26
பாலஸ்தீனம்
இத்தகைய பிரசாரஞ் செய்யப் படுகின்றனவாவென்ற நுணுக்கங்களைப் பற்றி நாம் இங்கு ஆராய வேண்டுவதில்லை.
பாலஸ்தீனத்தில் தேசீய இயக்கத்தோடு, மத உணர்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மதத் தலைவர்களும், இவர்களுக்கு அநுசரணையாயிருக்கிற சில நிலச் சுவான்தார்களும், முதலாளிகளும், இந்த இயக்கத்தின் தலைவர்களாயிருக்கிறார்க ளென்பது உண்மைதான். எந்த ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிய இவர்களுடைய உழைப்பின் பயனாகத் தாங்கள் பணஞ் சம்பாதிக்கிறார்களோ, அந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் யூதர்களோடு தொடர்பு கொண்டு விட்டால், தங்களுடைய செல்வாக்குக் குறையுமே யென்ற எண்ணம் இந்த அராபிய நிலச் சுவான்தார்களுக்கும். முதலாளிகளுக்கும் இருக்கலாம். இதற்காக இவர்கள், ஏழை விவசாயிகளை அச்சுறுத்தியோ, வேறு விதமாக நெருக்கியோ தேசீய இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு செய்திருக்கலாம். இந்த மாதிரியான உதாரணங்களை ஏக தேசமாகத்தான் காட்ட முடியும். ஆனால், பொதுவாகப் பார்க்கிற போது, பாலஸ்தீன அராபியர்கள் தேசப் பற்று நிரம்பியவர்கள். தேசம் ஒன்று தான் இவர்களுக்குத் தெரியும். அரசியல் சம்பந்தமான நுணுக்கங்கள் இவர்களுக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளவும் இவர்கள் விரும்புவதில்லை. தேசத்திற்காக, தங்கள் தலைவர்கள் சொல்கிறபடி எதையும் செய்ய இவர்கள் சித்தமா யிருக்கிறார்கள். அரசியல்