உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

45


தாயே! பற்பல வகையிலும் பயன்படுத்தப்படும் நறுமணம் மிக்க சந்தனக் கட்டை மலையில்தான் வளர்கிறது; ஆனால், அது அங்கு வளர்ந்தாலும், அது தன்னை அறைத்துப் பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லது, பிறந்த மலைக்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை. நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே.

தாயே! தலைசிறந்த வெண்முத்துக்கள் கடல் நீரில்தான் பிறக்கின்றன; ஆனால், அவை அங்கே பிறப்பினும் அவை, தம்மை ஆரம் ஆக்கி அணிந்து கொள்பவர்க்கு அழகு தருவதல்லது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையிலும் அழகு தருவதில்லை. ஆராய்ந்து பார்த்தால், உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.

தாயே! ஏழுவகையாக எழும் இனிய இசை, யாழில்தான் தோன்றுகிறது; ஆனால், அது தன்னைக் கேட்டு நுகர்வார்க்கு இன்பம் தருவதல்லது, தான் தோன்றிய யாழிற்கு எந்த வகையிலும் இன்பம் தருவதில்லை; ஆராய்ந்து நோக்கினால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.

ஆகவே, தாயே! சிறந்த கற்பு நெறியை மேற்கொண்டவளாய்க் காதலனோடு காட்டு வழியில் போய்விட்ட உன்மகள் குறித்து வருந்தாதே; அவள் தலைசிறந்த ஒருவனைத் தன் கணவனாக ஏற்றுச் சென்றுள்ளாள்; அது மட்டுமன்று; அவள் செயல் உலகியல் அறத்தோடு ஒட்டியதும் ஆகும்.

எறித்தரு-எறித்தலைச் செய்கின்ற. கரகம்-கமண்டலம். முக்கோல்-முத்தலைக்கோல். நெறிப்பட-முறையாக. சுவல்-தோள். ஓரா-நினையாத. குறிப்பு ஏவல் செயல்மாலை-ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாகப் பெற்ற. கொளை-கொள்கை. நடை-ஒழுக்கம். வெவ்விடை-கொடிய இடங்கள். செலல்மாலை-செல்லுதலை இயல்பாக உடைய. கடம்-பாலை நிலத்து வழி. போறீர்-போல இருந்நீர், படுப்பவர்-பூசிக் கொள்வார். தேருங்கால்-ஆராயும்பொழுது. முரல்பவர்-பாடுவார். இறந்த-மிக உயர்ந்த. எவ்வம்-வருத்தம். படரன்மின்-கொள்ளற்க. அறம்தலை-தலையாய அறம். பிரியாஆறு-பிரியாது வாழும் வழி.


9.செலவு ஒழிந்தனன்!

பொருளீட்டும் கருத்தோடு மனைவியைப் பிரிந்து போகக் கருதினான் ஓர் இளைஞன். அஃதறிந்த அவன் மனைவியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/46&oldid=1737222" இலிருந்து மீள்விக்கப்பட்டது