகவும் எடைகுறைந்த ஹைடிரோக் கார்பன்களாகவும் வெளிவரும் நிலக்கரிப் பொருளி லிருந்து எளிதில் ஆவியாகும் பொருள்களைத் திரட்டு கரிப் கின்றன. 427°செ வெப்பநிலையில், உலையின் இரண்டாம் அடுக்கிலிருந்து வளிம விளைபொருள்கள் வெளியேறுகின்றன. இவ்வளிமம் அம்முறையின் துணை விளைபொருளான நீரினால் நேரடியாகலே குளிர வைக்கப்படுகின்றது. ஒருவடிகலத்தில் வடிக் கப்பட்ட எண்ணெயும் நீரும் பிரிக்கப்பட்டு,நீர், குளிர்விக்கும் மீள்சுழற்சிக்காகப் பயன்படுத்தப்படு வளியம் தூய்மையாக்கத்திற்கு நொறுக்கப்பட்ட நிலக்கரி (-½") வளிமத்தை அழுத்தித் வளிமம் COED வளிமம் துடைத்தலும், செயல் விளைபொருள் முறைப்படுத்துதலும் வெப்பப்படுத்திச் சிதைத்தலுக்கான வளிமம் எண்ணெய் மீட்பும் வடிசுட்டும் பகுதியும் COED எண்ணெய் நீர்மமாகும் வளிமம் 111 HE நிலப்படுகை ஹைடிரஜனைக் கொண்டு செயற்படுத்துதல் IV ஆக்சிஜன் நீராவி செயற்கை நில எண்ணெய் கரி விளைபொருள் படம் 29. நிலக்கரியை வெப்பப்படுத்திச் சிதைத்தலுக்கான முறை