உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

153 தஸ்துப் பெறுகிறார்கள்! துறவி இளங்கோ தமிழில் காவியம் இயற்றினார்- சிலம்பு ஒலிக்கிறது! இன்றையத் துறவிகளின் சன்னதியில், நூபுரம் கலீர் கலீரென நேத்திரம் சுரீல் சுரீலென பாத்திரம் பளா! பளாவென! தோத்திரங்கள் நடைபெறுகின்றன என்று கேள்விப்படு கிறோம். ஒருவேடிக்கை தெரியுமா, தம்பி! துறவி - தவசி -என்று இரு சொற்கள் கேட்டிருக்கிறோமல்லவா- முன்னது பெரிதும் தமிழகத்துக்கே உரிய தனிப்பண்புக்கு உறைவிடமாகவும், பின்னது ஆரிய கலாச்சாரத்தின் இருப்பிடமாகவுமே, ஆதி நாட்களிலேயே இருந்து வந்திருக்கிறது. இன்பமான வாழ்க்கையில் இருப்பதற்கான நிலை இருந்து, அதனைத் துறந்திடும் பெரியோன், துறவி! அத்தகைய துறவி களைத் தமிழகம் அந்நாளில் கண்டது. கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் வாய்ப்பும், கோகில மொழியாள் கொஞ்சிட, மஞ்சமதில் மிஞ்சு சுகம் பெறுவதற்கான வசதியும், நிரம்ப இருந்ததைத் துறந்தார் இளங்கோ அடிகள்! பட்டுப் பட்டா டையைத் துறந்து, காவி அணிகிறார்! வரி கட்டினாரா?கப்பப் பணம் தப்பின்றி வந்து சேர்ந்ததா? கரிப்படையில் குறைவே தேனும் உளதோ! வேற்படைத் தலைவனைக் காணோமே, எங்கே? - என்று கேட்டு அரச காரியத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலை இருந்தது, இதனைத் துறந்தார், செந் தமிழின் சிறப்பினை விளக்கிடும் சிலம்பு சமைத்தளித்த சீலர். கணிகையர் குலத்துதித்த மணிமேகலை, துறவுக்கோலம் பூண்டு மக்களின் பசிப்பிணிப் போக்கிடப் பாத்திரமேந்தி நின்றதுடன், மக்கள்தம் பவப்பிணி ஒழித்திடும் மார்க்கம் போதித்து வந்தது பற்றிப் படித்துப் பெருமிதம் கொள்கி றோம். துறவு இத்தகைய தூய்மைக்கு நிலைக்களனாக, தொண்டுக்கு வாய்ப்பாக, இருந்தது. எல்லாத் துறையிலும் செம்மை கண்ட நந்தம் நாட்டிலே தான்! ஆனால் ஆரிய பூமி யிலோ! தவசிகள் உண்டு! துறவிகளின் எண்ணிக்கையை விட மிக அதிகம்! துறவிகள் மனிதருள் மனிதராக, ஆனால் மாமனிதராக இருந்து வந்தனர்? ஆரியத் தவசிகளோ, மனித ருள் தெய்வங்களெனக் கருதப்பட்டு வந்தனர். காடு சுற்றியும் கானாற்றின் கீதம் கேட்டு இன்புற்றும், கல்சொல்லும் கவிதை யையும் காரிருளைப் போக்கிடும் மதிதரும் அன்புரையையும் மக்களுக்கு உய்யும் வழி கிடைத்தற்கான அறநெறியையும். அருளினர், நந்தம் நாட்டுத் துறவிகள் ! அடி வீழ்ந்து வணங் கி- மன்னர்களும், கேட்டபோது நவநிதி கொட்டித்தரக் காவலரும், ஆடிடும் அணங்குகளும், பாடிடும் பாவையரும், அக-10