உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 479

குறைவழுத்த வேறுபாட்டுடனான், வேறுபாட்டுடனான, பல அடுக்கு களைக் கொண்ட நீர்மமாக்கப்பட்ட படுகையில் நிலக்கரியை வெப்பப்படுத்திச் சிதைக்கும் முறை இங்கும் பயன்படுத்தப்படுகின்றது. வளிமப் பொரு ளின் ஒரு பகுதியை மாற்றியமைத்து ஹைடிரஜனைக் கொண்டு செயற்படுத்தும் முறைக்குத் தேவையான ஹைடிரஜன் வழங்கப்படுகின்றது. இந்த வளிமத்திலி ருந்து எடைகுறைந்தஹைடிரோக் கார்பன்களை ஆவி முறையில் பிரித்த பின்னர் கரிப்பொருள் வளிமமாக் கத்திலிருந்து பெறப்பட்ட செயற்கை வளிமத்துடன் பதப்படுத்தப்படுகின்றது. எடை குறைந்த ஹைடி ரோக் கார்பன்களை விற்கும் பொருள்களாக ஆக்கம் செய்யலாம் அல்லது வளிம விளைபொருளின் பண் பினை மேம்படுத்த அதனுடன் கலப்புப்பொருளைச் சேர்க்கலாம். வெப்பப்படுத்திச் சிதைக்கும் நிலையில் 538° செ. வெப்பநிலையில் வெப்பக் கரிப்பொருள் வளிமமாக்கிக்கு ஊட்டப்படுகின்றது, பெரும் அளவு ஆக்சிஜன் தேவையை நீக்கவும், செயற்கை வளிமத் துக்குள் காற்றிலிருந்து நைட்ரஜனைச் செலுத்தாமல் கரிப்பொருளின் ஒரு பகுதியினைக் காற்றைக் கொண்டே எரிக்கவும் வெப்பச் சுமை முறை வடிவ மைக்கப்பட்டுள்ளது. குழாய் வழியில் செலுத்துவதற் கேற்ற பண்பினைக் கொண்ட வளிம் ஆய்வில் கீழ்க் கண்டவை தெரியவருகின்றன. மீதேன் 93 விழுக்காடு கார்பன் மோனாக்சைடு 0.7 விழுக்காடு ஹைட்ரஜன் 0.41. வேதிவினையில் 0.4. வேதிவினையில் செயல்படாத வளிமங்கள் 3.3 விழுக்காடு ஆகும். 1970 ஆம் ஆண் டின் நடுவில் கோகேஸ் உருவாக்க நிறுவனத்தி னரால் இம்முறையானது முன்னோடி நிலைய நிலையி லேயே இருந்தது. இம்முறையைப் பயன்படுத்தும் முன் னோடி நிலையம் ஒன்று நியூஜெர்சியில், பிரின்ஸ்ட் டனில் வேதியியல் ஆராய்ச்சி மையக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மற்றொரு நிலையம் இங்கிலாந் தில் லெதர்ஹெட்டில், பிரிட்டன் நாட்டு நிலக்கரிப் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான இணைந்த சோத னைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கண்ணோட்டத்துடன் காணும்போது வணிக அளவி லான ஆக்கம் முன்னோடி நிலைய ஆய்வுகளின் முன் னேற்றத்தைச் சார்ந்துள்ளது. இதனைப் பின்பற்றி பெரிய அளவில் முன்னோடி நிலையம் அல்லது செய்து காட்டும் நிலையத்தைக் கட்டி இயக்குவது தேவையா கின்றது. பின்னர்க் கூறப்பட்டபெரிய வணிக நிலையம் பெரிதாக அமைவதாலும், செயல்முறை நிலையச் சாதன வழங்கீட்டிற்கான கால அளவு பெரிதாக இருப்பதாலும் வடிவமைப்பதற்கும் கட்டுமானத்திற்கு மான காலமதிப்பீடுகள் நீண்டிருக்கின்றன. செயற்கை எண்ணெய் முறை. இம்முறையின் வழி யாக, உயர் கந்தக அளவினைக் கொண்ட நிலக்கரி களைத் தூய எரிவிப்பினைக் கொண்ட நீர்ம எரி பொருள்களாகப் பொருளாதார வகையில் சிக்கனமாக மாற்றம் செய்யவைக்கலாம். அமெரிக்க ஒன்றிய நாடு ஆற்றல், நிலக்கரி 479 களின் சுரங்கங்களுக்கான குழுவின் (பிட்ஸ்பர்க்கில் அமைந்த) ஆற்றல் ஆராய்ச்சி மையத்தினரால் இம் முறை உருவாக்கப்பட்டதாகும். 450° செ. வெப்ப நிலையிலும் 2000 முதல் 4000 பவுண்டுகள் ஒரு சதுர அங்குல அளவிலும் அடைக்கப்பட்ட படுகையைக் கொண்ட உலையில் வினையூக்கியின் முன்னிலையில் கொந்தளிப்பான ஹைடிரஜன் பாய்வுடன் மீள் சுழற்சி எண்ணெயுடன் சேர்ந்த நிலக்கரி நீர்மக்கலவை வினைபுரிகின்றது. இந்தச் சூழ்நிலையில் நிலக்கரி, நீர்ம ஹைட்ரோக்கார்பனாக மாற்றப்படுகின்றது. மேலும் கந்தகம் வளிம ஹைட்ரஜன் சல்பைடாக, நீக்கம் செய்யப்படுகின்றது. வளிமங்களிலிருந்து நீர்மங்களும், வினைப்படாததிண்மப்பொருள்களும் பிரிக்கப்பட்டுப் பின்னர் விரைவேகச் சுழற்சியால் திறன் ஆக்கத் திற்குத் தேவையான குறைந்த - சுந்தகத்தையும் குறைந்த சாம்பலையும் வெளியேற்றும் நீர்ம எரிபொருள்கள் பெறப்படுகின்றன. நிலக்கரியைப் பயன்படுத்தும் எரிபொருளாக மாற்றம் செய்வதற்கு முதலில் வடிவமைக்கப்பட்ட போதிலும், பொருளா தாரச் சிக்கனத்தைக் கருதி, இம்முறையைப் பயன் படுத்திச் செயற்கை நில எண்ணெயையும் வடிக்கப் பட்ட எரிபொருள்களையும் அல்லது நாப்தாவை யும் ஆக்கம் செய்யலாம். இம்முறையின் முதன்மைக் கூறுகள் படம் 31 இல் காட்டப்பட்டுள்ளன. வினையூக்கியின் உருண்டை கள் அடுக்கப்பெற்ற உலையில் ஒரே சமயத்தில் ஹைடிரஜனும், விளைபொருள் எண்ணெயின் ஒரு பகுதியில் தூளாக்கப்பட்ட நிலக்கரி சேர்ந்த நீர்மக் கலவையும் செலுத்தப்படுகின்றன. இதன் விளை வாகப் பெறப்படும் பாய்வு, வளிமத்தைப் பிரிக்கும் அமைப்பிற்குள் செலுத்தப்படுகின்றது. இங்கு வளி மங்களிலிருந்து நீர்மங்களும், வினைப்படா திண்மப் பொருள்களும் பிரிக்கப்படுகின்றன. விரைவேகச் சுழற்சியைக் கொண்ட எந்திரத்தில் நீர்மப்பாய்வு செலுத்தப்பட்டு, கலத்திற்கான. வினைப்படாத திண்மப் பொருள்கள் பிரிக்கப்படுகின்றன. விரை வேகச் சுழற்சியில் பெறப்பட்ட நீர்மப்பொருள் மாசற்ற எரிபொருள் எண்ணெயாகும். விரைவேகச் சுழற்சியைப் பயன்படுத்தும் எந்திரத்திலிருந்து திண் மப் பொருள்கள், வெப்பப்படுத்திச் சிதைக்கும் கரு விக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இக்கருவி கூடுதல் அளவில்மாசற்ற எரிபொருள் எண்ணெயை யும் கனிமப் பொருளுடன் கரியாக்கப்பட்ட பொரு ளையும் பெரும்பாலும் கொண்ட எஞ்சிய பொருளை யும் வழங்குகின்றது. இந்த எஞ்சியபொருள் வளிம மாக்கிக்கு ஊட்டப்பொருளாக வழங்கி, இம்முறைக் குத் தேவையாகும் ஈடுசெய்யும் ஹைடிரஜன் தயாரிக் கப்படுகின்றது. இம்முறையின் தேவைக்குப் போதிய ஹைடிரஜனைத் தயாரிக்க வளிமமாக்கம் செய்யும் கருவிக்குச் சிறிதளவு நிலக்கரி சேர்க்கப்படுகின்றது. நிலக்கரியை நீர்மமாக்கும்போது உருவாக்கப்பட்ட