8
பாலஸ்தீனம்
நகரத்தை மட்டும் தனி ஜில்லாவாகப் பிரித்து, ஒரு டிப்டி ஜில்லா கமிஷனரின் மேற்பார்வையில் விடப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தின் தலைநகரம் ஜெருசலேம். இங்கு கிறிஸ்தவர்களுக்குப் புனிதமான ஒரு தேவாலயமும், முஸ்லீம்களின் முக்கிய மசூதியொன்றும், யூகர்களின் ‘அழுகைச் சுவரும்’ சரித்திரப் பிரசித்தமான சின்னங்களாக இலங்குகின்றன. உலகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் மிகப் புராதனம் வாய்ந்த தேவாலயம் பெத்ல்ஹெம் என்ற நகரத்தில் இருக்கிறது. நாஜரெத் என்ற நகரத்தில்தான் கிறிஸ்து நாதர் தமது இளமையைக் கழித்தாரென்று விவிலிய நூல் கூறுகிறது.
பாலஸ்தீனத்தின் முக்கிய துறைமுகங்கள் இரண்டு. அவையே, ஜாபா, ஹைபா என்பன. இரண்டும் செயற்கைக் துறைமுகங்கள்தான். ஹைபா துறைமுகம் 1933ம் வருஷந்தான் கட்டி முடிக்கப் பட்டது. மோசூல் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குழாய் வழியாக இந்தத் துறைமுகத்திற்கு பெட்ரோல் கொண்டு வரப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
பாலஸ்தீனத்தில் பேசப்படுகிற முக்கியமான பாஷைகள் மூன்று. அவையே இங்கிலீஷ், அரபு, ஹீப்ரூ.