உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 "காங்கிரஸ் கவிழ்ந்துவிடப் போகிறது. எதிர்க் கட்சி களுக்குத்தான் சான்சு. அதிலே இருந்தால்தான் நமக்கு ஒரு மந்திரி வேலைகிடைக்கும் என்கிற ஆசை மனுஷனைப் படாத பாடு படுத்திற்று-பிறகோ, காங்கிரஸ், பீடத்திலே உட் கார்ந்து கொண்டது. ஆசாமிக்குச் சப்பிட்டுவிட்டது-இனிக் காங்கிரசிலே சேர்ந்தாத்தான் ஏதாச்சும் துண்டு துணுக் காவது கிடைக்க முடியும் என்கிற எண்ணம் ஏற்பட்டது- இப்போது, எங்கள் மந்திரி! எங்கள் மந்திரி! என்று மங்களம் பாடுகிறார்! பதவிப்பித்தம் இருக்கே, அடே அப்பா! ஆட்டிப் படைக்குது133 "பெரிய வீராதிவீரர்போலே பேசி வந்தார், காங்கிரஸ் பதவிக்கு வராது என்கிற தைரியத்திலே! இப்போது ஒரே பயம் பிய்த்துத் தின்னுது. எதிர்க்கட்சியிலே இருந்தா ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லே என்கிற பயம் வந்து விட்டது. எனவே சரணாகதிப் படலம் ஆரம்பமாகிவிட்டது பலர் பலவிதமாகப் பேசாமலிருந்திருக்க இப்படிப் முடியுமா? இவ்வளவு சாவதானமாகவும் அமைதியாகவும் பேச முடி யாதவர்கள், சுருக்கமாகப்பேச, சுடு சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும். கோழைத்தனம்-பதவிப்பித்தம் - சுய நலவெறி என்பனபோன்ற பட்டங்களைச் சூட்டியிருக்கக்கூடும். இது பற்றி ஏதோ ஓர் அளவுக்குத் தெரிந்ததால் தான், அமைச்சர் சுப்ரமணியம், ராஜா சிதம்பரத்தின் போக்கை ஆராய்ந்திட வேண்டிய அவசியம் வந்தது. அந்த அறிஞர் பெருமானின் அபார ஆராய்ச்சியின் முடிவு யாதெனின், ராஜா சிதம்பரம் காங்கிரசிலே வந்து சேர்ந்தது கோழைத்தனமாகாது, அது தான் வீரம் என்பதாகும். காட்டிக்கொடுத்தவர் - கட்சி மாறியவர் - என்றெல்லாம் கண்டிக்கிறார்கள் ஊரார், இதோ ஒரு 'கனம்' வருகிறார். வாழ்க வீராதி வீரனே! என்று வாழ்த்துகிறார், விருதளிக் கிறார். பொதுமக்கள், ராஜா சிதம்பரத்தின் போக்கை, எப்படி வரவேற்றனர், எத்தகைய தீர்ப்பளித்தனர், என்பது மாவட்ட ஆட்சிமன்றத் தேர்தலில் தெரிந்தது. மிகமிகச் சாமான்யர் தர்மு, நமது கழக மாவட்டச் செயலாளர், அவர் தூக்கி அடித்தார் இந்த கிங்காங்கை! இப்போது குப்புற விழுந்தவருக்குத் தங்கத் தோடா தருகிறார், அமைச்சர்! நல்ல ஜோடி! பொருத்தமான கூட்டாளிகள்! அமைச்சர் ராஜா சிதம்பரத்தைப் பாராட்டி, வீரராக்கி, உபசரித்ததுடன் இருந் திருந்தால் நமக்கு வேலையே எழாது, அமைச்சர் அத்துடன்