உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அற்றல்‌, நிலவெப்ப 485

கின்றது. உலகின் ஒரு சில நல்வாய்ப்புடைய பகுதிகள் நீங்கலாக, உலகின் ஆற்றல் தேவைகளுக்கு நில வெப்ப ஆற்றல் பேரளவில் நன்மையினை வழங்க இயலாது. நிலத்தகத்திலிருந்து நிலப் புறப்பரப்பிற்கு வெப் பம் கடத்துதலின் வீதம் சராசரியாக 1 நொடிக்கு ஒரு சென்ட்டிமீட்டருக்கு 1.5 கலோரி ஆகும்.ஓர் ஆண்டுக் காலத்தில் நிலக்கோளத்தின் மொத்தப் பரப்பிலும் வெளிவரும் இவ்வெப்பத் தொடர் 1020 கலோரிகளுக் கும் அதிகமானதாகும். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பாறைகளிலுள்ள வெப் பத் தேக்கம் 6 x 1024 கலோரிகள் என மதிப்பிடப்பட் டுள்ளது. இவ்வெப்பத்தில் பெரும்பான்மையான அள வைப் பெற இயலாமையினால் இந்த அளவு பொரு ளற்றதாகின்றது. நில வெப்ப ஆற்றலை மீட்பதற்கு ஏற்றவாறு, நில வெப்பம் நிலவெப்பத்தேக்கங்களில் செறிந்திருக்க வேண்டும். மேலும் இவ்வெப்பம் நில இயல் நிகழ்ச்சிகள் (geological processes) வழியாக நீண்டகாலமாகத் திரண்டுத் தேக்கி வைக்கப்பட்டி ருக்க வேண்டும். பின்னர் உலகின் சில பகுதிகளில் மட்டுமே தக்க நிலஇயல் கட்டமைப்பு நிலத்தடியில் அமையும் போது, அவை பயன்படுத்தத் தக்க நில வெப்பத் தேக்கங்களாக உருவாகின்றன. தற்போதுள்ள லார்டரல்லோ வயலிற்கு (Larde- rello field) அருகில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலத்திலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத் திலும் குளித்தலுக்கான குளங்களை வெப்பமூட்டு வதற்கு மட்டுமல்லாமல் பிற பயன்பாடுகளுக்கும் நில வெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவது இத்தாலி நாட்டில் தொடங்கப்பட்டது. லார்டரல்லோ வய லும், அண்மையில் நில வெப்ப ஆற்றலைப் பெறும் இடமான அமியாட்டா மலையும்(Mt. Amiata)இத்தா லிக்கு மேற்குப் புறத்தில் பைசாவிற்கு அருகில், அமைந்துள்ளன. வெப்பமான குளங்களிலிருந்து (hot pools) போரிக் அமிலத்தைப் (boric acid) பெறுவ தற்காக ஆழம் குறைந்த துளைகளிலிருந்து (shallow bore wells) நீராவியும், எரிமலைப் பகுதித் துளையி லிருந்து வெளிப்படும் நீராவியும் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன. இம் முறையில் போரிக் அமி லத்தைப் பெறுவதற்கான தொழிற்சாலை பல்லாண் டுகளாக நிலவி வந்துள்ளது. 1904 ஆம் ஆண்டில், நில வெப்ப ஆற்றலைப் பெறும் வயலின் சொந்தக் காரரான இளவரசர் பியரோ கான்ட்டி (Prince Piero Conti) உள்ளூர் மின் வழங்கீட்டு நிறுவனத் துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நிலத்தடியில் இயற்கையில் கிடைக்கும் நீராவியினைக் கொண்டு நீராவிப் பொறியையும் (steam engine) மின் ஆக்கியையும் (generator) இணைத்தார். இத் தகைய இணைப்பு வெற்றிகரமாக அமைந்ததால், 1913 ஆம் ஆண்டு, 250 கிலோ வாட் திறன் கொண்ட முதல் நில வெப்பத் திறன் மின்நிலையம் . ஆற்றல், நிலவெப்ப 486 geothermal power plant) நிறுவப்பட்டது. நில வெப பத் திறன் வழியாக மின்ஆக்கம் செய்யும் பயன் பாடு - உயர்ந்ததனால் 1975 ஆம் ஆண்டுவரை சரி யாக 405 மெகா வாட்டுகள் அளவில் நிறுவப்பட்ட திறன் ஆக்க அளவு அமைந்தது. பல் நோக்குடைய பயன்பாட்டுடன் பேரளவி லான புதுமுறை உருவாக்கங்கள் லார்டரெல்லோ வயலால் அமைந்தன. தொடக்கக் கால உருவாக்கத் தில் மின்திறன் ஆக்கத்துடன், நில வெப்பப் பாய்மங் களிலுள்ள (geo thermal ffuids) போரானையும் பல வித வேதியியற் பொருள்களையும் பெறுவது குறிக் கோளாக அமைந்தது. வெப்பப் பரிமாற்றிகளைப் (heat exchangers) பயன்படுத்தி, சுழலிகளில் தூய பாய்மங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் வேதியி யற் பொருள்களின் மதிப்புக்குறைந்த போதும், அரித் தல், உராய்வு ஆகியவைகளை எதிர்ப்பதற்கேற்ற கட்டு மானங்களைக் கொண்ட மேம்பட்ட பண்புகளைக் கொண்ட சுழலிகள் உருவாக்கப்பட்டதனாலும், இடைநிலை வெப்பப் பரிமாற்றிகளைப் (inter- mediate heat exchangers) பயன்படுத்தும் நிலையங்கள் இடைநிலை வெப்பப் பரிமாற்றிகளுக்குப் பதிலாக நேரடியாகவே நீராவியினை உட்கொள்ளும் சுழலிகள் (direct intake turbines) பயன்படுத்தப்பட்டன. நேரடியாகவே நீராவியினை உட்கொள்ளும் சுழலி களைக் குறைந்த செலவில் கட்ட இயலும். மேலும் வெப்பப்பரிமாற்றிகளில் இழப்புகள் இல்லாமையி னால், ஓர் அலகு நீராவிக்கு மிகுந்த அளவு திறனை ஆக்கம் செய்யலாம். - வளிமண்டலத்திற்கு நேரடியாக வெளியேற்றம் செய்யக் கூடிய சிற்றளவு (1.5 இலிருந்து 5 மெகா வாட் வரை) மின்திறன் சுழலிகளை அமைப்பது இத்தாலியில் மற்றுமொரு புது முறையாக அமைந் தது. புதிய வயல்கள் உருவாக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், தனித்தனிக் கிணறுகளில் இத்தகைய அமைப்புகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. பின் அழுத்தமுடைய சுழலிகளைப் பயன்படுத்துவதன் சில நன்மைகள் கீழே வருமாறு. முதலாவதாக, இச் சுழலிகள், கார்பன் டை ஆக்சைடு போன்ற நீர்ம மாகாத வளிமங்களுக்குப் (non condensable gases ) பதிலாகப்பேரளவில் நீராவியைக் கையாளும். புதி தாகத் திறக்கப்பட்ட ஒரு வயலில், இந்தக் கார்பன் - டை - ஆக்சைடின் அளவு அவ்வயலில் பெறப்படும் வளிமங்களின் எடையில் 30 விழுக்காட்டிற்கும் மிகும். இவ்வாறாகத் தேக்கத்தின் மேற்பகுதியிலமைந்து நீண்டகாலமாகச் செறிவூட்டம் பெற்ற வளிமம் வெளி யேறுகின்றது. மேலும் நீர்மமாகாத வளிமங்களுக் கும், நீராவிக்குமுள்ள விகிதம் ஒரு குறிப்பிட்ட அளவு வரை மேம்படுத்தப்படுவதனால் வழக்கமான நீராவி செறியும் சுழலிகளில் (conventional condensing tur- bines) இதனைப் பயன்படுத்த முடிகின்றது. இரண் டாவதாக, நிலவெப்பத்திறன் ஆக்கம் செய்வதற்கான