உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைதாங்கி

அலைதாங்கி பெ. அலையைத் தடுக்கும் செய்கரை. (செ.

ப. அக.)

அலைதாடி

பெ. மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி. (நாட். வ.)

அலைதாரை பெ. நீர்ப்பெருக்கின் அளவினை அறியக் கூடியவாறு நீர் அலைகளால் உண்டாகிய அடையாளம். (பே.வ.)

அலைதிகுலைதி பெ. குலைந்திருக்கை. மயிர்முடி அலைதிகுலைதியாய்ப் பேணாதே போகப் பொக் கையாய் இருப்பாள் ஒருத்தியோடே (பெருமாள்தி. 6,3 வியாக்.).

அலைநீர் பெ. கடல். அலைநீர் ஆடைமலை முலை யாகத்து (சிலப். 5, 1).

அலைப்பி பெ. இங்கு மங்குமாக ஊசலாடச் செய்யும் கருவி. (கலை. அக. 3 ப. 52,

அலைப்பு பெ. 1. அசைக்கை. (சங். அக.) 2. வருத்தம். அரிய செய்கையில் அவனியில் விழுந்தெழுந்து அலைப்புறும் மனைவாழ்க்கை (பெரியபு. 72, 29).

அலைமகள் பெ. (பாற்கடலைக் கடைந்தபொழுது எழுந்த) திருமகள். அலைமகள் அழகினை அசோகு அணிந்தவே (பிரமோத். 7, 26). அலைமகள் முத லாம் அரிவையர் பரவ (மெய்க். பாண்டியர் 20, 22).

அலையல்1 பெ. 1. அலைந்து திரிகை. அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே (தாயுமா. 43, 321). 2. சோர்வு. புணர்ச்சி அவதிக்கண் அப் புணர்ச்சி அலையலால் வந்த சிறுதுயிலை

(பதிற்றுப். 50, 18-21 ப. உரை).

அலையல்' பெ. சோம்பல். அலையல் அலைதல் ஆல சியம் (நாநார்த்த. 824).

அலையியக்கம் பெ. (அறிவியல்) காற்றில் ஒலி, ஒளி

யலைகள் இயங்கும்

இயக்கம். அலையியக்கமும்

ஒளியும் (அடிப். பௌதி. பட்டவகுப்பு ப.288).

அலையியல் பெ. (அறிவியல்) ஒலி, ஒளி முதலியவை நீர்த்திரை போல் பரவும் தன்மை. (முன்.)

அலையெறி-தல் 4 வி. வெகுதூரம் பரவுதல். கிருட்டிண

னுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலும்

420

அலைவு

சென்று அலையெறியும்படியா யிருக்கை (திருப்பா. 1 மூவா.). அலையெறியும் காவேரியாற்றுப் படைக்கு (குலோத். உலா. 15).

அலையேறு பெ. அலையெறியும்

...

கடல். என் தாபம்

ஆறும்படி அலையேற்றிலே கொண்டுபோய்ப் போகட வல்லிகோளே என்னும் (திருவாய். 7, 2, 2 ஈடு).

அலைவரைவி பெ. அலையளவி, ஒலியலையை அளக்கப் பயன்படும் கருவி. (கலை. அக.1 ப.33)

அலைவலைமை

(அலவலைமை) பெ. மனத்தில் தோன்றியதை ஆராயாமல் செய்யும் தன்மை. சிசு பாலன் தன்னை அலைவலைமை தவிர்த்த அழகன் (பெரியாழ்.தி. 4, 3, 5).

அலைவன் பெ. படரும் தன்மையுள்ள சிறிய பூனைக் காஞ்சொறி (பச்சிலை. அக.)

அலைவாங்கி பெ. ஒலி, ஒளி அலைகளைவாங்கி, ஒலி ஒளி பரப்பும் தொலைக் காட்சிக் கருவிக்குத்தரும் ஒரு கருவி. (கலை. அக.3 ப.86)

முருகன்

அலைவாய்1 பெ. கடற்கரையோரத்திலுள்ள தலமாகிய திருச்செந்தூர். உலகம் புகழ்ந்த ஓங் குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே (முருகு. 124-125). திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேயொடு உற்ற சூளே (அகநா. 266, 20-21). திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய் (தொல். பொ. 114 நச். எ-டு ). அலை வாய்க் கரையின் மகிழ்சீர்க்குமர (திருப்பு. 895).

அலைவாய்' பெ. கடற்கரை. திரைகளிட்ட வெண் மணலையுடைய அலைவாயிருப்பில் பலவகைக் கூலமும் குவித்த மறுகில் (சிலப். 6,131-132 அடியார்க் )

அலைவாய்க்கரை பெ. கடற்கரை. (வட். வ.)

அலைவாழ்வு பெ. கடல் வாழ்க்கை. மகரம் தகாது அலைவாழ்வு என்ன வாரி சுட்டாய் (திருவரங்.

அந். 65).

அலைவிரிசல் பெ. சுருளும் அலை. (செ. ப. அக.)

அலைவு பெ. 1. அசைகை. மடவார் விழிஅனலின் கொழுந்தொடு மின் இவைக்கெல்லாம் அலைவு கற்பித்து (ஞானவா. வைராக். 88). 2. வருத்தம்.