உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 ஆற்றல்‌, நிலவெப்ப

488 ஆற்றல், நிலவெப்ப நியூசிலாந்து நாடு நன்கு பெற்றுள்ளது. எரிமலைத் தொடர்களின் மையக் கூட்டத்திற்கும் (மலை ரபியூ, மலை என்காருஹோ, மலை டாங்கரீரோ - Mount Ruapehu, Mount Ngauruhoe and Mount Tongariro) பிளென்ட்டி வளைகுடாவில் வெள்ளைத் தீவு எரி மலைக்கும் (White Islan Volcano in the Bay of Ple- nty ) இடையில் வடக்குத் தீவின் குறுக்காக 250 கி.மீ. நீளத்திலும், 50 கி.மீ. அகலத்திலும் ஒரு நில வெப்ப வளாகம் அமைகின்றது (படம் 1). இந்த வளாகத் துள் பல்வேறுபட்ட வெப்ப இயக்கங்களைக் காண வாம். அவையாவன, நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்றுக்கள் (geysers), உயர் வெப்ப நிலையில் வளிமங்களையும் ஆவிகளையும் வெளிவிடும் எரிமலைப் பகுதியிலுள்ள துளைகள் (fumaroles), வெப்ப நீர் ஊற்றுக்கள் (hot springs ) கொதிக்கும் சேற்றினைக் கொண்ட குளங்கள் (pools of boiling mud) ஆகும். பலவிதச்செயற்படும் பகுதி களில் வைரகி பகுதியும் ஒன்றாகும். இப்பகுதியி லுள்ள நீரைக் கொண்ட படுகைகளின் (aquifers ) வெப்பநிலை 300. செ. இற்கும் மேலானதாகும். வானிலிருந்து காணும்போது கிடைக்கும் வைரகி பள் ளத்தாக்கின் தோற்றம் படம் 2 இல் காட்டப்பட் டுள்ளது. யாக நிலத்தில் தோண்டப்பட்ட 60 துளைகள் வழி நீராவி, மின்நிலையத்திற்கு வழங்கப்படு கின்றது. இவற்றில் பாதித் துளைகள் உயர் அழுத்த நீராவியினை 12 kscm (சதுர சென்ட்டி மீட்டருக்கு ஒரு கிகி) அழுத்தத்தில் வெளியேற்றுகின்றன. மற் றவை இடைப்பட்ட அழுத்தமான 5 ksem அழுத்தத் தில் நீராவியை ஆக்கம் செய்கின்றன. ஆய்விற்குத் தேவையான துளைகளுடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட துளைகள் தோண்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீரினைப் பெரிய அளவில் பயன்படுத் தத் தொடங்கும்போது, எல்லாத் துளைகளிலிருந்தும் வெளியீடு மெதுவாகக் குறைந்து கொண்டேவரும். அதே போன்று வைரகி வயலிலும் அதன் வெளியீடு குறையலாயிற்று. ஆக்க அளவு மென்மேலும் குறைந்து கொண்டேவருகின்றது. ஆனால் மின் திறன் வெளியீடு குறையவில்லை. கிணற்றின் தலைப் பகுதியில் அழுத்தத்தினைக் குறைக்கும்போது, பெரும் பொருண்மையுள்ள நீராவியினைப் பெறலாம். இந்த நீராவியுடன் வெப்ப நீரினைப் பயன்படுத்தும்போது மின்நிலையத்தின் வெளியீட்டைக் குறையவொட்டா மல் நிலைநிறுத்தலாம். மிகவும் குறைந்த ஆக்க அள வினைக் கொண்ட உயர் அழுத்தத்துளைகளில், அழுத்தத்தினை இடைப்பட்ட அளவுக்குக் குறைத்து இடைப்பட்ட அழுத்த அமைப்பினுடன் (intermediate pressure system) இணைத்துள்ளனர். அறிவியல் அறிஞர்கள் வைரகி வயலில் நிலத்தடி நிலைக்கான தோற்றத்தினை உருவாக்கியுள்ளனர். இது பரந்த அளவில் வெப்பத்தால் பிளவுண்டபாறை களில் ஆயிரக்கணக்கான மீ ஆழம் வரை, பல கிலோ மீட்டர் அகலத்தில் நீர் நிரம்பப் பெற்றிருப்பதை யும் எரிமலையின் தீவிர இயக்கத்தின் காரணமாகப் பத்து லட்சம்ஆண்டுகளாக ஏற்பட்ட விளைபொருள் களையும் கொண்டுள்ளதைக் காட்டுகின்றது. இந்தப் பரப்பில் பெரும் பகுதியில் நீரானது தரையிலிருந்து மெதுவாகக் கீழே கசிந்தொழுகி வெப்பப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறாகக் கீழ் இறங்கியுள்ள நீருக்கு மூலமாக மழைநீர் அமைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. கொண்ட இவ்வாறாக, வெப்ப நீர்த் தேக்கம் (hot water reservoir) அமைந்து நீண்ட நாள் வரை இருப்பதற்கு வாய்ப்பு உண்டாகின்றது. ஆனால் இதற்கென தொடர்ந்த அறிவியல் விழிப்பும் பேரளவு ஆய்வும் தேவையாகின்றன. நெடுந்தொலைவில் அமைக்கப் பட்ட துளைகளுக்கிடையே நேரடிக் குறுக்கீடு ஏதும் அமைவதற்கான சான்றில்லை. துளைகள் ஓரளவில் அண்மையில் இருக்கும்போது கூடப் பெரிய பிளவுகளிலிருந்து நேரடியாக ஊட்டப்படும்போது ஒன்றின் மீது மற்றொன்று செயலாற்றுவதில்லை. ஆனால் ஊடுருவ இடந்தரும் இயல்புடைய தரை யினைக் கொண்ட இடங்களில் ஓரளவு அண்மையி லமைந்த துளைகள் ஒன்றின் மீது மற்றொன்று செயலாற்றுவதாய் உள்ளன. நுண்துளைகள் தரையின் மீது 30 மீ இடைவெளி தாலைவிலமைந்த இருதுளைகளில் செய்யப்பட்ட சோ தனைகளில் ஒரு துளை மற்றொன்றுடன் சிறி தளவே எதிர்விளைவினைக் கொண்டுள்ளதென்றும் ஒருதுளையினை மூடியவுடன் மற்றொரு துளையின் வெளியீடு 10 விழுக்காடே கூடுதலாக உயர்கின்ற தென்றும் அறியப்பட்டது. ஆனால் பிளவுண்ட அமைப்பில் ஊடுருவும் 20 மீ இடைவெளியிலமைந்த இருதுளைகள் ஒன்று மற்றொன்றைப் பாதிப்பதாய் அமையவில்லையென்றும் கண்டறியப்பட்டது. ஒன் றுடன் மற்றொன்று அருகில் அமைந்த துளைகளுக் கிடையில் அடிப்புறமாக நேரடித் தொடர்பு அமை கின்றது. ஆனால் அதன் காரணமாகத் துளைகளின் வெளியீடு குறைவதில்லை. ஆழத்தில் அழுத்தக் குறைவும் வெப்பநிலைக் குறைவும் 4 சதுரக் கி.மீ புறப் பரப்பளவில் நிலச் சரிவும் எல்லா நீராவி வயல் களிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. அழுத்த மும், வெப்பநிலையும் மிகவும் குறைந்தபோதிலும் முழு அளவிலான வெளியீடு பல ஆண்டுகள் வரை யிலும் தொடரும் என்றே பொதுவான அறிகுறிகளி லிருந்து காணப்படுகின்றது. துளைகளிலிருந்து வெளிவரும் மிகுந்த அளவு வெப்பநீர் வீணாக்கப்பட்டாலும் துளைகளின் வெளியீட்டின் முதன்மையான மூலமாக இவ் வெப்ப நீர் அமைகின்றது. வெளியீட்டின் மொத்த எடையில், 80 விழுக்காடு எடை வெப்ப நீராக