உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142 தரு மூலமாகவும் 6 பேரை நியமிக்கிறார்கள். இன்ஷ்யூரன்ஸ் ஸ்தா பனங்கள் கூட்டுறவு பாங்குகள் முதலியவை மற்றவர்களைநிய மிக்கின்றன. எல்லோரும் பெரிய ஆசாமிகள். கடன் வதோ அயனான சொத்தின் ஆதாரத்தின் மீது. அதன் மதிப் பில் 60% அளவுக்குத்தான். இந்த ஸ்தாபனம் சரிவர நடை பெறாமல் சர்க்கார் வருஷா வருஷம் பையை அவிழ்க்க வேண் டியிருக்கிறது என்றால், கடன் தரும் விஷயமாக வேறு துறை களில் சர்க்கார் பரவலாக செயல்படுவதற்கு முன் எவ்வளவு சிந்தனையும் ஜாக்கிரதையும் அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை" "தினமணி" கக்கிடும் தீச்சுடர்கள் இவை!! எப்படி இருக்கிறது காங்கிரசாட்சியிலே உள்ள நிர்வாக இலட்சணம். ஜீப்கார் ஊழல் டிராக்டர் ஊழல் உரபேர ஊழல் ரெடிமேட் வீடு ஊழல் இலண்டன் மாளிகை ஊழல் தம்பி, எந்தச் சர்க்காரும் வெட்கப்படக்கூடிய அளவு இருக்கிறது - வளர்ந்தும் வருகிறது, சர்க்கார். துணிந்து யாராவது இத்தகைய ஊழல்களை எடுத்துக் காட்டிக் கண்டித் தால், மூடி மறைக்கவும், மிரட்டி அடக்கவும், நேருவைக் காட்டி மயக்கவும்தான் முயலுகிறதே தவிர, இத்தகைய ஊழல்களை ஒழித்துக்கட்டத் துணிவும் கொள்ளவில்லை; அத்த கைய தூய எண்ணம் இருப்பதாகத் தெரியவும் காணோம். நேரு பண்டிதருக்கோ இவைகளெல்லாம் கடுகு! அவருடைய கண்ணோட்டம், உலக சமாதானத்தின்மீது ஆழப் பதிந்து விட்டதாம். இங்கே, நிர்வாகத்தில் ஊழல் நெளிகிறது; பொது மக்களின் பணம் விழலுக்குப் பாய்கிறது; ஜன நாயகம் கேலிக் கூத்தாக்கப்படுகிறது. 21 இலட்ச ரூபாயைச் சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்குக் கொட்டி அழுத இந்த அமைப்பு,இதுவரையில், 21 சோடி ரூபாய் கொடுத்திருக்கிறது-தொழில்களின் வளர்ச் சிக்கு!! என்னென்ன வளர்ந்ததோ! யார் கூறமுடியும்!! இந்த ஊழல்களில் நூற்றில் ஒரு பங்கு நடைபெற்றால் கூட, தம்பி, மற்ற ஜனநாயக நாடுகளில், மந்திரி சபைகள்கவி ழும், மக்கள் சீறி எழுவர்!! சீனா போன்ற நாடுகளிலே, ஊழ