உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்தி-த்தல்

900

அர்த்தி -த்தல் 11 வி. 1. வேண்டுதல். இவர்கள் அர்த் திக்க இந்தப் பிரமாண இசைவு எழுதினேன் (தெ.இ.க. 12, 224). எம்பெருமானாரை அர்த்திக் கிறது இதில் (பெரியதி. தமிழாக். 4 தனி. அவ.). 2. யாசித்தல். (சங். அக.)

அர்த்தி-த்தல் 11 வி. இரண்டு சம பாகங்களாகப் பிரித் தல். (செ.ப.அக. அனு.)

அர்த்தி3 பெ. யாசகன். அவர்கள் கொள்ள வல்லராந் தனையும் அர்த்திகள் ஆமளவும் (திருப்பா. 24 மூவா.).

அர்த்திவாதம் பெ. (மருத்.) மூளையிலிருந்து முகத் துக்கு வருகிற நரம்பு வலியிழத்தலால் வரும் முகவாத நோய். (பைச.ப.300)

அர்த்தோதயபுண்ணியகாலம்

(பே.வ.)

அர்த்தோதயம் பெ.

பெ.

அர்த்தோதயம்.

தை அமாவாசையும் ஞாயிற்றுக் கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரி யோதய புண்ணிய காலம். மாசிமகத்தில் அர்த்தோ தயத்தில் (அருணா.பு. 9, 24).

அர்ப்பணம் பெ. தன் ஆற்றல் முதலியவற்றை மற்ற தற்கு உரியதாக்குகை. பிரமார்ப்பணமாங் கரும் பலம் விடல் சந்நியாதம் (ஞானவா. உபசாந்தி. அருச்சு. 15). உன்றன் திருவருட்கெனை அர்ப்பணம் செய் தேன் (பாரதி. தோத்திரம், 36).

அர்ப்பணி-த்தல் 11 வி. (ஒரு பொருளைத் தெய்வத் துக்கோ தக்காருக்கோ நாட்டிற்கோ) உரித்தாக்கு தல். துறவிகள் கடவுளுக்கு அர்ப்பணித்த பின்பே ஏற்றுக்கொள்வர் (பே.வ.). தொழி லமைச்சர் இரும்புத்தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் (செய்தி.வ.).

உணவை

அர்ப்பம் பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அர்ப்பாயம் (அர்ப்பீடம்) பெ. அருளில்லாதாரைத் தலைமக்களாகக் கொண்டு புனையும் நாடகம். (வீரசோ.

106 2.600)

அர்ப்பி-த்தல் (அற்பி-த்தல்) 11 வி. உரியதாக்குதல்.

(சங். அக.)

அர்ப்பிதம் (அறிப்பிதம்) பெ. உரியதாக்குகை. அத் தகை மேலோற்கே செவ்வயின் அர்ப்பிதமாக (பிர

315

அரக்கம்

போத.18,25). மாமிசம் நிவேதனம் சக்திகட்கு அர்ப்பிதமாகாவிடினும் (கொலைமறு. 11 உரை).

அர்ப்பீடம்

(அர்ப்பாயம்) பெ. அருளில்லாதாரைத் தலைமக்களாய்க் கொண்டு புனையும் நாடகம். (வீரசோ. 106 உரை)

அர்ப்புதம் 1 பெ. பத்துக் கோடி என்ற பேரெண். (சுக்கிர நீதி 2,390)

அர்ப்புதம்' பெ. பாம்பு. (சங். அக.)

அர்ப்புதம்3 பெ. மாமிசமொத்தை. (முன்.)

அர்ப்புதம் + பெ. மேகம். (முன்.)

அர்வதா பெ. சதாப்புச் செடி.(குண.1 ப.38)

அர1 பெ. (அரவம்! அரவு' அரா1 அராவு') பாம்பு. இருவிசும்பு அதிர முழங்கி அர நலிந்து (அகநா. 274, 1). அரவாழ் புற்றம் ஒழிய (நற்.325, 4).அரவழங் கும் பெருந்தெய்வத்து (பதிற்றுப். 51,13). மணிமுடி மேல் அரவைத்தார் (தேவா. 6, 14, 7). ஆடரப்பூண் உடைத்தோல் பொடிப் பூசிற்று (திருவாச. 17, 4). பை அரவிழுங்கப்பட்ட பசுங்கதிர் மதியம் (சீவக. 1540).உள்வாழ் அரக் கொடு எழு திண்கலுழன் ஒத்தாள் (கம்பரா. 5, 1, 83).

அர2 பெ.

அரகர என்னும் முழக்கம். அரவெனும் பணிவல்லவன் ஞானசம்பந்தன் (தேவா. 2, 110, 11). அரவொலி ஆகமங்கள் (முன்.7,100,8). திருவும் இமையவர் தருவும் அர ஒலிசெய (மீனா.

LIGT. 4).

அரக்கம் 1. பெ. அரக்கில்

அரக்கத்தன்ன

ஒருவகையான செவ்வரக்கு. நுண்மணற்கோடு 'கொண்டு

(பதிற்றுப். 30,27). அரக்கத்தன்ன செந்நிலப் பெரு

வழி (அகநா. 14, 1).

அரக்கம் 2 பெ. அகில். (சங். அக.)

அரக்கம்' பெ. நன்னாரி. (முன்.)

அரக்கம் + பெ. திருநாமப்பாலை என்னும் செடி. ( வைத்.

விரி.

அக. ப. 21)

அரக்கம்' பெ. எருக்கு. (முன்.)

அரக்கம்' பெ. குருதி, இரத்தம். (செ.ப. அக.)