உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மருமக்கள்வழி மான்மியம்

அப்பன் மரணம் அடையுங் காலம்
எமவே தனைகள் இல்லா தாக்கவும்,
சிந்தை சிவனடி சேரச் செய்யவும்,
செந்தமிழ் மறையாந் திருவா சகத்தைப்
பக்க மிருந்து படிக்க அறியா 140
மக்கள் படிப்பை வையகம் மதிக்குமோ?[1]
நாஞ்சி னாட்டில் நல்லஆண் பிள்ளை
இல்லா ததனால் இப்படி யாச்சுது!
மலையா ளத்தில் வரைந்திடும் கோர்ட்டு
சமன்ஸுவந்தால் சரியாய்ப் படித்துக் 145
காட்டுவ தோபெருங் காரியம் அம்மா!
ஈசன் கழலுக்கு எமையா ளாக்கும்
புண்ணிய நூல்களைப் புறக்கணித் திடுதல்
அறிவோ? அழகோ? ஆண்மையோ? அம்மா!
பண்டு தொட்டுப் பரம்பரை யாக 150
முன்னோர் வைத்த முழுமணிப் பூணெலாம்
ஆசை யோடணிந்து அழகுபா ராமல்.
பாசிக் காகவும் பளிங்குக் காகவும்


  1. 136-141. பெரியவர்கள் இறந்து போகும்போது, அவர்களுடைய மனம் ஆண்டவனுடைய திருவடிகளை நினைக்கச் செய்யும் பொருட்டு, அருகிலிருந்து யாரேனும் திருவாசகப் பாடல்களை ஓதுவது இன்றும் தமிழ்நாட்டிலே பெரு வழக்காயுள்ளது. தனது மகன், தந்தையின் மரண காலத்தில் அருகிலிருந்து திருவாசகம் வாசிக்கக்கூட முடியவில்லையே. அவன் பள்ளிப் படிப்பு அவ்ளைவு பயனற்றதாய்ப் போய்விட்டதே என்று அதை அப்பெண் நிந்தித்துக் கூறுகிறாள். இந்த நிலைமை இக்காலத்தில் மாறிவிட்டது; நாஞ்சில் நாட்டில் மட்டுமன்றி, மலையாள நாட்டிலும்கூட, சில இடங்களில் தமிழ்ப் பாடசாலைகள் நடந்து வருகின்றன.