உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

170 நாம்தான் கடவுள் ! மனித சக்தி மட்டற்றது. மனிதன் தன் தீயநினைவுகளைக் கட்டுக்குள்கொண்டுவரவும், களையவும் பழகிக் கொண்டால், விண்ணுல கு, மண்ணுலகில் மலரும். தன்னலத்தைத் தகர்த்தெறிவது; சாத்யமானதுதான். வரலாறு மனிதனுடைய பாதகச் செயலையும் தவறுகளையும் காட்டும் களஞ்சியம்தான் என்றாலும், மனிதகுல முன்னேற்றத் துக்குத் தடைகளாக உள்ளவைகளை மனிதனால் தகர்த்தெறிய முடிந்தது என்பதை விளக்கும் சம்பவங்களும் அதிலே சுடர் விட்டுக் கொண்டுள்ளன. அன்பு ! இதைத்தான் அனைவரும் உபதேசித்து வந்தனர். அன்பு காட்டுவது எளிதுதான்-வெறுப்பை மனிதன் சிரமப் பட்டு உள்ளத்தில் வளர்த்துக்கொண்டு வருகிறான். சிறிதளவு முயற்சி எடுத்துக்கொண்டாலும், அன்பு உள்ளத்தில் ஆட்சி புரியும். இப்போது சிறுபிள்ளைப் பருவமுதல், வெறுக்கக் கற்றுத் தரப்படுகிறது. அன்புடன் வாழவேண்டிய மக்களிடம், இனம், நிறம், நாடு, மதம் எனும் பல்வேறு காரணங்காட்டி வெறுப்பை ஊட்டி ஊட்டிக் கெடுக்கிறோம். அன்பு அரசோச்சினால் அவனியே சுவர்க்கமாகும். ஐயன் செய்து தருவார் என்று இராமல், மனிதன் முயற்சிக்க வேண்டும். அவனால் முடியும். அவன் வெற்றி பெறத்தான் போகிறான். சீனப் பெரியவர் சொன்ன சித்தாந்தத்தை பெட்டி, இவ் வாறு விளக்கியது, அந்தனிக்கு, ஓரளவு ஆறுதல் அளித்தது. கடவுள் பற்றி எவ்வளவு கருத்தற்ற கொள்கைகளை மனித குலம் கொண்டிருக்கிறது, என்பதைச் சீனப் பெரியவர் எடுத் துக் காட்டினார். இதையே இப்போது நாம் கூறும்போது சீலர் கள் சீறுகிறார்கள் - ஆதினங்கள் ஆத்திரமான கின்றன- ஆஸ் தீகர்கள்--அடி, உதை, என்றே கிளம்புகிறார்கள். 0 0 பெட்டி, பேசியது கேட்ட அந்தனி சிந்தித்தான். மன திலே புகுந்து விட்ட புனிதம் பற்றி அவன் பேசலானான். 'உடைமைகள் அனைத்தையும் விற்று, ஏழைகளுக்குக் கொடுத்து விடு என்றுஏசுநாதர் ஒரு இளைஞ நக்கு உபதேசித் தாரே, பெட்டி !ஏழைகளுக்காக அல்ல, அந்த இளைஞனுடைய நலனுக்காகவே ஏசு அதுபோல் கூறினார் என்று நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. ஏழைக்கு அந்த இளைஞன் தானம் தந்தால், ஏழையின் அல்லல் ஒரு கணம் துடைக்கப் படும். ஆனால் அந்த இளைஞனுக்குக் கிடைக்கும் பலனோ, மகத்தானது. அவன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை